Thursday, 31 July 2014

ஜூலை 31, 1964 - ரேஞ்சர்- 7 விண்கலம் நிலவைப் புகைப்படம் எடுத்த நாள்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுசெய்ய வேண்டும் என்று திட்டமிட்ட அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, நிலவின் மேற்பரப்பைப் படமெடுக்கத் தொடங்கியது. பூமியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் அத்தனை துல்லியமாக இல்லை.
அதன் பின்னர், ‘ரேஞ்சர்' விண்வெளித் திட்டத்தில் ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பிப் படமெடுக்க முயன்றது நாஸா. சில முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் ரேஞ்சர்-6 எனும் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், அதன் கேமராக்கள் சரிவர இயங்காததால், படங்கள் தெளிவாக அமையவில்லை.
அடுத்தபடியாக, 1964 ஜூலை 28-ல் ரேஞ்சர்-7 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. வெற்றிகரமாகச் செயல்பட்ட ரேஞ்சர்-7, ஜூலை 31-ல் நிலவின் மிகத் தெளிவான படங்களை எடுத்து அனுப்பியது. முன்பு எடுக்கப்பட்ட படங்களைவிட, இவை ஆயிரம் மடங்கு தெளிவாக இருந்தன. மொத்தம் 4,308 படங்களை ரேஞ்சர்-7 எடுத்தது.
இந்த ஆய்வின் மூலம் முன்பு கணித்ததுபோல் அவ்வளவு தூசி மண்டலமாக நிலவு இல்லை என்பது தெரியவந்தது. நிலவில் தரையிறங்குவதில் உள்ள சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 1969-ல் மனிதர்கள் நிலவில் வெற்றிகரமாக இறங்கியது மற்றொரு வரலாறு.

IMPORTANT CURRENT AFFAIRS : 27.07.2014

IMPORTANT CURRENT AFFAIRS : 27.07.2014 

1) Situation continues to be tense but under control in Saharanpur as curfew continues for the second day today; Home Minister briefs Prime Minister about the situation. Congress alleges conspiracy behind clashes; demands judicial probe

2) Commonwealth Games: Indian shooter Shreyasi Singh wins Silver in the Women's Doubles Trap event and Mohd Asab bags bronze in Men's Doubles Trap event.

3) India and Nepal agree to review and update the Treaty of Peace and Friendship of 1950.

4) Janata Dal (United), RJD and Congress agree on seat sharing in Bihar bypolls.

5) Former Prime Minister Manmohan Singh says, government should investigate and explain in Parliament about the report of bugging devices found in Nitin Gadkari's house.

6) Hamas relents and announces a new 24 hour Gaza ceasefire with Israel.

7) Conventions convened by different Sikh groups over creation of the Haryana Sikh Gurudwara Management Committee called off following a directive by Akal Takht.

8) Government not to cut short the Budget session of Parliament, says Venkaiah Naidu.

9) Six passengers burnt alive in a road accident in Auraiya district of Uttar Pradesh.

10) The third cricket test between India and England begins in Southampton today. India leads the five test series,1-0.

GK & Computer Questions Asked in SBI CLERK EXAM - 27.07.14

GK & Computer Questions Asked in SBI CLERK EXAM - 27.07.14
(Morning Shift)

1. World is Press Freedom Day – 3rd May.
2. World’s Highest Train tunnel found in – China.
3. Commodity market regulatory authority – FMC (Forward Markets Commission).
4. Nitin Jairam Gadkar (Minister of Road Transport, Highways and Shipping) from – Nagpur, Maharastra.
5. Founder of Himalayan Natural Mineral Water Brand – Dadi Balsara.
6. Chairman of Bharatiya Mahila Bank – Usha Ananthasubramanian.
7. capital of Argentina – Buenos Aires.
8. Cauvery Water disputes between – Tamilnadu and Karnataka.
9. PDF Full Form – Portable Document Format.
10. Minister of Social and employment – Thawaar Chand.
11. Currency of Indonesia – Rupiah.
12. Newest hydroelectricity power plant in India located in – Jammu and kashmir (Baramulla).
13. 2014 Pulitzer Prize has been awarded to Vijay Seshadri for his book – collection of poems 3 Sections.
14. Asian version of nobel prize 2014 winner – Former Norwegian PM Brundtland.
15. MIPS is a unit for measuring – CPU.
16. Economic survey of an year conducted by – Finance Minister

BANKING GK

1.The oldest Joint Stock Bank of India -- Allahabad Bank
2. The bank founded by Freedom Fighter Dr. Bhogaraju Pattabhi Sitaramayya -- Andhra Bank
3. First bank to open a branch outside India -- Bank of India, London, 1946
4. The first bank to be given an ISO 9002 certificate for one of its branches -- Canara Bank
5. The Postal Dept has issued a commemorative stamp in the name of thisbank celebrating 100 years in 2011 -- Central Bank of India
6. First Indian Bank to be wholly owned by Indians -- Central Bank of India
7. The bank formed on the efforts of Lala Lajpat Rai -- Punjab National Bank
8. The only merger of nationalized banks took place between -- Punjab National Bank and New Bank of India in 1993
9. The bank whose brand equity is "Pygmy Deposit Scheme" -- Syndicate Bank
10. The bank which was conceived by Shri GD Birla -- UCO Bank
11. The bank which was inaugurated by Mahatma Gandhi in 1919 -- Union Bank of India
12. The largest among nationalized banks -- Punjab National Bank
13. The bank established in the year 1913 as Bank of Mysore Ltd. at the instance of the banking committee headed by the great Engineer - Statesman, Late Dr. Sir M.Visvesvaraya -- State Bank of Mysore

Wednesday, 30 July 2014

காண்டாமிருகத்துக்கு எத்தனை கொம்பு?

# உலகில் வாழும் பெரிய பாலூட்டி வகைகளில் காண்டாமிருகமும் ஒன்று. இது தாவர உண்ணியும்கூட.
# காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன.
# காண்டாமிருகம் அரிதான விலங்கு. தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
# வெள்ளைக் காண்டாமிருகங்கள் என அழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் சாம்பல் நிறமுடையவை. அவற்றின் வாய், உதடு பெரிதாக புல் மேய வசதியாக இருக்கும்.
# கறுப்புக் காண்டாமிருகம் என்றழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்தின் வாய் பறவையின் அலகைப் போல கூர்மையானது.
# இந்தியக் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை.
# ஜாவா தீவில் உள்ள காண்டாமிருகங்கள் அளவில் கொஞ்சம் சிறியவை. ஒற்றைக்கொம்புதான் உண்டு. சுமத்ரா தீவைச் சேர்ந்த காண்டாமிருகங்கள் அதைவிடச் சிறியவை.
# காண்டாமிருகத்தின் மூளை மற்ற பாலூட்டிகளைவிட அளவில் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது.
# காண்டாமிருகம் நன்கு தடித்த உறுதியான தோலைக் கொண்டது. இதன் தடிமன் 1.5 சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர்வரை இருக்கும்.
# பெரிய காண்டாமிருகத்தின் எடை 1 முதல் 1.8 டன் வரை இருக்கும். (டன்=1000 கிலோ)
# மணிக்கு 40 கிலோமீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.
# காண்டாமிருகத்துக்கு எளிதில் கோபம் வரும். எதிரிகளை கொம்பினாலேயே தாக்கும்.
# ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.
# காண்டாமிருகங்களின் கொம்புகள் மருத்துவக் குணம் கொண்டது என்று நம்பப்படுவதால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் 2,700 காண்டாமிருகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
# பசுமையான இலை தழைகளை காண்டாமிருகங்கள் விரும்பி உண்ணும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு முன் பற்கள் கிடையாது. முன் கடைவாய்ப் பற்களைக் கொண்டே உணவை மென்று தின்னும்.
# பெண் காண்டாமிருகங்கள் தமது குட்டியை 15 முதல் 16 மாதங்கள்வரை கருவில் சுமக்கும். தாய் காண்டாமிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும்.
# குட்டி காண்டாமிருகங்களை காட்டுப்பூனைகள், முதலைகள் மற்றும் காட்டு நாய்கள் சிலநேரம் வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.
# உலகக் காண்டாமிருகப் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
# குட்டிகள் பெரும்பாலும் தங்கள் தந்தை காண்டாமிருகங்களைப் பார்க்கவே முடியாது. இனப்பெருக்கக் காலம் முடிந்தவுடன் ஆண் காண்டாமிருகம் பெண் காண்டாமிருகத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிடும்.
# நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் வெள்ளைக் காண்டாமிருகங்கள்தான்.

மண் வாசனை ஏன்?

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு நாடு மட்டுமே திராட்சைப் பழத்தை எப்படி வளர்ப்பது என்று தெரிந்து வைத்திருந்தது. அந்த நாடு, எகிப்து. இதன் பிறகு கிரேக்கர்கள், ஐரோப்பியர்கள் மூலம் திராட்சை பயிரிடுதல் ஆசியாவுக்குள் வந்தது.
சினிமா புரொஜெக்டருக்கு முன்னாடி எப்படி படம் ஓடியது தெரியுமா? 1834-ம் ஆண்டில் வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் என்பவர் பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில் உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கு இடையில் நீள் வடிவில் துளையிட்டு டிரம்மைச் சுழலவிட்டு சுவரில் படும்படி செய்தார். அதன் பெயர் ‘ஜோட்ரோப்’.
மழை பெய்யத் தொடங்கியவுடன் ஒரு விதமான மண் வாசனை வருகிறதே, அதற்கு என்ன காரணம் தெரியுமா? நிலத்தில் உள்ள ‘அடினோசைட்’ என்ற நுண்கிருமிகள். மழைத் துளிகள் நிலத்தின் மீது பட்டவுடன் அவை மண்ணுடன் வினைபுரிந்து மண் வாசனையைக் கிளப்புகின்றன.

சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கலாமா?- மத்திய அரசு தீவிர பரிசீலனை


சர்ச்சையில் சிக்கியுள்ள சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கலாமா? அல்லது அதில் இடம்பெறும் ஆங்கில மொழி கேள்விகளை நீக்கிவிடலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தேர்வு முறையில் மாற்றம்
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 23 வகையான மத்திய அரசின் உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் இத்தேர்வு, முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது ஆகும்.
இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
முதல்நிலைத் தேர்வில் 2011-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, முன்பிருந்த விருப்ப பாடத்தாள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சி-சாட் எனப்படும் சிவில் சர்வீஸ் திறனறிவுத் தேர்வு சேர்க்கப்பட்டது. மேலும், மதிப்பெண் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு பொது அறிவு தேர்வுக்கு 200 மதிப்பெண், சி-சாட் தேர்வுக்கு 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
மாணவர்கள் கடும் எதிர்ப்பு
சி-சாட் தேர்வில் ஆங்கில மொழிக்கும், ஆராயும் திறனுக்கும் (ஆப்டிடியூட்) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சி-சாட் தேர்வில் மாணவர்கள் பரிச்சயமாகும் வகையிலும், 2013-ல் மெயின் தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தினா லும், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு, அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை அளிக்க முன்வந்தது.
அந்த 2 ஆண்டு வயது சலுகையுடனே இந்த ஆண்டுக் கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
தொடர் போராட்டம்
இதற்கிடையே, கிராமப்புற மாணவர்களும், இந்தி பேசும் மாநில மாணவர்களும் சி-சாட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த தேர்வை நீக்க வேண்டும் என்றும் வயது வரம்பு சலுகை 4 ஆண்டுகள் வழங்க வேண்டும் என்றும் கூறி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்
சி-சாட் தேர்வில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக ஏற்கெனவே 3 நபர் குழு உரிய வழிவகைகளை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவர்களின் போராட் டம் டெல்லியில் தீவிரமடைந் துள்ளது.
இத்தகைய சூழலில், சி-சாட் எனப்படும் திறனறிவுத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப் பெண் நிர்ணயிக்கலாமா? (தற்போது சி-சாட் தேர்வு மதிப்பெண், பொதுஅறிவுத்தாள் மதிப்பெண் அடிப்படையில்தான் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்) அல்லது இத்தேர்வில் சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி வினாக்களை நீக்கிவிடலாமா? அல்லது ஒட்டுமொத்தமாகவே இந்த தேர்வை நீக்கிவிடலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்ச்சிக்கு கணக்கிடப்படாது
200 மதிப்பெண் கொண்ட சி-சாட் தேர்வுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அதில் தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண் முதல் நிலைத் தேர்வு தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது. பொதுஅறிவு தேர்வின் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
மெயின் தேர்வில் தமிழ் உள் ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம் (ஒவ் வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண்) ஆகிய தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்ணை மெயின் தேர்வு தேர்ச்சிக்கு கணக்கில்கொள்ள மாட் டார்கள். அவற்றில் தேர்ச்சி பெற் றாலே போதுமானது.
இருப்பினும், மொழித்தாள் மற்றும் ஆங்கில தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வர்களின் இதர தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் தீ விபத்து: கூடுதல் இழப்பீடுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தருவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஜூலை 16, 2004-ல் நிகழ்ந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து குறித்து விசாரிக்க, அன்றைய தமிழக அரசு, நீதிபதி சம்பத் கமிஷனை நியமித்தது.
சம்பத் கமிஷன் தனது அறிக்கையில், "எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் 900 மாணவர்கள் இங்கு படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு" என்று தெரிவித்தது.
அந்த அறிக்கையை, சிறு மாற்றமும் செய்யாமல் அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் பிரிவு- 21 மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கும் அரசே பொறுப்பு என்கிறது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை கொடுக்கும் பொறுப்பு அரசுக்கே உள்ளது என்பதை வலியுறுத்தி இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 24.4.2014 அன்று நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, 2 வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
அதை தமிழக அரசு நிறை வேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், ரோகின்டன் எப்.நாரிமன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தருவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
'தலா ரூ.25 லட்சம் தரவேண்டும்'
முன்னதாக, கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் தெரிவித்ததாவது:
"விபத்துக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் தான் காரணம். எனவே, அரசுதான் இழப்பீடு தரவேண்டும். தமிழக அரசு மேல் முறையீடு செய்தது அநீதியானது. இதற்கு முன்பு நடைபெற்ற விபத்துகளில் இதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன.
1989-ல் ஜாம்ஷெட்பூரில் தீ விபத்தில் டாடா பள்ளியில் படித்த 69 குழந்தைகள் இறந்தனர். உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு குழந்தைக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்படி, கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார் தமிழரசன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளையில், இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் 94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை எதிர்பார்த்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் குவிந்திருந்தனர்.
இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர். | படிக்க - கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வேதனையளிக்கிறது: பெற்றோர் குமுறல் |
ஜூலை 16, 2004-ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு சமையலறையில் தீப்பிடித்து, பள்ளியின் முதல் மாடிக்குப் பரவியதில், அங்கு கூரை வேயப்பட்ட நீண்ட வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் கடும் தீக் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர விபத்துதான் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
இங்கு, ஒரே சிறிய கட்டிடத்தில் 3 பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. விபத்துக்குப் பிந்தைய கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறி மாறிச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு இன்னும் முடிவடை யாமல் உள்ளது உச்ச நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் குறித்தும், சாட்சிகளிடமும் விசாரணை செய்தார்.
501 சாட்சியங்கள்
இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங் களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
மொத்தமுள்ள 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னட் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் குற்றவாளிகள்:
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
விடுதலையானோர் விபரம்:
தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, 29 July 2014

இராணி லட்சுமிபாய்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடி, விடுதலைப் போராட்ட வீரகளின் மத்தியில் சிறந்த வீராங்கனையாகவும், தைரியத்தின் மறுவடிவமாகவும் திகழ்ந்த இராணி இலட்சுமிபாய். 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடிகளில் ஒருவராவர்.
பிறப்பு: 1828 -ம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி  காசியில் (இன்றைய வாரணாசியில்) மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப்
மகளாகப் பிறந்தார் இராணி லட்சுமிபாய். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
இளமை பருவம்: தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளையும் முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றுக் கொண்டார்.
இல்லற வாழ்க்கை: 1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு
‘லட்சுமிபாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல் அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக அந்த குழந்தை நான்கு மாதங்களில் இறந்து விட்டது.
1853 இல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார்.
நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் இயற்கை எய்தினார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு: ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார்.
ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், 1854 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறிச் செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
முதல் இந்திய விடுதலைப் போர்: ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  லட்சுமிபாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார்.
ஆயினும் 1857ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய வதந்தியையடுத்தே இக்கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, இராணி இலட்சுமிபாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவிலே ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காகவும் ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாயால் ஹால்டி குங்குமப் பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டது.
ஆனாலும் இராணி இலட்சுமிபாய் ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது. இதனால், ஆங்கிலேயர்கள் 1857ஆம் ஆண்டு சூன் 8ஆம் திகதி ஜோக்கன் பாக்கில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி இலட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் இராணி இலட்சுமிபாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்கவே இவ்வாறு செய்தனர்.
இதனையே காரணமாக வைத்து, 1858ஆம் ஆண்டு மார்ச்சு 23ஆம் திகதி ஹீ ரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படை மார்ச்சு 31ஆம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியாமல் போனது. ஆனாலும் சான்சி இராணி ஆங்கியேர்களிடம் அடிபணிய மறுத்துத் தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது நாட்டை விட்டுக் கொடுக்க மறுத்த சான்சி இராணி இலட்சுமிபாய், தனது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார்.
ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார். கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேய படை, அரண்மனையைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளையடித்தனர்.
இறப்பு: ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த லட்சுமிபாய் அவர்கள், கல்பியில் தஞ்சமடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார்.
அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.
வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார் குறிப்பிடத்தக்கது.
1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.
1842: ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.
1851: அவரது மகன் பிறந்து, அவர் நான்கு மாதங்களிலேயே இறந்தார்.
1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.
1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.
1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.
1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

கேள்விக்கு என்ன பதில்: கிராம அலுவலர்

* கிராம அளவில் தயாரிக்கப்படும் அறிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது?
கிராம அடங்கல் கணக்கு

* கிராமங்களில் உள்ள பொது கட்டிடங்கள் குறித்த பதிவேட்டை பராமரிப்பவர்?
கிராம நிர்வாக அலுவலர்

* கிராம கணக்கு எண்.20-ஐ எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மழைக் கணக்கு

* கிராம கணக்குகள் அனைத்தும் எது சம்பந்தப்பட்டவை?
நிலம்

* கிராம நிர்வாகத்தை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க அரசு முடிவு செய்த ஆண்டு?
1980

* கிராம நிர்வாக அலுவலர் பயிராய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம்?
மாதந்தோறும்

* கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய நேரம்?
காலை 8 முதல் 12 மணி வரை

* வாரிசுச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்?
வட்டாட்சியர்

* வாரிசுச்சான்று வழங்க வட்டாசியருக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்?
15 நாட்கள்

* மாநகராட்சிப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
1 சென்ட்

* நகராட்சிப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
1.5 சென்ட்

* கிராமப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
3 சென்ட்

* நில ஒப்படை தேதியில் இருந்து எத்தனை ஆண்டுகளுக்குள் நிலம் விற்பனை செய்யக்கூடாது?
10 ஆண்டுகள்

* தமிழகத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளை கட்டாயமாக்கிய சட்டம்?
2000 ஆண் ஆண்டு சட்டம்

* முதன் முதலாக பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1969

* தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
2005

* அ பதிவேடு பராமரிக்கப்படும் இடம்?
கிராம் நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம்

* அ பதிவேடு எத்தனை கலம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது?
11 கலம்

* 1.25 ஏக்கர் நன்செய் அல்லது 2.5 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு குறைவாக விவசாயம் செய்பவர்?
குறு விவசாயி

* கலப்பு திருமணச் சான்று வழங்குபவர்?
வட்டாட்சியர்

* 1969 ஆம் ஆண்டு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் செயல்படுத்தும் முதன்மைத் துறை எது?
பொது சுகாதாரத் துறை

* உயிரற்ற பிறப்புகள் மாதாந்திர அறிக்கை சுருக்கத்திற்கான படிவம் எது?
பிடவம் 13

* தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர்?
பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர்

* பிறப்பு அல்லது பிறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் தர வேண்டும்?
21 நாட்கள்

* ஆதரவற்ற நபர்கள் முதியோர் ஒய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு?
65 வயது

* இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான அரசு ஆணை எண்?
995

* முதியோர் ஒய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
1962

* பழங்குடியினர் என சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்?
வருவாய் கோட்ட அலுவலர்

* தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளைப் பெற தகுதியானவர்கள்?
சீக்கியர்கள்

* ஆதரவற்ற அனாதை குழந்தைகள், பெற்றோர் யாரென்று விவரம் தெரியாதவர்கள் போன்றவர்களுக்கு வழங்க வேண்டிய சாதிச் சான்று?
பிற்படுத்தப்பட்டோர்

* சென்னை மாவட்டத்தில் ஆதி திராவிடர் சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் உடையவர்?
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

* ஒரு வாருவாய் கிராமத்திற்கு எத்தனை அ பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன?
இரண்டு

* தமிழத்தில் ஜமீன் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1948

* தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட் ஆண்டு?
1963

திருவள்ளுவர் பல்கலையில் பணியிடங்கள்

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான வேலூரை மையமாகக் கொண்டு இயங்கி வருவதுதான் திருவள்ளுவர் பல்கலைக் கழகம். இந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள் 54ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தருக்கு உதவியாளரில் 1, சூபரிண்டண்டென்ட் பிரிவில் 9, அஸிஸ்டெண்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவில் 23, ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பிரிவில் 4, டிரைவர் பிரிவில் 4, சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் பிரிவுகளில் தலா 2, கிராஜூவேட் லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பிரிவில் 4, டேடா/வெப் மேனேஜரில் 1, எலக்ட்ரீசியன்/ப்ளம்பர் மற்றும் கார்டனர் பிரிவுகளில் தலா 2 காலியிடங்கள் சேர்த்து மொத்தம் 54 காலியிடங்கள்
உள்ளன.
வயது வரம்பு: துணைவேந்தரின் உதவியாளருக்கு அதிகபட்சம் 45, டிரைவர் பதவிக்கு 30 முதல் 50 மற்றும் இதர பிரிவுகளுக்கு அதிகபட்சம் 35 வயது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருப்பது துணைவேந்தரின் உதவியாளராக பணிபுரிய தேவை. சூப்பரிண்டெண்டண்ட் பதவிக்கு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பிரிவினர் ஆங்கிலம் அல்லது தமிழில் சீனியர் பிரிவு தட்டச்சு முடித்திருப்பதுடன் ஏதாவது ஒரு அரசு நிறுவனம் அல்லது பல்கலைக் கழக பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்வு பெறாதவராக இருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், ப்ளம்பர்/எலக்ட்ரீசியன், லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பதவிகளுக்கு வரையறுக்கப்படும் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறவும். ரூ.250/-க்கான டி.டி.,யை The Registrar, Thiruvalluvar University, Vellore-632 115 என்ற பெயரில் வேலூரில் மாற்றத்தக்கதாக எடுத்து உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Registrar, Thiruvalluvar University, Serkkadu, Vellore-632 115
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.08.2014
இணையதள முகவரி: www.thiruvalluvaruniversity.ac.in

ஐ.எஸ்.ஆர்.ஓ., வேலை வேண்டுமா

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்வெளி ஆராய்ச்சியில் சர்வ தேச புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவுவதில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனம் தனது பல்வேறு மையங்களில் காலியாக உள்ள உதவியாளர் (அட்மினிஸ்ட்ரேடிவ் சப்போர்ட் ஸ்டாப்) பணியிடங்கள் 233ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் ஆமதாபாத்தில் 4 இடங்கள், பெங்களூருவில் 75 இடங்கள், ஐதராபாத்தில் 24 இடங்கள், புது டில்லியில் 4 இடங்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் 54 காலியிடங்கள் மற்றும் திருவனந்தபுரத்தில் 72 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது: ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கலை, அறிவியல், நிர்வாகவியல், வணிகம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முதல் வகுப்புடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: மேற்சொன்ன தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணையதளத்திற்கு சென்று தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்திலுள்ள பணம் செலுத்தும் சலான் மற்றும் பதிவு செய்த பிரின்ட் அவுட் மற்றும் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Administrative Officer (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore -560 094. 
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 07.08.2014
இணையதள முகவரி: www.isro.gov.in

வரிப் புலிகள் - சில வரிகள்...

# நாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்சச் சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.
# Tigris என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் Tiger என்ற பெயர் வந்தது. அதற்கு அம்பு என்று அர்த்தம். பாய்ந்து செல்லும் அம்பைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.
# நமது கைரேகைகள் ஒவ்வொரு வருக்கும் மாறுபடுவதைப் போல, ஒவ்வொரு வேங்கைப் புலியின் உடலில் உள்ள வரிகளும் வித்தியாசமானவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு புலியையும் அடையாளம் காணவும், கணக்கெடுக்கவும் முடியும்.
# வேங்கைப் புலியின் காலடித் தடத்தை Pugmark என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதைக்கொண்டு ஒரு வேங்கையின் வயது, பாலின வேறுபாடு, எடை, உயரம் போன்ற விஷயங்களைக் கணிக்க முடியும்.
# வேங்கைப் புலிகள் நடந்து செல்லும்போது, தங்கள் உகிர்களை (கூர்நகங்களை) உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் அவற்றின் காலடித் தடத்தில் நகங்கள் இருக்காது.
# அழகான சிவப்பு ஆரஞ்சு மயிர்ப்போர்வையின் (Furcoat) மீதான வரிகளைக் கொண்ட தோலே, வேங்கைக்கு எதிரியாகிவிட்டது. ராஜாக்கள், வெள்ளைக்காரர்கள் முதல் சாமியார்கள், பணக்காரர்கள்வரை இந்தத் தோலுக்கு அடிமை. வேங்கைகளின் அழிவுக்கு அழகான மயிர்ப்போர்வையும் முக்கியக் காரணம்.
# தோலில் நிறமிக் குறைபாடு காரணமாக, சில புலிகள் வெள்ளை பின்னணியில் சாம்பல் நிற வரிகளைக் கொண்டிருக்கும். இவை வெள்ளைப் புலிகள். உயிரினக் காட்சியகங்களில் இவற்றைப் பார்க்கலாம். சென்னை வண்டலூர் உயிரினக் காட்சியகத்தில் இருக்கிறது.
# வயது, இரை கிடைக்கும் தன்மை, காட்டின் சூழல் காரணமாகச் சில வேங்கைப் புலிகள் ஆட்கொல்லிகளாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட புலிகள் அரிதானவை. சாதாரண மாக எந்தத் தனிப்பட்ட காரணமும் இல்லாமல், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே வேங்கைப் புலிகள் மனிதனைத் தாக்குகின்றன.
# இந்தியாவைத் தவிர, வங்கதேசத்தின் தேசிய விலங்கும் வேங்கைப் புலிதான்.
# ஒரு வேங்கையின் உறுமலை 3 கி.மீ. சுற்றளவுக்குக் கேட்க முடியும்.
# வேங்கைகள் இரவில் வேட்டை யாடும். இரவில் அவற்றுக்குப் பார்வை நன்றாகத் தெரியும்.
# வேங்கைகளுக்குத் தண்ணீர் ரொம்பவும் பிடிக்கும், நன்றாக நீந்தும். ஓடைகள், குட்டைகளில் இறங்கி உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும்.
# வெப்பமண்டலம், குளிர்க் காடுகளில் மட்டுமல்லாமல் சதுப்புநிலங்களிலும் (எ.கா. மேற்கு வங்கச் சுந்தரவனக் காடுகள்) வேங்கைகள் வாழும். எப்போதும் தண்ணீருக்கு அருகிலேயே இருக்கும்.
# ஒரு வேங்கைப் புலி ஒரு முறைக்கு அதிகபட்சம் 27 கிலோ வரை உண்ணக்கூடும். சராசரியாக 5 கிலோ இரையை உண்ணும். இரை பெரிதாக இருந்தால் மறைத்து வைத்து, பசிக்கும்போது உண்ணும்.
# காட்டெருமை, மான் போன்ற குளம்புள்ள உயிரினங்கள் மட்டுமின்றி ஆமை, தவளை போன்ற சிறிய உயிரினங்களையும் வேங்கைப் புலிகள் உண்ணும்.
# வேங்கைப் புலிகளில் வங்கம், தென்சீனம், இந்தோசீனம், சுமத்ரா, சைபீரியா என்று ஐந்து உள்ளினங்கள் உண்டு. இதுதவிரக் காஸ்பிய, பாலி, ஜாவா புலி உள்ளினங்கள் முற்றிலும் அற்றுப் போய்விட்டன.
# பூமியின் வடக்கு குளிர் பகுதிகளில் வாழும் புலிகள் பெரிதாகவும், எடை மிகுந்தும் இருக்கின்றன. வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்பவை, அவற்றைவிட அளவில் சிறியவை. வேங்கைகளில் மிகப் பெரியது இந்தோ-சீனப் புலியே.
# உயிரினக் காட்சியகங்களில் வேங்கைப் புலி 26 ஆண்டுகள்வரை வாழ்ந்துள்ளது.

காப்பகங்கள் புலிகளைக் காக்குமா?


| ஜூலை 29: சர்வதேச வேங்கைப் புலி நாள் |
ஆசியாவைச் சேர்ந்த வேங்கைப் புலிகள் ஐரோப்பாவில் பிரபலமடைய முக்கியக் காரணமாக இருந்தது பிரபல ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்' கதைகள். 1893-ல் அந்தக் கதைகளை அவர் எழுதிய காலகட்டத்தில் ஆசியக் கண்டம் முழுக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாகத் தகவல் உள்ளது. ஆனால், இன்றைக்கு 13 நாடுகளில் 3,200-யைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் உள்ளன என்கின்றன சமீபத்திய கணக்கெடுப்புகள்.
பூமியில் உயிரினச் சமநிலை பேணப்படப் புலிகள், திமிங்கிலங்கள் போன்ற இரைகொல்லிகள் (Predator) அத்தியாவசியம். நிலத்தில் வாழும் முக்கிய இரைகொல்லிகளில் ஒன்றான கம்பீர வேங்கைப் புலிகள், நவீன கால நெருக்கடிகளுக்கு வேகமாகப் பலியாகிவருகின்றன.
பலியாகும் புலிகள்
புலி பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் ‘இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புக் கழகம்' (Wildlife Protection Society Of India) வெளியிட்டுள்ள கணக்குப்படி, 2013-ம் ஆண்டில் மட்டும் கள்ளவேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுக்க 80 புலிகள் பலியாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 41 புலிகள் மடிந்துள்ளன. இப்படி இயற்கைக்கு மாறான காரணங்களால் புலிகள் உயிரிழப்பதை, புலிக் காப்பகங்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் தடுத்துவிட முடியுமா?
‘முடியும்' என்கிறது அரசு. எப்படி?
கடந்த 2010-ம் ஆண்டு தேசிய அளவிலான புலி கணக்கெடுப்பின் இரண்டு சுற்றுகளாக நடந்தது. அதன்படி, 1,706 புலிகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,520 ஆகவும் அதிகபட்சம் 1,909 ஆகவும் புலிகளின் எண்ணிக்கை இருக்கக்கூடும்.
காப்பகங்களும் பாதுகாப்பும்
இத்தனை புலிகள் இறப்பதற்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது புலி காப்பகங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டதுதான். நாட்டில் தற்போது 18 மாநிலங்களில் 68,518 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் 47 புலி காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் புலிக் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 163 புலிகள் இருக்கின்றன.
இவற்றுடன் தேசியப் புலி காப்பக ஆணையத்தின் ஒப்புதலுடன் ரதபனி (மத்தியப் பிரதேசம்) மற்றும் சுனபேதா (ஒடிஸா), பிலிபிட் (உத்தரபிரதேசம்) ஆகிய பகுதிகளில் புலி காப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தேர்வு செய்யப்பட்ட குதிரேமுக் (கர்நாடகம்), ராஜாஜி (உத்தரகண்ட்) ஆகிய பகுதிகளில் புலி காப்பகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வில்லிப்புத்தூர் அணில்கள் சரணாலயம், மேகமலை காட்டுயிர் சரணாலயம், வருஷநாடு பள்ளத்தாக்கு (தமிழகப் பகுதி) உள்ளிட்ட பகுதிகளிலும் புலிக் காப்பகம் அமைக்கத் திட்ட மதிப்பீட்டை அனுப்பக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
என்ன பலன்?
புலி காப்பகங்களை அதிகரிப்பது எப்படிப்பட்ட பலன்களைத் தரும்? "புலி காப்பகங்களை அதிகரிப்பது வரவேற்கத்தக்கதுதான். உலகச் சந்தையில் புலிகளின் எல்லாப் பாகங்களுக்கும் பெரும் தேவை இருப்பதால், தொடர்ச்சியாக அவை கள்ளவேட்டையாடப்படுகின்றன. கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலமே புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க முடியும்" என்கிறார் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, விழிப்புணர்வு முன்னெடுப்பு (Environment Monitoring & Awareness Initiative) அமைப்பைச் சேர்ந்த த. முருகவேள்.
இனப்பெருக்க காலம் நீங்கலாகப் புலிகள் தனிமை விரும்பிகள். அவை வாழ்வதற்குப் பெரும் நிலப்பரப்பு அவசியம். மனிதத் தேவைகள், வளர்ச்சிப் பணிகளுக்காக அவற்றின் வாழிடம் அழிக்கப்படுகிறது அல்லது துண்டாக்கப்படுகிறது.
மனித-விலங்கு எதிர்கொள்ளல்
தவிர, புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அவை வேட்டையாடி உண்ணும் மான் போன்ற இரைவிலங்குகள் எண்ணிக்கை குறைவதும் முக்கியக் காரணம். ஓர் ஆண்டில் 50 மான்கள் வேட்டை அல்லது வேறு காரணங்களால் கொல்லப்பட்டால், அது ஒரு புலியைக் கொல்வதற்குச் சமம். அத்துடன் இயற்கையான உணவு அழிக்கப்படுவது, காடுகளுக்கு அருகில் மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளைப் புலி வேட்டையாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
“இது போன்ற தருணத்தில்தான் மனித - விலங்கு எதிர்கொள்ளல் (Man - Animal conflict) அதிகரிக்கிறது. அதனால் புலிகளின் வாழ்விடத்தையும் அவற்றின் இரைவிலங்குகளையும் புலிக் காப்பகம் போன்ற நடவடிக்கைகளால் பாதுகாப்பது மிகவும் அவசியம்” என்கிறார் முருகவேள்.
பழங்குடி அறிவு
ஆனால், இப்படிப் புலி காப்பகங்களை அதிகரிப்பதால் மட்டும் புலி வேட்டையாடப்படுவது குறைந்துவிடாது என்கிறார் சத்தியமங்கலம் பகுதியில் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இயற்கை ஆர்வலர் சு.சந்திரசேகரன்:
“காட்டைப் பற்றிய அறிவைக் கொண்டவர்களால்தான் காட்டைப் பாதுகாக்க முடியும். அதேபோல, காடுகளிலேயே வசிக்கும் பழங்குடியினரால்தான் புலி வேட்டையாடப்படுவதைத் தடுக்க முடியும். புலிகளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கும் முக்கியக் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்” என்கிறார்.