Tuesday, 9 December 2014

பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி

இந்திய தயாரிப்பான பினாகா மார்க் 2 ராக்கெட் லாஞ்சர் சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
ஒடிஸாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் லாஞ்சரில் இருந்து சென்ற ராக்கெட் வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.
6 மற்றும் 12 ராக்கெட்களை 44 விநாடிகளில் ஏவும் ஆற்றலுடனும் பினாகா ராக்கெட் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 40 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை தாக்கும்.
இப்போது சோதனை செய்யப் பட்டுள்ள பினாகா மார்க் 2 ராக்கெட் லாஞ்சரில் 4 ராக்கெட் களை மட்டுமே ஒரு நேரத்தில் ஏவ முடியும். ஆனால் அதிகபட்ச மாக 60 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்க முடியும்.
4 அடுக்குகளை கொண்ட இந்த லாஞ்சரில் ஒரு சுற்று சோதனைதான் நடைபெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அடுத்தடுத்த சுற்று சோதனைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment