மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப் பட்டிருக்கும் கடன்களை முன்கூட்டியே திருப்பு செலுத்தப்படும் பட்சத்தில் அதற்கு அபராதம் ஏதும் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி தடைவிதித்திருக் கிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி, முன்கூட்டியே கடன்களை முடிப் பதற்கு அபராதம் ஏதும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும். தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தும் போது அபராதம் விதிப்பதோ, கட்டணங்களை மாற்றி அமைப்பதோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. வாடிக்கை யாளர்கள் கடன்களை முடிக்க வரும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்த யோசனை முன்மொழியப்பட்டது.
மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கப்பட்டிருக்கும் வீட்டுக்கடன் களை முன்கூட்டியே அடைப்பதற்கு அபராதம் ஏதும் விதிக்ககூடாது என்று கடந்த 2012 ஏப்ரலில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் சில வாடிக்கையாளர்கள் குறைவான வட்டி வசூலிக்கும் வங்கிகளுக்கு தங்கள் கடன்களை மாறிறுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment