பாதுகாப்புப் படைகளில் மிகவும் முக்கியமானதும், நமது நாட்டை அச்சுறுத்தும் சவால்களுக்கு பதிலடியாகவும் திகழும் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் உயிரையே துச்சமாக மதித்து இந்த தேசத்தைக் காக்கும் படைவீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படை சர்வ தேச அளவில் அறியப்படுகிறது. இந்தப் படையில் யுனிவர்சிடி என்ட்ரி ஸ்கீம் முறையில் இன்ஜினியரிங் பிரிவில் 60 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: சிவில் இன்ஜினியரிங்கில் 30, மெக்கானிகலில் 12, எலக்ட்ரிகல், எலக்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்சில் 6, டெலிகம்யூனிகேஷனில் 6, ஆர்க்கிடெக்சரில் 2, கம்ப்யூட்டர் சயின்சில் 4 சேர்த்து மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளன.
வயது: தற்சமயம் இறுதியாண்டு இன்ஜினியரிங் படிப்பிற்கு முந்தைய வருடம் படிக்கும் மாணவர்கள். இவர்கள் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் இறுதியாண்டிற்கு முந்தைய ஆண்டு படிப்பை மேற்கண்ட பிரிவுகளில் படிப்பவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.09.2014
இணையதள முகவரி: http://indianarmy.nic.in/

No comments:
Post a Comment