அண்டார்டிகாவில் பனிப்பாறை கள் உருகுவது இருமடங்காக அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர்.
பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அண்டார்டிகா பனிப்பாறைகள் குறித்து ஆய்வு நடத்தி முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கிரோயோசாட்-2 செயற்கைக் கோள் உதவியுடன் அவர்கள் ஆய்வு நடத்தினர்.
2010 முதல் 2013 வரையில் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் 134 ஜிகா டன் பனிப் பாறை, கிழக்குப் பகுதியில் 3 ராட்சத பனிப்பாறைகள், அண் டார்டிகா தீபகற்பத்தில் 23 ஜிகா டன் பனிப்பாறைகள் உருகியுள் ளன. ஆண்டுக்கு சராசரியாக 159 ஜிகா டன் பனிப் பாறைகள் உருகி வருகின்றன.
இதன் கடல் நீர்மட்டம் ஒவ்வொரு ஆண்டும் 0.45 மில்லி மீட்டர் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஆய்வை நடத்திய மூத்த விஞ்ஞானி டேவிட் வாகன் கூறியபோது “பூமியில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் அண்டார்டிகா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளது.
கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வைவிட இப்போதைய ஆய்வில் பனிப்பாறைகள் உருகு வது இரு மடங்காக அதிகரித் திருப்பது தெரிய வந்துள்ளது” என்றார்.
No comments:
Post a Comment