பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரிகள் பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 22 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், இன்வெஸ்டிகேஷன், டெக்னிகல் அப்ரைஸல், ஸ்டேட்டிஸ்டிஸியன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ளன.
வயது: 01.11.2014 அன்று 21-50. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வயதுத் தகுதி உள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது, கல்வி ஆகிய தகுதிகள் குறித்த விரிவான விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி./ எஸ்.டி./ மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிற பிரிவினருக்கு ரூ. 600. கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு அகமதாபாத், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுடையோர் http://www.bankofindia.co.in/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாள்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2014
ஆன்லைன் தேர்வு நாள்: 22.01.2015 (மாறுதலுக்குட்பட்டது)
கூடுதல் விவரங்களுக்கு: http://www.bankofindia.co.in/
No comments:
Post a Comment