Thursday, 25 September 2014

குளிரைத் தடுக்கும் கொழுப்பு

# கரடி இனத்தைச் சேர்ந்த பனிக்கரடி, ஊன் உண்ணும் பாலூட்டி.
# உலகில் வாழும் ஊன் உண்ணிகளில் பெரிய விலங்கு பனிக்கரடிதான்.
# உறைபனி சூழ்ந்த குளிர்பிரதேசமான ஆர்டிக் கண்டத்தில் இவை வாழ்கின்றன.
# கடலில் வாழும் சீல்கள் தான் இவற்றின் பிரதான உணவு.
# வளர்ந்த ஆண் பனிக்கரடி 350 முதல் 700 கிலோ வரை இருக்கும். ஆணின் எடையில் பாதி எடையுடன் இருக்கும் பெண் கரடிகள்.
# பனிக்கரடியின் ரோமம் வெள்ளையாகத் தெரிந்தாலும் அது கண்ணாடி போன்று நிறமில்லாதது. பனிக்கரடியின் தோல் கறுப்பு.
# நிலத்தில் பிறந்தாலும் வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழிப்பவை பனிக்கரடிகள்.
# பனிக்கரடிக்கு 42 பற்கள் இருக்கும்.
# பனிக்கரடியின் தோலுக்கு அடியில் 10 சென்டிமீட்டர் அடர்த்தியில் கொழுப்புத் திரை இருக்கும். அதனால்தான் குளிரிலும்கூட பனிக்கரடி இயல்பாக இருக்க முடிகிறது.
# பனிக்கரடிகள் அருமையான மோப்பத்திறன் கொண்டவை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீல்களையும் மோப்பத்திறனால் அறியக்கூடியவை.
# நிலத்தில் மணிக்கு 40 கிலோமீட்டர் ஓடும் திறன் கொண்டவை. நீரில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
# பனிக்கரடி பொதுவாக தனியாக வாழும். பெரிய அளவில் திமிங்கலம் போன்ற உணவு கிடைக்கும்போது மட்டுமே பகிர்ந்து உண்பதைக் காணலாம்.
# ஏப்ரல், மே மாதங்களில் உறை பனிக் காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
# பெண் கரடிகள் பிரசவ காலத்தில் பனிப்பரப்பில் தனக்கென ஒரு வளையைத் தோண்டிக்கொள்ளும். அந்த வளையில் காற்று போகும் வசதியும் பல அறைகளும் இருக்கும்.
# இரண்டு குட்டிகளை ஒரு பிரசவத்தில் பெற்றெடுக்கும்.
# குட்டிகள் பிறக்கும்போது குறைந்தபட்ச ரோமத்துடன் கண்களை மூடியபடி பிறக்கும்.
# பனிக்கரடிகள் வாழும் ஆர்டிக் பிரதேசத்தில் அதை இரையாகக் கொள்ளும் இரைகொல்லி கிடையாது.
# 25 முதல் 30 ஆண்டுகள் வரை பனிக்கரடிகள் வாழும்.
# அருகிவரும் இனமாகப் பனிக்கரடி கருதப்படுகிறது. மனிதர்களின் வேட்டையால் அதிகம் பாதிக்கப்படும் இனமாகப் பனிக்கரடி உள்ளது. அது மட்டுமல்லாமல் பூமி அளவு கடந்து வெப்பமடைவதால், வேகமாக அழிந்து வருகிறது.

No comments:

Post a Comment