இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
¶ அப்பா தீபக் பாந்த்யா நரம்பியல் வல்லுநர். அம்மா போன்னி பாந்த்யா, ஸ்லோவேனிய அமெரிக்கர். கணவர் மைக்கேல் ஜே.வில்லியம்ஸ் போலீஸ் அதிகாரி.
¶ அமெரிக்கக் கடற்படை அகாடமியில் இளங்கலை பட்டமும், புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னால ஜியில் பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
¶ 1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரி யாகப் பணியில் சேர்ந்தார். 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.
¶ டிசம்பர் 9, 2006. டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.
¶ பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார்.
¶ விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார்.
¶ விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியைக் கத்தரித்தார். பிறகு, ‘லாக்ஸ் ஆப் லவ்’ அமைப்புக்கு அதை வழங்கினார்.
¶ பனிச்சறுக்கு, நீச்சல், பைக் ஓட்டுதல், ட்ரயத்லான் ஆகியவை பிடித்தமான பொழுதுபோக்குகள்.
¶ மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார்.
¶ இந்தியப் பெண் ஒருவரைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சுனிதாவின் நீண்ட நாள் ஆசை!
No comments:
Post a Comment