Sunday, 7 December 2014

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

உரைநடை: கடற்பயணம்
* தமிழ்நாட்டு வாணிக வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது.
* உள்நாட்டு வாணிகத்தைவிட அயல்நாட்டு வாணிகத்திலேயே வருவாய் மிகுதி.
* அயல்நாட்டு வாணிகத்திலேயே தரைவழியாகச் செய்யும் வாணிகத்தைவிட, நீர் வழியாகச் செய்யும் வாணிகம் பெரும் பொருளைத் தரும்.
* அந்நாளில் கடல் வாணிகம் மிகவும் சிறந்திருந்தது.
* எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா, சீனம் போன்ற நாடுகள் தமிழர்களின் பொருள்களை விரும்பிப் பெற்றன.

தமிழரின் கடற்பயணம்:
* "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஒளவையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். இவையே தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத் தொடர்புக்கும் சான்றுகளாகும்.
* தொல்காப்பியம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
* தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "பொருள்வயிற் பிரிவு" விளக்குகிறது. இப்பிரிவு "காலில்(தரைவழிப் பிரிதல்) களத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு" என இரு வகைப்படும்.

யவனர்: * தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் "யவனர்" என அழைத்தனர்.
கப்பல் கட்டுதல்:* "கலம்செய் கம்மியர்" என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
* அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:* நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அகேகாட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.
கடசலைக் குறிக்கும் சொற்கள்:* ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி.
மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:* கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மதிவை, பஃறி, ஓடம்.
* கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும்.

பட்டினப்பாலை:
* புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.
* அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.
* துறைமுகங்கள்: காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை

முசிறி:
* முசிறி சேரர் துறைமுகம்.
* அங்குச் "சுள்ளி" என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன.
* யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது.

கொற்கை:
* கொற்கை பாண்டிய துறைமுகம்.
* இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.
* மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.
* "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என மதுரைக்காஞ்சி கூறுகிறது.
* ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம்.
* கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்):
* இது சோழர்களின் துறைமுகம்.
* இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.
* அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

ஏற்றுமதி இறக்குமதி:
* பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.
* தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.
* சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.
* கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு பயிரிடப்பட்டது.
* கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப்பெற்று வருகின்றன.
* பட்டினப் பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் ஏற்றுமதியான பொருள்கள் - இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண் துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி.

கடல் கடந்த தமிழ்
* தமிழ் - கிரேக்கம்
* அரிசி - ஒரைஸா
* கருவூர் - கரோரா
* காவிரி - கபிரில்
* குமரி - கொமாரி
* சோபட்டினம் - சோபட்னா
* தொண்டி - திண்டிஸ்
* மதுரை - மதோரா
* முசிறி - முசிரில்

திணையும் - நிலமும்
* குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்
* மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
* நெய்தல் - கடலும் கடல்சார்ந்த இடமும்
* பாலை - மணலும் மணல்சார்ந்த இடமும்.

துணைப்பாடம்: கெலன் கெல்லர்
* அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கியவர்.
* இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் எனக் கேட்பேன் என்றவர் கெலன்.
* பத்தொன்பது மாதக் குழந்தையாக இருந்த போது கெலன் கெல்லருக்கு ஏற்பட்ட கொடிய நோய் - கண்கள் பாரா, காதுகள் கேளா, வாய்பேசாது.
* கென் கெல்லர் தனது ஆறாவது வயதில் அலெக்சாண்டர் கிரகாம்பெல் உதவியுடன் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்.
* பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது.
* கெலனின் ஆசிரியர் - அன்னிசல்லிவான்
* ஹோரஸ்மான் பால்டனில் உள்ள காது கேளாதோருக்கான பள்ளியிலும், நியூயார்க்கில் உள்ள ரைட்ஹூமாசன் பள்ளியிலும் முறைப்படி பயின்றார்.
* கெலன் பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்.
* ஆசிரியை அன்னிசல்லிவான் அளித்த பயிற்சியின் பயனாக கேம்பிரிட்ஜ் ரெட்கிளிஃப் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இளங்கலைப்பட்ட வகுப்பில் சேர்ந்தார்.
* கண்ணிழந்தோருக்கும், காதுகேளாதோர்க்கும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர் - கெலன்.
* பார்வையற்றோருக்கென தேசிய நூலகம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார்.
* கெலன் கெல்லர் நிதி என ஒன்றைத் தொடங்கி, அந்நிதியில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரைக் கோடியை அப்பள்ளிகளுக்கு வழங்கினார்.
* ஆசிரியர் அன்னிசல்லிவான் 1930 ஆண் ஆண்டு இறந்தார்.
* அன்னிசல்லிவான் இறந்த பிறகு பாலி தாமசன் உதவியுடன் வாழ்ந்தார் கெல்வின்.
* கெலன் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார்.
* கடவுளின் அருளால் மூன்று நாள் மட்டும் தமக்குப் பார்வை கிட்டியதாகக் கனவு கண்டார் கெலன்.
* "வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது" எனக் கூறியவர் கெலன்.
* நீங்கள் கண்பார்வை அற்றவராகவும் காது கேளாதவராகவும் இருந்தும் கூட எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என கெலனிடம் கேட்டவர் - விக்டோரியா மகாராணி.
* கெலன் கெல்லர் முதல் நாள் பார்த்தது - ஆசிரியர்.
* இரண்டாவது நாள் கதிரவன் தோன்றுவதைக் கண்டார்.
* புகழ் பெற்ற லியினார் டோ டாவின்சி கலைஞர்களின் ஓவியங்களையும் கலைப் பொருள்களையும் கண்டு மகிழ்ந்தார்.
* மூன்றாவது நாள் நகின் கிழக்கு பக்கத்திலுள்ள ஆற்றுப்பாலத்தை உற்று நோக்கினார். நியூயார்க்கில் உள்ள கம்பீரமான இரட்டைக் கோபுரக் கட்டடத்தைக் கண்டு களித்தார்.
* மக்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி, துண்பத்தைப் பார்த்து புரிந்துக் கொண்டார்.
* செகப்பிரியருடைய நாடகத்தைப் பார்த்தார்.
* 1880 சூன் 27ல் அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்து சாதனையாளராகத் திகழ்ந்த கெலன், 1968 ஆம் ஆண்டு சூன் முதல் நாள் இவ்வுலகை வாழ்வை நீத்தார். அவரது உடல் வாஷிங்டனில் அன்னி, பாலி ஆகியோரது உடல்களுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
* உலகின் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப் பெற்றவர் கெலன்.

திருக்குறள்
சொற்பொருள்:
* செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
* தலை - முதன்மை
* போழ்து - பொழுது
* ஈயப்படும் - அளிக்கப்படும்
* ஆவி உணவு - தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
* ஆன்றோர் - கல்வி, கேளவி, பண்பு
* ஒப்பர் - நிகராவர்
* ஒற்கம் - தளர்ச்சி
* ஊற்று - ஊன்றுகோல்
* ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
* ஆன்ற - நிறைந்த
* வணங்கிய - பணிவான
* அற்றே - போன்றதே
* எனைத்தானும் - எவ்வளவு சிறிதே ஆயினும்
* அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
* பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும்
* பேதைமை - அறியாமையின் பாற்பட்ட தீய சொற்கள்.
* இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
* ஈண்டிய ஆய்ந்தறிந்த
* தகையவே - நுட்பமாகிய
* வணங்கிய - பணிவான
* வாயினராதல் - மொழியினை உடையவர்
* வாயுணர்வின் மாக்கள் -உணவுச் சுவை மட்டும் அறிந்தோர்.
* அவியினும் - இறந்தாலும்

இலக்கணக் குறிப்பு:
* வயிற்றுக்கும் - இழிவு சிறப்பும்மை
* கேட்க - வியங்கோள் வினைமுற்று
* இழுக்கல், ஒழுக்கம் - தொழிற்பெயர்கள்
* ஆன்ற - பெயரெச்சம்
* அவியினும் வாழியினும் - எண்ணும்மை
* அவியுணவு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
* ஊற்றுக்கோல் - ஊன்று கோல் என்பதன் வலித்தல் விகாரம்
* ஆன்ற பெருமை - பெயரெச்சம்
* கேளாத் தகையவே - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

பிரித்தறிதல்:
* சுவையுணரா = சுவை + உணரா
* வாயுணர்வு = வாய் + உணர்வு
* செவிக்குணவு = செவிக்கு + உணவு

பொதுவான குறிப்புகள்:
* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
* திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
* ஏழு எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாகளில் இடம்பெற்றுள்ளது.
* அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்தொகை ஏழு.
* மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு.
* செவிக்குணவாவது - கேள்வி
* ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - ஊற்றுக்கோல்
* உடைமைகள் பத்துதிருக்குறலில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன. அவை:
அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை .

சீட்டுக்கவி
சொற்பொருள்:
* கந்துகம் - பந்து
* கோணம் - வாட்படை
* குந்தம் - சூலம்
* கொடை - வேனிற்காலம்
* பாடலம் - பாதிரிப் பூ
* மா - மாமரம்
* சடிலம் - சடை
* கிள்ளை - கிலி
* கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை - குதிரை

இலக்கணக் குறிப்பு:
* எழுதி, புரந்து - வினையெச்சம்
* படித்த, தீர்த்த - பெயரெச்சம்
* பாடாத, பறவாத, சூடாத - எதிர்மறைப் பெயரெச்சம்
* விடல் - தொழிற்பெயர்.

ஆசிரியர் குறிப்பு:
* அந்தக்கவி வீரராகவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து பொன் விளைந்த கலதூரில் வாழ்ந்தவர்.
* தந்தை - வடுகநாதர்.
* இவர் பிறவிலேயே கண் பார்வை அற்றவர்.
* எனினும் கேள்வியறிவின் வாயிலாக கல்வி பயின்றார்.
* இவர் ஏடுகள் ஏழுதாமல் தன் மனத்திலேயே எழுதிப் படித்தார் என அவரே கூறுகிறார்.
* இலங்கை சென்று பரராசசேகர மன்னனை பாடி ஒரு யானை, போற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று ஊர் திரும்பினார்.

படைத்த நூல்கள்:
* திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை.

நூல் குறிப்பு:
* இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
* இதில் 110 புலவர்கள் பாடிய 113 பாடல்கள் உள்ளன.
* புலவர், பெருமாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப் பெறவேண்டி, ஒலைச்சீட்டில் கவியாக எழுதி அனுப்புவர். * அக்கவிதைக்கு சீட்டுக்கவி எனப் பெயர்.
* இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

No comments:

Post a Comment