ட்விட்டரை அதிகம் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருமாறும் என்று இ-மார்கெட்டர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக இருக்கும் என்று கூறி இருக்கிறது.
மேலும் இந்த வருட இறுதிக்குள் ட்விட்டர் பயன்படுத்துபவர்களில் ஆசிய பசிபிக் பகுதியில் 32.8 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் 23.7 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில்தான் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
இந்த வருட இறுதியில் ட்விட்டர் பயன்பாட்டில் இந்தியா மூன்றாவது இடம் பிடிப்பதுபோல இந்தோனேஷியா 1.53 கோடி வாடிக்கையாளர்களுடன் நான்காவது இடத்தை பிடிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை இந்த இரண்டு நாடுகளும் பின்னுக்குதள்ளும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
2018-ம் ஆண்டு வட அமெரிக்காவில் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை விட ஆசியா பசிபிக் பகுதியில் இரண்டு மடங்கு பயன்படுத்துவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தமாக 2014-ம் ஆண்டு ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 24.4 சதவீதம் அதிகரித்து 22.75 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது. கடந்த வருடம் 18.29 கோடிபேர் ட்விட்டர் பயன்படுத்தினார்கள்.
2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் ட்விட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்திருக்கிறது.
No comments:
Post a Comment