Tuesday, 2 September 2014

நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1.7%

ஜூன் காலாண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1.7 சதவீதமாக (ஜிடிபியில்) இருக்கிறது. அதாவது 780 கோடி டாலர். கடந்த வருடம் இதே காலாண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருந்தது (2,180 கோடி டாலர்).
நடப்புக்கணக்கு பற்றாக் குறை குறைந்ததற்கு வர்த்தகப்பற்றாக்குறைதான் காரணம். நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. அதேசமயம் இறக்குமதியும் குறைந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இருந்தாலும் இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி -மார்ச் 2014) நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 0.2 சதவீதம் (120 கோடி டாலர்) மட்டுமே இருந்தது.

No comments:

Post a Comment