Sunday, 7 December 2014

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கணக்காளர், அதிகாரி பணி

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள Junior Accounts Officers (JAOs) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 31-1/2013Rectt.
பணி: Junior Accounts Officer (JAOs)
காலியிடங்கள்: 962
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.01.215 தேதியின்படி20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 31.12.2014 தேதியின்படி M.com, CA, Company Secretary, Icwa போன்ற ஏதாவதொரு தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி: 22.02.2015
தேர்வு மையம்: சென்னை
தேர்வு மையக்கோடு: 33
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC,ST,PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் தொலைதொடர்பு வட்டம் வாரியான காலியிடங்கள் விவரம், தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment