வரும் ஜூலை மாதத்துக்கு பிறகு அமைக்கப்படும் புதிய ஏ.டி.எம்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)நிபந்தனை விதித்துள்ளது. இதன்படி, பார்வையற்றோர் பயன்படுத்துவதற்கு வசதியாக பிரெய்லி முறையில் ஏ.டி.எம். இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
புதிய ஏ.டி.எம்.களை அமைக்கும் போது பிரெய்லி முறையிலான கீ-பேட் இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து ஏ.டி.எம்.களையும் இதே முறையில் அமைப்பதற்கான எதிர்கால திட்டங்களை வங்கி உருவாக்கி அதன்படி செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிக்கு தேவையான சாய்வு தளத்தை அமைத்துத் தருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment