டைம் இதழின் ஆன்லைன் வாசகர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்த (2014) ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வரும் அமெரிக்காவின் டைம் இதழ், இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பை இணையத்தில் நடத்தியது.
டைம் இதழின் ஆன்லைன் வாசகர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்த (2014) ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
முன்னதாக, டைம் இதழ் சார்பில் உலகின் தலைசிறந்த 8 பேரது பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதில், நரேந்திர மோடி இடம் பெறவில்லை. இருப்பினும், ஆன்லைனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாசகர்கள் அவரை இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்வு செய்துள்ளனர். அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
மொத்தம் பதிவான 5 லட்சம் வாக்குகளில் 16%-க்கும் மேலான வாக்குகள் மோடிக்கு கிடைத்துள்ளன. இந்தியாவில் இருந்து பெருமளவில் வாசகர்கள் வாக்களித்துள்ளது மோடியின் வெற்றிக்கு காரணம் என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து போராடி வரும் அப்பகுதியைச் சேர்ந்தப் போராட்டக்காரர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாயி, எபோலா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முறையே 3,4,5-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
1927-ம் ஆண்டு முதல் டைம் இதழ் இந்த தனிநபர்கள் இந்த கவுரவத்தை அளித்து வருகிறது.
வாசகர்களின் கருத்துக் கணிப்பு டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் டிசம்பர் 8-ம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. டிசம்பர் 10-ம் தேதி டைம் இதழின் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment