சர்வதேச மலை நாள்: டிசம்பர் 11
நாம் உயிர் வாழ அடிப்படைக் காரணமாக இருக்கும் குடிநீர், தூய்மையான காற்று, உணவுப் பொருட்கள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் இருந்துதான் கிடைக்கின்றன.
'சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி' என்றே மலைகள் வர்ணிக்கப்படுகின்றன. நாம் மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் டிசம்பர் 11-ம் தேதி சர்வதேச மலை நாளாக அனுசரிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டை அகில உலக மலைகள் ஆண்டு என்று ஐ.நா. சபை அறிவித்திருந்தது. அந்த ஆண்டைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல், சர்வதேச மலை நாள் கடைப் பிடிக்கப்பட்டுவருகிறது.
நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த குறிஞ்சி நிலப் பகுதியாக விளங்குகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப் பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், செயற்கைக் காரணங்களால் தூண்டப்பட்டு நிகழ்ந்துள்ளன. நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிலும் தொன்மை வாய்ந்த நீலகிரி, நம் பண்பாட்டோடு இரண்டறக் கலந்த குறிஞ்சி நிலப் பகுதியாக விளங்குகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் நீலகிரி மலைப் பகுதியில் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், செயற்கைக் காரணங்களால் தூண்டப்பட்டு நிகழ்ந்துள்ளன.
பாறைகளின் மீது அமைந்துள்ள இந்த மலையின் மீது விதிமுறைகளை மீறிப் பல அடுக்குமாடி கட்டிடங்களும், போதிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாத வளர்ச்சித் திட்டங்களும் மலைச்சரிவையும் உயிர்ப்பலியையும் ஏற்படுத்திவருகின்றன. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின்படி, உலகில் உள்ள பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறுகிறது. நம் எதிர்காலச் சந்ததிகளின் வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல் இந்த மலைகளை நம்பி வாழும் உயிரினங்கள், தண்ணீரை வழங்கிவரும் காடுகளை அழிவின் கைகளில் இருந்து காக்க வேண்டும்.
No comments:
Post a Comment