10 வயதுக்கு மேல் இருக்கும் சிறுவர்கள் தனியாக வங்கி கணக்கு தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் வங்கி சேவை என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த அனுமதியை அளித்திருக்கிறது.
இதற்கு முன்பாக சிறுவர்கள் பெற்றோரைப் பாதுகாவலராகக் கொண்டு வங்கி கணக்கினைத் தொடங்கி செயல்படுத்த முடியும். இப்போது 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாக வங்கியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கிறது.
இருந்தாலும் சிறுவர்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியும் என்பது உள்ளிட்ட ரிஸ்க் சார்ந்த விஷயங்களில் அந்தந்த வங்கிகள் முடிவு செய்யலாம். அதேபோல என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்தும் வங்கிகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
அதே சமயத்தில் ஏ.டி.எம்., காசோலை, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளை இலவசமாக கொடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment