ஆசிய விளையாட்டுப் போட்டியின் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றது.
17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது.
இதில், வியாழக்கிழமை நடந்த டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டில் ஷகுன் சவுத்ரி, ஷ்ரேயாசி சிங் மற்றும் வர்ஷா வர்மன் கொண்ட இந்திய மகளிரணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த போட்டியில் முதல் இடத்தை பெற்ற சீன அணி தங்கப் பதக்கத்தையும், இரண்டாவது இடத்தை பிடித்த தென்கொரிய அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றின.
No comments:
Post a Comment