Saturday, 6 December 2014

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

மொழித்திறன் பயிற்சி
* சுவிட்ச் - பொத்தான்
* ஐஸ்வாட்டர் - குளிர் நீர்
* கூல்ட்ரிங்ஸ் - குளிர்பானம்
* கிரைண்டர் - மின் அரைவை
* பிரிஜ் - குளிர்சாதனப் பெட்டி
* டீ - தேநீர்
* வாஷிங்மெஷின் - சலவை இயந்திரம்
* டெலிபோன் - தொலைபேசி

பழமொழி அறிவோம்:
* 1. Bend the tree while it is young
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* 2. As is the mother, so is her daughter
தாயைப்போலப் பிள்ளை, நூலைப் போல சேலை
* 3.A friend in need is a friend indeed
 உயிர்காப்பான் தோழன்
* 4.A man of courage never wants weapons
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
* 5.Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்.
* 6.In a fiddler's house all are dancers
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
* 7. No man can flay a stone
கல்லிலே நார் உரிக்க முடியுமா?
* 8. Difficulties give way to diligence
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
* 9. Command your man and do it your self
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
* 10.Charity is a double blessing
தருமம் தலை காக்கும்.

உரைநடை: ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
வரலாற்று ஆவணம்:
* ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.
இளமைக்காலம்:
* ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
* தந்தை - திருவேங்கடம்
* தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
* "எம்பார்" என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்:
* இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
* அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துபாசி:
* ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
* "துய்ப்ளே" என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு:
* ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736 ஆம் ஆண்டு முதல் 1761 ஆண் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
* தம் நாட்குறிப்புக்கு "தினப்படிச் செய்திக்குறிப்பு", "சொஸ்த லிகிதம்" எனப் பெயரிட்டார்.
வரலாற்றுச் செய்திகள்:
* பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோலிவியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
* ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
வணிகச் செய்தி:* துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
* புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
* அது குறித்து, "நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கல்யாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் போலவும், தேவாமிர்த்ததைச் சுவைத்ததுபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
* ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும் பகுதி வாணிகச் செய்திகளையே விவரிக்கின்றன.
தண்டனைச் செய்தி:
* நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
* திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டு நிலை:
* ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் * திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவர்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்:
* முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு "மண்சுபேதார்" என்னும் பட்டம் வழங்கினார்.
* பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அமாமாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
* ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
* அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.

பெப்பிசு:
* உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி - பெப்பிசு
* இந்தியாவின் பெப்பிசு - ஆனந்தரங்கர்
* நாட்குறிப்பு வேந்தர் - ஆனந்தரங்கர்

பிறமொழி சொற்கள்:
* சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
* லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
* வளவு = வீடு
* துபாசி = இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
* டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
* இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
* இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானமது.

பிற குறிப்புகள்:
* அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கரத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
* கே.கே.பிள்ளை, "ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்றார்.
* "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்" - வ.வே.சு
* துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கருக்குத் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்:
* ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
* கள்வன் நொண்டிச் சிந்து
* ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
* ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனுவாசக்கவி (வடமொழி)
* ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

செய்யுள்: முத்தொள்ளாயிரம்
சொற்பொருள்:
* உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
* மலை - வளமை
* வள் - நெருக்கம்
* விசும்பு - வானம்
* பரவு - புறா
* நிறை - எடை
* ஈர்த்து - அறுத்து
* துலை - துலாக்கோல் (தராசு)
* நிறை - ஒழுக்கம்
* மேனி - உடல்
* மறுப்பு - தந்தம்
* ஊசி - எழுத்தாணி
* மறம் - வீரம்
* கனல் - நெருப்பு
* மாறன் - பாண்டியன்
* களிறு - யானை

இலக்கணக் குறிப்பு:
* மாமலை - உரிச்சொற்றொடர்
* நெடுமதில் - பண்புத்தொகை
* வாங்குவில் - வினைத்தொகை
* உயர்துலை - வினைத்தொகை
* குறையா - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
* இலைவேல் - உவமைத்தொகை
* மருப்பூசி, மார்போலை - உருவகம்
* மாறன்களிறு - ஆறாம் வேற்றுமைத் தொகை

பிரித்தெழுதுக:
* தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
* வில்லெழுதி = வில் + எழுதி
* பூட்டுமின் = பூட்டு + மின்
* மருப்பூசி = மறுப்பு + ஊசி
* எமதென்று = எமது + என்று
* மொய்யிலை = மெய் + இலை

நூல் குறிப்பு:
* மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைகத் கொண்டது.
* ஆயினும்இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
* "புறத்திரட்டு" என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
* இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
* விசும்பு - வானம்
* துலை - துலாக்கோல்
* மருப்பு - தந்தம்
* கனல் - நெருப்பு
* களிறு - யானை

கலிங்கத்துப்பரணி
சொற்பொருள்:
* தீயின்வாய் - நெருப்பில்
* சிந்தை - எண்ணம்
* கூர - மிக
* நவ்வி - மான்
* முகில் - மேகம்
* மதி - நிலவு
* உகு - சொரிந்த(பொழிந்த
* புனல் - நீர்

இலக்கணக் குறிப்பு:
* வெந்து, உலர்ந்து, எனா, கூர - வினையெச்சங்கள்
* செந்நாய் - பண்புத் தொகை
* கருமுகிலும் , வெண்மதியும் - எண்ணும்மை
* கருமுகில், வெண்மதி - பண்புத்தொகைகள்
* கடக்க ஓடி, இளைத்து - வினையெச்சங்கள்
* வியர்த்த வியர்வன்றோ - பெயரெச்சம்

பிரித்தெழுதுக:
* வாயினீர் - வாயின் + நீர்
* வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
* காடிதனை  - காடு + இதனை
* கருமுகில் - கருமை + முகில்
* வெண்மதி - வெண்மை + மதி

ஆசிரியர் குறிப்பு:
* கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.
* இவர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர். முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
* பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
* இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
* இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு.

நூற் குறிப்பு:
* ஆயிரக்கணக்கான யானைகளாப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
* இது தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
* பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப் பரணி.
* கலிங்க மன்னன் அனந்தபன்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
* அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்விவுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
* இந்நூல் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
* சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக் கூத்தர் இந்நூலைத் "தென்தமிழ்த் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார்.
பரணி இலக்கியங்கள்:
* தக்கயாகப்பரணி
* மோகவதைப்பரணி
* சீனத்துப்பரணி
* வங்கத்துப்பரணி
* பாசவதைப்பரணி
* திராவிடத்துப்பரணி
* ஆயிரம் யானை அமரிடை வென்ற
* மாணவ னுக்கு வகுப்பது பரணி
- பன்னிரு பாட்டியல்
* பேரறிஞர் அண்ணா "எனக்கு விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே" என்றார்.

No comments:

Post a Comment