Monday, 15 September 2014

செயில் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

செயில் என அழைக்கப் படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துர்க்காபூர் எஃகு ஆலையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியுள்ள ஐடிஐ முடித்தவர்கள், இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்தவர்கள், பட்டம் பெற்ற வர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் அக்டோபர் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ட்ரெயினியாகச் சேர்த்துக் கொள்ளபடுவார்கள்.
காலிப்பணியிடங்கள்: 267. இதில் ஆபரேட்டர் கம் டெக்னிஷியன் ட்ரெயினி பணிக்கு 154 பேரும், அட்டன்டெண்ட் கம் டெக்னிஷியன் ட்ரெயினி பணிக்கு 104 பேரும், மெடிக்கல் சர்வீஸ் புரொவைடர் ட்ரெயினி பணிக்கு 9 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வயது: 2014 ஆகஸ்ட் 1 அன்று 28 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படியான வயது வரம்புச் சலுகை உண்டு.
கல்வி: ஆபரேட்டர் கம் டெக்னிஷியன் ட்ரெயினி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு படித்த பின்னர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அட்டன்டெண்ட் கம் டெக்னிஷியன் ட்ரெயினி பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்த பின்னர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ ஒன்றில் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரிஷியன் ஆகிய பிரிவுகளில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மெடிக்கல் சர்வீஸ் புரொவைடர் ட்ரெயினி பணிக்கு மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ரேடியோலஜி, ஃபார்மசிஸ்ட், டயட்டீஷியன் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசியினருக்கும் ரூ.250, துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 50. எஸ்சி/எஸ்டி ஆகிய பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் பின்வரும் செயில் இணையதளத்தில், http://103.241.144.18/saildporeg/frmJobDetails.aspx ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.10.2014 
கூடுதல் விவரங்களுக்கு: www.sail.co.in

No comments:

Post a Comment