ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள் கேட் (GATE 2015) தேர்வு வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்: 745. இதில் மெக்கானிக், சிவில், கெமிக்கல் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன.
வயது: டிரில்லிங்க், சிமெண்டிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க, 2015 ஜனவரி ஒன்று அன்று, பொதுப்பிரிவினர் 28 நிரம்பியவர்களாகவும், ஓபிசியினர் 31 வயது நிரம்பியவர் களாகவும், எஸ்சி, எஸ்டியினர் 33 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும். பிற பணி களுக்கு பொதுப் பிரிவினர் 30 வயதும், ஓபிசியினர் 33 வயதும். எஸ்சி,எஸ்டியினர் 35 வயதும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: கேட் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கேட் தேர்வுக்கு http://gate.iitk.ac.in/GATE2015/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட் தேர்வுக்கான கல்வித் தகுதி: பி.இ., பி.டெக், பி.ஆர்க்., பி.பார்ம்., பி.எஸ்சி, அல்லது எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.இ., எம்.டெக். போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஆண்களில் பொதுப்பிரிவினர், ஓபிசியினர் ஆகியோருக்கு ரூ. 1500, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 750. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
கேட் தேர்வில் கலந்துகொண்ட பின்னர் அந்தப் பதிவு எண்ணைக் கொண்டு http://www.ongcindia.com/என்னும் ஓஎன்ஜிசி இணையதளத்தில் ஜனவரி (மாறுதலுக்குட்பட்டது) முதல் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாள்கள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2014
விண்ணப்பம் நிறைவுபெறும் நாள்: 01.10.2014 (14.10.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது)
கேட் 2015 தேர்வு: 31.01.2015 – 14.02.2015
ஓஎன்ஜிசி விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 2015 (மாறுதலுக்குட்பட்டது)
கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 12.03.2015
நேர்காணல் தொடங்கும் நாள்: மே 2015 (மாறுதலுக்குட்பட்டது)
No comments:
Post a Comment