Monday, 19 May 2014

10 முக்கிய சீர்திருத்தங்கள் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

10 முக்கிய சீர்திருத்தங்கள் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
# முதலீட்டுக்கு உகந்த சூழல், கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
# வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பணவீக்கத்தைக் கட்டுக் குள் கொண்டுவரவேண்டும். உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
# உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
# தொழில் கடன் கிடைப்பதை எளிதாக்க வேண்டும். அதற்கான வட்டியையும் குறைக்க வேண்டும்.
# சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), நேரடி வரிகள் சட்டம் (டி.டீ.சி.)கொண்டுவர வேண்டும். மேலும், வங்கி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.
# பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பங்குகள் விலக்கலை வேகமாக செய்ய வேண்டும்.
# முக்கிய ஆதாரங்களாகத் திகழும் நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், நிலம் ஆகியவற்றை தொழில் துறையினரிடம் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுத்து எளிதாக்க வேண்டும்.
# தொழில்துறையை ஊக்கு விப்பதற்காக சுற்றுச்சூழல் துறை ஒப்புதல், இதர துறை களின் ஒப்புதல் தருவதற் கான நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.
# ஒழுங்கு முறை ஆணையங் களின் பணிகளைச் செம் மைப்படுத்த வேண்டும்.
# செலவுகள், தேவையில்லாத மானியங்கள் ஆகியவற்றை குறைத்து நிதிப்பற்றாக் குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment