வெள்ளத்தால் அடித்து செல்லப்படாத அளவில் குறைந்த விலையில் வீடு கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்த இந்தியருக்கு 'நாளைய தலைவர்' பட்டம் அளித்துள்ளது 'டைம்' நாளிதழ்
வெள்ளத்தால் பாதிக்கப்படாத அளவில் குடிசைவாழ் மக்கள் வசதிக்கேற்ப குறைந்த விலையில் வீடுகள் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்த இந்திய கட்டட வடிவமைப்பாளர் அலோக் ஷெட்டியை 'நாளைய தலைவர்' என்று பட்டம் அளித்து அமெரிக்காவின் 'டைம்' நாளிதழ் சிறப்பித்துள்ளது.
தங்களது பணியின் மூலம், நாளைய உலகை மாற்றுவதற்கான முயற்சிகளில் கடினமாக பணியாற்றும் 6 இளைஞர்களை தேர்வு செய்துள்ள 'டைம்' நாளிதழ், இது குறித்து கூறும்போது, "பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறக்கட்டளை நிறுவனத்தில் பணியாற்றி வந்த கட்டட வடிவமைப்பாளர் அலோக் ஷெட்டி, வெள்ளத்தால் பாதிக்கப்படாத குடிசை வீடுகளை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
மிகக் குறைந்த செலவில், மூங்கில் மற்றும் மரத்தைக் கொண்டு 4 மணி நேரத்திலேயே இந்த வீடுகளை உருவாக்க முடியும். இது வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் உருவாக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment