Thursday, 18 September 2014

வேலைவாய்ப்பு பதிவு ஒரு கோடியை நெருங்குகிறது: அரசு வேலைக்காக காத்திருக்கும் 94 லட்சம் பேர்

வேலைவாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் வரை சுமார் 94 லட்சம் பேர் பெயர்களை பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் களும், சென்னையில் 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங் களும் இயங்கி வருகின்றன. இதுதவிர சென்னை மற்றும் மதுரையில் 2 மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.
பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களிலும் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி பட்டப் படிப்புகளை சென்னை அல்லது மதுரையில் செயல்படும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவுசெய்ய வேண்டும். பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வந்தால் மட்டுமே பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.
ஒரு கோடியை நெருங்குகிறது
கடந்த ஜூன் 30-ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்தவர்களின் பட்டியலை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட் டிருக்கிறது. அதன்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்து 58 ஆயிரத்து 161. இதில் 48 லட்சத்து 32 ஆயிரத்து 235 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் பிற்படுத்தப்பட்டவர்களின் எண் ணிக்கைதான் மிகவும் அதிகளவில் (40 லட்சம்) இருக்கிறது. பதிவு செய்துள்ள பட்டதாரிகள் எண் ணிக்கை விவரம் வருமாறு:
கலை பட்டதாரிகள் - 4,05,483, அறிவியல் பட்டதாரிகள் - 5,48,417, வணிகவியல் பட்டதாரிகள் - 3,09,799, பொறியியல் பட்டதாரிகள் - 1,81,233.
மேலும் பி.எட்., முடித்த முது கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டி விட்டது. வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்துள்ளவர் களின் எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பதிவு தாரர்கள் அனைவரும் வேலையே இல்லாமல் இருப்பார்கள் என்று கருதிவிட முடியாது. காரணம், அவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றலாம் அல்லது சொந்தமாக தொழில் செய்யலாம். ஆனால், நிச்சயம் அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment