Monday, 15 September 2014

சி.ஆர்.பி.எப்., துணை ஆய்வாளர் பதவி

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் சி.ஆர்.பி.எப்., என்பது மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் பிரதானமான ஒன்றாகும். இந்தப் படையின் துவக்கம் என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே இருந்த போதும், 1949 ஆம் ஆண்டிலேயே முறையான வடிவம் கொடுக்கப்பட்டது. தற்போது 60 ஆண்டுகளைக் கடந்து இந்தியாவின் உள் நாட்டு அமைதிக்கு முக்கிய காரணமாக திகழும் இந்தப் படை தேர்தல் போன்ற சமயங்களில் மிக முக்கிய கடமையை ஆற்றி வருகிறது. இந்த படையில் காலியாக உள்ள காலியிடங்கள் 175ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: சி.ஆர்.பி.எப்.,பில் ஸ்டாப் நர்ஸ் - துணை ஆய்வாளர் பிரிவில் 36ம், ரேடியோகிராபர் - துணை ஆய்வாளர் பிரிவில் 6ம், உதவி துணை ஆய்வாளர் - பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் 1ம், துணை ஆய்வாளர் - பார்மஸிஸ்ட் பிரிவில் 73ம், உதவி துணை ஆய்வாளர் - லேப் டெக்னீசியன் பிரிவில் 6ம், உதவி துணை ஆய்வாளர் - ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் பிரிவில் 1ம், உதவி துணை ஆய்வாளர்- டென்டல் டெக்னீசியன் பிரிவில் 6ம், தலைமைக் காவலர் - எக்ஸ் ரே டெக்னீசியன் பிரிவில் 4ம், தலைமைக் காவலர் - லேபரெட்டரி அஸிஸ்டென்ட் பிரிவில் 7ம், தலைமைக் காவலர் - ஏ.சி., பிளான்ட் டெக்னீசியன் பிரிவில் 1ம், தலைமைக் காவலர் - ஸ்டூவர்டு பிரிவில் 7ம், கான்ஸ்டபிள் - வார்டு பாய்/ கேர்ள் பிரிவில் 24ம் சேர்த்து மொத்தம் 175 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து உச்ச பட்ச வயது மாறுபடுகிறது. பெரும்பாலான பதவிகளுக்கு அதிக பட்ச வயது 25 எனவும், சில பதவிகளுக்கு 30 எனவும் உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பிரிவுக்கான வயது பற்றிய விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
கல்வித் தகுதி: ப்ளஸ்டூ அளவிலான படிப்புடன் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்பு கல்வித் தகுதியும் தேவை.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.50/-ஐ போஸ்டல் ஆர்டர் வாயிலாக IG(Med)/Med Supdt or DIG(Med)/Med Supdt என்ற ஏதாவது ஒரு பெயரில் விண்ணப்பிக்கும் மையத்திற்கு ஏற்றபடி எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் தேர்வு செய்யும் மைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.10.2014

No comments:

Post a Comment