Tuesday, 9 September 2014

கர்நாடகா வங்கியில் காலியிடங்கள்

கர்நாடகா வங்கி தனியார் துறை சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாகும். நாடு தழுவிய கிளைகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: இந்த வங்கியின் கிளரிக்கல் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படித்தவர்களுக்கு இந்த மதிப்பெண்களில் மாற்றம் உள்ளது. மேற்கண்ட பட்டப் படிப்பு தகுதியை 01.08.2014க்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதித் தேர்வு மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதத்தில் பெங்களூரு, பகல்காட், பெல்காம், பிடர், பெல்லாரி, சிக்மகளூர், சிக்கபல்லபுரா, தாவன்கெரே, தார்வாத், குல்பர்கா, ஹாசன், ஹவேரி, ஹீப்ளி, மங்களூரு, மைசூரு, ஷிமோகா, தும்கூர் மற்றும் உடுப்பி ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த தேர்வை எதிர்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்திலிருந்து பெற்று அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.09.2014
இணையதள முகவரிwww.karnatakabank.com/ktk/Career.jsp

No comments:

Post a Comment