ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பிறந்த நாள் செப்டம்பர் 23 . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.
• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.
• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.
• மார்க் ஆன்டனியை
போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.
• நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது
• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.
• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!
• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.
• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.
• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.

No comments:
Post a Comment