துணைப்பாடம்: கண்ணதாசன் கவியின்பம்
* முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர்.
* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 24.06.1927 அன்று பிறந்தார்.
* பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
* ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், ஏசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதை நூல்கள்.
* "இராசதண்டனை" என்பது கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை வைத்து அவர் படைத்த இனிய நாடகம்.
* ஆயிரம் தீவு அங்கயற்க்கண்ணி, வேலங்குடி திருவிழா முதலான பல புதினங்களை அவர் படைத்துள்ளார்.
* இவற்றின் சேரமான் காதலி என்ற புதினம் சாகித்திய அகாடமி பரிசை பெற்றுள்ளது.
* தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றின் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.
* இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களின் வரிசையில் தனக்கென்று தனி முத்திரையைப் * பதித்தவர் - கவியரசு கண்ணதாசன்
* வாழ்க்கையும் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளுமே கவிதைக்குரிய பொருள்களாம்.
புறநானூறு
சொற்பொருள்:
* நிகழ்ற்றிய - நிழல் செய்த
* துஞ்சான் - துயிலான்
* மா - விலங்கு
* நாழி - அளவுப்பெயர்
* ஈதல் - கொடுத்தல்
* துய்ப்போம் - நுகர்வோம்
* நடுநாள்யாமம் - நள்ளிரவு
* கல்லா -கல்வியறிவில்லாத
* தப்புந -இழக்க
இலக்கணக்குறிப்பு:
* வெண்குடை - பண்புத்தொகை
* நாழி - ஆகுபெயர்
* ஈதல் - தொழிற்பெயர்
* கல்லா ஒருவற்கும் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
* துய்ப்போம் - தன்மைப் பன்மை வினைமுற்று
ஆசிரியர் குறிப்பு:
* மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
* இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
* பத்துப்பாட்டில் "திருமுருகாற்றுப்படை", "நெடுநல்வாடை" எனும் இரு நூல்களை படைத்துள்ளார். இப்பாடலில் இவர், உலகியல் உண்மையைக் கூறியுள்ளார்.
நூல் குறிப்பு:
* புறம் + நான்கு + நூறு = புறநானூறு
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
* இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
* புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
* இப்பாடல்கள் வாயிலாகப் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியற்றை அறியலாம்.
குறுந்தொகை
நிலத்தினும் பெரிதே வானினும்
உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு
நட்பே
- தேவகுலத்தார்.
சொற்பொருள்:
* நீர் - கடல்
* கருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு
* உயர்ந்தன்று - உயர்ந்தது
* அளவின்று - அளவினையுடையது.
இலக்கணக்குறிப்பு:
* நிலத்தினும், வானினும், நீரினும் - உயர்வு சிறப்பும்மை
* கருங்கோல், பெருந்தேன் - பண்புத்தொகை
பிரித்தறிதல்:
* ஆரளவு - அருமை+அளவு
* கருங்கோல் - கருமை+ கோல்
* பெருந்தேன் - பெருமை+தேன்
நூல் குறிப்பு:
* குறுமை+தொகை = குறுந்தொகை
* குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
* இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
* பாரதம் பாடிய பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
* இப்பாடல்கள் குறைந்த அளவாக நான்கடிகளையும் அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.
* பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
* இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர், மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
* எட்டுத்தொகை நூல் - குறுந்தொகை
* குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை - 401
* ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
திருவிளையாடற் புராணம்
* பரஞ்சோதி முனிவர்
சொற்பொருள்:
* வையை நாடவன் - பாண்டியன்
* உய்ய - பிழைக்க
* இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
* தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ)) சுந்தரபாண்டியன்
* இன்னல் - துன்பம்
* நல்கினார் - அளித்தார்
* இறைஞ்சி - பணிந்து
* அளக்கில் கேள்வியார் - அளவற்ற கேள்வியறிவினர்.
* சிரம் துளக்கி - தலையசத்து
* புறம்பு - வெளியில்
* பையுள் - வருத்தம்
* நம்பி - தருமி
* கண்டம் - கழுத்து
* வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
* ஆர்அவை - (புலவர்) நிறைந்த அவை
* சீரணி - புகழ்வாய்ந்த
* வேணி - செஞ்சடை
* மீனவன் - மீன்கொடியை உடைய பாண்டியன்
* விபுதர் - புலவர்
* பொற்கிழி - பொன் முடிப்பு
* கிளத்தினேன் - சொன்னேன்
* ஓரான் - உணரான்
* அற்குற்ற - (அல்கு+ உற்ற) - இருளையொத்த
* நாற்றம் - நறுமணம்
* குழல் - கூந்தல்
* அல்கு - இரவு
* ஞானப்பூங்கோதை - உமையம்மை
* உம்பரார் பதி - தேவர் தலைவன் (இந்திரன்)
* கரந்தான் - மறைந்தான்
* நாவலன் - புலவர்
இலக்கணக் குறிப்பு:
* உரைத்து, இரந்து - வினையெச்சங்கள்
* சொல்லி, இறைஞ்சி - வினையெச்சங்கள்
* விளக்கி, சிறந்து - வினையெச்சங்கள்
* மகிழ்ந்த - தொழிற்பெயர்
* தூங்கிய, ஆயந்த - பெயரெச்சங்கள்
* நேர்ந்த - வினையெச்சம்
* கொண்டு, வைத்து - வினையெச்சங்கள்
* நோக்கி - வினையெச்சம்
* கிளத்தினேன் - தன்மை ஒருமை வினைமுற்று
* தேராக்கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
* புனைமலர் - வினைத்தொகை
* பற்றுவான், அஞ்சான் - வினையாலணையும் பெயர்கள்
* குற்றம் - தொழிற்பெயர்
* விழுந்து - வினையெச்சம்
* செந்நீ, வெம்மை - பண்புத்தொகை
* தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - பெயரெச்சங்கள்
ஆசிரியர் குறிப்பு:
* நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தார்.
* தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்றவர்
* மீனாட்சி சுந்தர தேசிகர்.
* பரஞ்சோதி முனிவர் துறவியாகச் சிவாலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
* மதுரை மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
* அந்நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணைங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென் மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
* திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
நூற்குறிப்பு:
* திருவிளையாடற் புராணம், மதுரைக் காண்டம் (பதினெட்டுப் படலம்), கூடற்காண்டம் (முப்பது படலம்), திருவாலவாய்க் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
* இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்தி மூன்று விருத்தப் பாக்கள் உள்ளன.
* மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளங்குகின்றன.
* இந்நூல், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுல் விரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
* தொடைநயம் பக்திச்சுவை மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
* உடல் முழுவதும் கண்களை உடையவர் - சிவபெருமான்
* பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவர் - நக்கீரனர்
* இறைவனிடம் பாடலைப் பெற்றுச் சென்றவர் - தருமி
* தமிழ்ப்புலவர்கள் இறைவனுக்கும் தமிழுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தவே திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்களை இயற்றியதாகக் கொள்ளலாம்.
* புலவர் தம் புலமைத் திறத்தை அறிய இறைவனை வேண்டிச் சங்கப் பலகையைப் பெற்றனர்.
* வங்கிய சேகர பாண்டியனின் மகன் வங்கிய சூடாமணியாண்டியன் மதுரையில் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
* சூடாமணிபாண்டியனுக்கு சண்பகப் பாண்டியன் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
No comments:
Post a Comment