Tuesday, 2 September 2014

அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திரா காந்தி சென்டர் பார் அடாமிக் ரிசர்ச் நிறுவனம் அணு ஆராய்ச்சிப் பிரிவில் புகழ் பெற்று விளங்குகிறது. சென்னையின் கல்பாக்கத்தில் இந்த நிறுவனம் 1971ல் நிறுவப்பட்டது. அணுசக்தி உற்பத்திக்கு பெயர் போன இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்., நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் பிரிவில் 7ம், மோட்டார் மெக்கானிக் வெகிக்கிள் பிரிவில் 4ம், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக் பிரிவில் 3ம், டிராப்ட்ஸ்மேன், பிட்டர் மற்றும் பிளம்பர் பிரிவுகளில் தலா 1ம், கார்பெண்டரில் 2ம், புரொகிராமிங் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அஸிஸ்டெண்ட் பிரிவில் 3ம் சேர்த்து மொத்தம் 22 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 16 வயது முதல் 22 வரை
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்புடன் ஐ.டி.ஐ.,யில் தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி தேவைப்படும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரரின் தகுதிகளை உள்ளடக்கிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் புகைப்படம், சான்றிதழ் நகல்கள் உள்ளிட்ட இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Administrative Officer-III, General Services Organisation, Department of Atomic Energy,
Kalpakkam - 603 102, Kancheepuram District. 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.09.2014
இணையதள முகவரி: www.igcar.ernet.in/recruitment/GSO_ACT_AD2014.pdf

No comments:

Post a Comment