#நரிகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அனைத்துண்ணிகள். சுறுசுறுப்பான இயல்பு கொண்டவை.
#நாய் பேரினத்தைச் சேர்ந்த மற்ற வகைகளான ஓநாய்கள், குள்ளநரிகள் உருவத்தில் ஒரே மாதிரியாக இருக்கும்.
#உலகில் சுமார் 27 நரி இனங்கள் உள்ளன.
#நரி இனங்கள் ஆஸ்திரேலியாவைத் தவிர உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வாழ் கின்றன. சகாரா பாலைவனம் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளிலும் ஆர்டிக் பனிப் பிரதேசத்திலும் வாழ்கின்றன.
#நடுத்தர அளவுள்ள நாய் களின் அளவில் பெரும்பாலும் நரிகள் காணப்படுகின்றன. ஃபென்னக் வகை நரிதான் உருவத்தில் சிறியது. பூனையின் அளவில் 23 சென்டி மீட்டர் நீளமே இருக்கும்.
#பொதுவாக நரிகள் 86 சென்டி மீட்டர் வரை வளரும். நரியின் வால் 30 முதல் 56 சென்டி மீட்டர் வரையிலான நீளத்தில் இருக்கும்.
#நரிகளின் குறைந்தபட்ச எடை அரை கிலோவுக்கும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். 680 கிராம் இருக்கும். அதிகபட்ச எடை 11 கிலோ கிராம்.
#சமூகமாகக் கூடி வாழும் இயல்புடையவை நரிகள். குடும்ப உறுப்பினர்களாக சேர்ந்து வாழ்பவை.
#நரிகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் இவை வேட்டைக்குச் செல்லும். பாதுகாப்பான உணர்வு இருந்தால் மட்டுமே பகலிலும் நரிக் கூட்டம் வேட்டையாடும்.
#இருட்டிலும் நரிகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. பூனையைப் போல நரிக்கும் கண் பார்வை கூர்மையானது.
#நரிகள் வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றவை. ஒரு மணி நேரத்திற்கு 72 கிலோ மீட்டர் (45 மைல்கள்) வரை கடக்கும்.
#அடர்ந்த வனங்கள், மலைப் பகுதிகள், புல்வெளிகள், பாலைவனப் பிரதேசங்களிலும் நரிகள் வாழ்கின்றன. நிலத்தை கால்களால் தோண்டி வளைகளை உறைவிடமாக மாற்றிக்கொள்ளும். உணவைச் சேமிக்கவும், குட்டி களைப் பராமரிக்கவும் இந்த வளைகள் பயன்படும். தனது வளைகளுக்கு பல வழிகளை நரிகள் வைத்திருக்கும். ஒரு பொந்து வழியாக எந்தப் பிராணியாவது நுழைந்தால் இன்னொரு பொந்து வழியாகத் தப்பித்துவிடும்.
#பெண் நரிகள் கர்ப்பக் காலத்தில் தனது வளைக்குள் இலை, தழைகளை நிரப்பி படுக்கை போல ஏற்பாடு செய்து கொள்ளும். குட்டிகளுக்கு இதமாக இருப்பதற்கு தாய் நரி செய்யும் ஏற்பாடு இது.
#நரியின் கர்ப்பக் காலம் சரிசரியாக 53 நாட்கள்.
#ஒரு பிரசவத்தில் இரண்டு முதல் ஏழு குட்டிகள் பிறக்கும். குட்டிகளை தந்தை நரியும் தாய் நரியும் சேர்ந்தே பராமரிக்கும்.
#சிறு பிராணிகள், பல்லி, எலி, முயல் போன்றவற்றையும் பழங்கள், தானியங்களையும் உணவாகக் உட்கொள்ளும். கடலுக்கு அருகில் வாழும் நரிகள் மீன்களையும் நண்டுகளையும் சாப்பிடும்.
#நரிகள் சராசரியாக 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
No comments:
Post a Comment