உறுதியான கொள்கை முடிவு, கடுமையான நிதி நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
மத்தியில் புதிதாக பொறுப் பேற்க உள்ள மோடி அரசு இத் தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளது.
மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக தனிப் பெரும்பான்மையை ஒரு கட்சிக்கு மக்கள் அளித்துள்ளனர். இது நீண்ட கால அடிப்படையில் உறுதியான கொள்கை முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கும். குறிப்பாக நிதி நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மோடி அரசு கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்களை கிரிசில் பட்டியலிட்டுள்ளது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப் பது, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பது, கடன் சந்தையை ஊக்குவிப்பது, தொழில்துறையை ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பைப் பெருக்குவது என ஐந்து முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.
இவற்றில் கவனம் செலுத்து வதால் நாட்டின் தொழில்துறை யினரிடையே போட்டி அதிகரித்து உற்பத்தி பெருகும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீத அளவுக்கு உயரும் என்று கிரிசில் நிறுவன பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷி தெரிவித்துள்ளார்.
நிதி நிர்வாகத்தில் ஒருங் கிணைப்பு மற்றும் பற்றாக் குறையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை எட்ட முடியும். குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட விலை சட்டத்தை (ஏபிஎம்சி) முறையைக் கைவிடுவதன் மூலம் உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கிரிசில் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் உணவுப் பொருள் விநியோகம் மற்றும் அவற்றை பாதுகாப்பதில் மிகப் பெரிய மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக அழுகும் பொருள்க ளான காய்கறிகள், பழங்களை பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இந்த ஆண்டு எல்நினோ எனப்படும் பருவநிலை மாறு பாட்டால் உருவாகவுள்ள உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்பைச் சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமெனில் மானியத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும். அத்துடன் செலுவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவிடுவது மிகப் பெரிய சொத்து என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
வளர்ச்சி மற்றும் வருவாய்க்கு வழிவகுக்கும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல் படுத்துவதன் மூலம் தேவையற்ற வரிகளைத் தவிர்க்க முடியும் என்று அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கு தேவையான கடன் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் விரைவான வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.
தொழில்துறைக்குத் தேவைப் படும் மிக அதிக அளவிலான கடன் தொகையை வங்கிகள் மட்டுமே அளித்துவிட முடியாது. இதனால் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்குரிய நடவடிக் கைகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் நலிவடையும் நிலையில் உள்ள உற்பத்தித் துறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தெளிவான கொள்கை முடிவு, சுற்றுச்சூழல் அனுமதி எளிதாகக் கிடைக்க வகை செய் வது, சிறந்த கட்டமைப்பு வசதி, தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தேக்கமடைந்துள்ள உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment