Saturday, 28 December 2013

பூச்சியுண்ணும் அபூர்வ தாவரம்

பூச்சி, விலங்குகளை உண்ணும் தாவரம் பற்றி அச்சுறுத்தும் வகையில் ஹாலிவுட் படங்களில் சில காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால், அது போன்று பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும் பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால், நெப்பந்த சேயி காசியானா என்பது தாவரவியல் பெயர். இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம்மிக்க காடுகள், சதுப்பு நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து, இது சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டுமில்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம்.
இவை அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவதற்குக் காரணம், உயிர் வாழ்வதற்குத் தேவையான புரதச் சத்துகள், அது வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.
பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. உயரம் வரை. பூவின் கழுத்து பகுதியில் மூடி போன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும், கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.
தேன் வாசமும், பூவின் நிறமும் பட்டாம் பூச்சிகள், வண்டினங்களை கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள், பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும்.
ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெல்லிய இழை போன்ற சிறுமுடிகள் உட்புறம் சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும். பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்து போகும்.
அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்து போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடி போலச் செயல்படும்.
பூச்சியுண்ணும் தாவரங்கள் வட இந்தி யாவில் மட்டுமே இயற்கையாக இருந்து வருகின்றன. கடந்த 1975ஆம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவர வியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசேயி செடிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு செடி 38 ஆண்டுகளாக இப்போதும் இருக்கிறது.
ஏற்காடு தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த ஏற்காடு இளங்கோ இது பற்றி கூறுகையில், "நாங்கள் பாதுகாத்து வரும் நெப்பந்தசேயி செடி, பெண் தாவரம் என்ற விவரம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. அப்பத்தான் இது முதல்முதலா பூத்தது. பக்கத்துல ஆண் நெப்பந்தசேயி செடி இருந்தால் மட்டுமே இதில் மகரந்தச் சேர்க்கை நடக்கும். பிறகு இனவிருத்திக்கான விதைகள் உற்பத்தியாகும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை.
சமீபத்தில் புது முயற்சியா நெப்பந்தசேயி செடியின் ஒரு பகுதியை வெட்டி, தண்ணீரில் போட்டு வெச்சோம். 15 நாளுக்குப் பின்னாடி, அந்த செடி வேர் விட ஆரம்பிச்சது. இது மாதிரி மூன்று நெப்பந்தசேயி செடிகள வளர்த்து வர்றோம். என்ன ஒரே விஷயம்னா இதன்மூலம் பெண் நெப்பந்தசேயி செடிய மட்டுமே உருவாக்க முடியும்" என்றார்.

1895 டிசம்பர் 28 - சினிமாவுக்கு 'டிக்கெட்' அறிமுகமான நாள்

1895 டிசம்பர் 28 - சினிமாவுக்கு 'டிக்கெட்' அறிமுகமான நாள்


பாரிஸ் நகரில் இந்த நாளில் தான் உலகில் முதன் முறையாக பணம் வாங்கி கொண்டு சினிமா காட்டப்பட்டது.
சினிமா காட்டும் கருவியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் 1830 முதலே நடந்தன. ஜோசப் (பெல்ஜியம்),சைமன் (ஆஸ்ட்ரியா) ஆகியோர் பல ஓவியங்களை இணைத்து அசையும் படங்களை உருவாக்கினர். 1890 வரை இது பெனாகிஸ்டோஸ்கோப் எனப்பட்டது. எடிசனும் அவரது உதவியாளர் டிக்ஸனும் கின்டோகிராப்பை கண்டுபிடித்தனர். 1891-ல் எடிசன் கின்டோஸ்கோப்பை உருவாக்கினார். அதில் ஒருவர் மட்டுமே படம் பார்க்க முடியும்.
1894-ல் லூமியர் சகோதரர்கள் கேமராவும் புரொஜக்டரும் இணைந்த சினிமாடோகிராபை கண்டுபிடித்தனர். அதில் பலர் ஒரே நேரத்தில் படம் பார்க்க முடிந்ததாக இருந்தது.
லூமியர் சகோதரர்கள் தங்களது தொழிற்சாலையில் இருந்து பணியாளர்கள் வெளியே வருவதை படம் பிடித்து முதலில் மக்களுக்கு இலவசமாகக் காட்டினர். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் அன்றாட நிகழ்வுகளை படமாக பிடித்தனர்.அதை இதே நாளில்தான் மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சினிமாவாக காண்பித்தனர். சினிமா படம் எடுப்பதற்கு வேலையாட்களை அமர்த்தி கைகளில் கருவியைக் கொடுத்து உலகம் பூராவும் அனுப்பினர்.
அமெரிக்காவின் முதல் தியேட்டர் 1896-ல் திறக்கப்பட்டது. 1909-ல் நியூயார்க் டைம்ஸ் முதல் சினிமா விமர்சனத்தை வெளியிட்டது.1911-ல் ஹாலிவுட்டில் முதல் ஸ்டுடியோ திறக்கப்பட்டது.1914-ல் சார்லி சாப்ளின் சினிமாவுக்குள் நுழைந்தார்.

Friday, 27 December 2013

Portrait of a ghatam-maker

Portrait of a ghatam-maker

“Making a ghatam is as painful as delivering a baby,” says K. Meenakshi, Sangeet Natak Akademy award (Puraskar) winner for 2013.

The Akademy has honoured the 61-year-old from Manamadurai, a potters’ town in Sivaganga district, for her contribution to instrument making – ghatam, an ancient percussion instrument of South India.

Meenakshi, whose life is confined to the town ever since her husband died in May 2005, says: “I do not know what the award is about or why they chose me. I have not done anything great,” she told The Hindu .

As the legend goes, she has been involved in the making of ghatams since she was 15, a year after she got married. She has been tapping mud pots for more than four and a half decades.

“As age is catching up, it is extremely painful,” she says. Hers is the only family making ghatam in Manamadurai for the past century.

“Not all pots we bake turn into ghatams,” she says. Only 40 per cent will come out with the desired tone and shruti and a few of them will be selected by vidwans.

At work, she taps the outer surface to ensure that the thickness is ‘even’ and produces the desired tone and ‘shruti’ after her son, U.V.K. Ramesh, the fourth generation artisan makes the clay pot with a narrow mouth.

It is a very strenuous and skilled work as she has to keep taping the outer wall for hours with one hand inside the pot holding on to a specially made heavy stone and the right hand with a flat wooden hammer on the outer surface.

Ramesh, a school dropout, is willing to teach the art to pot makers outside the family. But there are no takers.

The family tradition is all set to continue as the fifth generation in the family is getting ready with her grandson Hariharan, a class X student, being trained in the making of ghatams.


“I do not know what the award is about or why they chose me. I have not done anything great”

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.

பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.

படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.

இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.

குடும்பம்: 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.

கற்றல்:

கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.

பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்

தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.

பட்டுக்கோட்டையாரின் வினா:

சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.

- 189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.

- 1955 ஆம் ஆண்டு நல்லதச் சொன்னா நாத்திகனா என்பது அவர் முதல் பாடலாகும். பாரதிதாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக்க கொண்டார்.

பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:

01. "தூங்காதே தம்பி தூங்காதே

சேம்பேறி என்ற சொல் வாங்கதே"

02. "சின்னப்பயலே சின்னப் பயலே

சேதிகேளடா ---------------

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி"

03. "வசதி படைச்சவன் தரமாட்டான்

வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"

"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு

வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"

04. "குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"

05. ‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’

06. "திருடாதே பாப்பா திருடாதே

-----------

கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி

எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்

போனால் பதுக்கிற வேலையும் இருக்காது

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கொடுக்கிற நோக்கம் வளராது" என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை காலத்தால் அழியாத பாடல்களை எளிமையாகப் பாடியவர்.

மகத்துவம்

தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.

திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.

பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.

'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.

இறுதிக்காலம்:

08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மரமடைந்தார். திமுகவின் மேடைப் பாடகர். அவர் நடித்த நாடகம் "என் தங்கை, கவியின் கனவு".

பட்டம்: கோயமுத்தூர் தொழிலாளர் சங்கம், மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும், பாவேந்தர் விருதினை தமிழக அரசும் வழங்கிக் சிறப்பித்துள்ளது. இவரது பாடல்கள் தமிழகத அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

திரைப்பட உலகில் 180 பாடல்கள்தான் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.

1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.

1981ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

1993ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மணி மண்டபம்:

தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய - போக்குவரத்து

இந்திய - போக்குவரத்து

* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.

* இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

* உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

* உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.

* இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.

* தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார் 63,140 கி.மீ.

* இந்திய இரயில்வே தினமும் 14,444 தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.

* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம் 47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.

* இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge - 7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

* இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.

* இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

* கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.

* இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.

* புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும், ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.

* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.

* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.

* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம், தொடங்கப்பட்ட ஆண்டு, பயணிக்கும் தூரங்கள்(கிமீ):

01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968 கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி

02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.

03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி

04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414 கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.

05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.

06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.

07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.

08. மத்திய இரயில்வே (CR) 05.11.1951 -ம் ஆண்டு முதல் 3905 கி.மீ தலைமையிடம் மும்பை

09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல் 6182 கி.மீ தலைமையிடம் மும்பை

10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி

11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்

12. மேற்குமத்திய இரயில்வே (WCR) 01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்

13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்

14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்

15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்

16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்

சாலைப் போக்குவரத்து

* இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.

* இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.

* சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம வழிச் சாலைகள், சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.

* இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

* தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)

* வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார் 7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* தேசி நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

* இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது

வான்வழிப் போக்குவரத்து

* இந்தியாவில் மொத்தம் 5 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01. இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம், பாலம், தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா, சாந்தா குரூஸ் விமான நிலையம், கல்கத்தா 04. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

* ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.

* ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.



நீர்வழிப் போக்குவரத்து

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.

* இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

* வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் பெரிய துறைமுகங்களும், சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

* மேற்குக் கடற்கரையில் கண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும், கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தா, பாரதீப் விசாகப்பட்டினம்,

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.

* கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.

* விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.

* சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம் 12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.

* மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.

* மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.

* மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.

* போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.

* கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.

* நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.

தாவரங்களில் பழங்கள், பூக்கள் நிறமி

தாவரங்களில் பழங்கள், பூக்கள் போன்றவை பல்வேறு நிறங்களில் இருப்பதற்கு அதன் செல்களில் உள்ள நிறமிகளே காரணம்.
வாழைப்பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு ஜான் தோபிள்ஸ் என்ற நிறமியும், இவற்றின் தோல் பச்சையாக இருப்பதற்கு குளோரோஸ்பில் என்ற நிறமியும், காரட் ஆரஞ்சு நிறமாக இருப்பதற்கு காரோட்டினாய்டு என்ற நிறமியும் தக்காளி சிவப்பு நிறமாக இருப்பதற்கு லைக்கேயிள் என்ற நிறமியும் காரணம்.

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்

* Art.174-ன்படி மாநிலத்தின் சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை, அவ்வப்போது தேவைப்படும் இடத்திலும், உரிய காலத்திலும் கூட்டப்பட வேண்டும்.

* எப்படியிருப்பினும் ஒரு கூட்டத்துக்கும் மற்றொரு கூட்டத்துக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.

* ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒரு சபையின் கூட்டத் தொடரை முடித்துவிடலாம், அல்லது சட்டப் பேரவையாக இருப்பின் கலைக்கலாம். அதாவது மாநில சட்ட பேரவை ஆண்டுக்கு இரு முறையாவது கூட்ட வேண்டும் என்பதே அரசியலமைப்பின் வரை முறையாகும்.

* இந்தியா விடுதலை பெற்ற அதே நாளில்தான் ஜம்மு-காஷ்மீரும் விடுதலை பெற்றது.

* அப்போது அங்கு மன்னராட்சி நடைமுறையில் இருந்தது. ஜம்மூ-காஷ்மீர், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாமல் தனித்த நாடாகவே நீடிக்க விரும்பியது. அவ்வாறு நீடிக்க முயற்சித்தது.

* எனினும் மக்களின் பாகிஸ்தானின் தாக்குதலுக்குட்பட்டதன் காரணமாக, அக்டோபர் 26,1947-ல் இந்தியாவுடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் ஜம்மு-காஷ்மீரின் சார்பாக அதன் மன்னர் ஹரி சிங் கையெழுத்திட்டார்.

* எனினும் மக்களின் விருப்பம் இதில் வெளிப்படாதிருந்ததைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் ஒரு முழு மாநிலத்தன்மையுடன் இந்தியாவுடன் இணைக்கப்படாமல், படிப்படியாக இணையும் மாநிலமாகவே கருதப்பட்டது.

* ஜம்மூ-காஷ்மீரின் அரசியல் நிர்ணயசபை 17.11.1957-ல் இணைப்பை உறுதி செய்தது.

* இப்படி இணைந்ததால் தான் காஷ்மீருக்கு ஒரு தனி அந்தஸ்து தரவேண்டியதாயிற்று.

* அரசியலமைப்பின் Art.370 ஜம்மூ-காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை வரையறுத்துள்ளது.

* இந்த தனி அந்தஸ்து, அம்மாநிலத்துடன், இந்தியா கொண்டிருந்த ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்டுள்ளது.

* ஜம்மு-காஷ்மீருக்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. அதன்படியே அம்மாநிலம் இயங்குகிறது. இந்த அரசியலமைப்பு ஜனவரி 26,1957 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் தலைப்பின் மீதும், பாராளுமன்றம் சட்டமியற்ற இயலாது.

* மேலும் மூன்று பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடமே உள்ளது.

* மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கு கொள்ள விரும்புவோர், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

* அது போலவே அங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும், ஜம்மூ-காஷ்மீர் மாநிலப் பிரஜைகளுக்கே உரிமையுண்டு.

* சொத்துரிமை தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிப்படை உரிமையாக நடைமுறையில் உள்ளது.

* தேசிய நெருக்கடி நிலையைப் பொறுத்தவரை, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக மட்டுமே ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்தப்பட இயலும்.

* அதாவது ஆயுதமேந்திய உள்நாட்டுக் கலவரம் காரணமாக கொண்டு வரப்படும் நெருக்கடிநிலையை ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்த இயலாது.

* அரசியலமைப்பு இயந்திரம் சரிவர இயங்காத சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை ஆளுநர் ஆட்சியையும் பிரகடனப்படுத்த இயலும்.

* ஜம்மூ-காஷ்மீரின் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலின்றி, அதன் எல்லைகளில் எந்தவித மாற்றத்தையும், பாராளுமன்றம் மேற்கொள்ள இயலாது.

* ஜம்மூ-காஷ்மீர் மாநில ஆளுநரை நியமிக்கும்போது அம்மாநிலத்தை கலந்தாலோசித்த பின்னரே பாராளுமன்றம் நியமிக்க இயலும்.

* பாராளுமன்றம் இயற்றும் முன் தடுப்புப் பாதுகாவல் சட்டங்கள் ஜம்மூ-காஷ்மீருக்கு தானாகவே பொருந்தாது.

* அத்தகைய சட்டங்கள் அம்மாநில சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே செல்லத்தக்கவை.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி நெருக்கடி நிலையை பாராளுமன்றம் அறிவிக்க இயலாது.

* இந்திய அரசியலமைப்பின் பகுதி-IV-ல் சொல்லப் பட்டுள்ள வழிமுறைக்கோட்பாடுகள் எதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது.

மத்திய மாநில உறவுகள் - THE CENTRE - STATE RELATIONS

* இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி அம்சங்கள் சிலவற்றை உள்ளடக்கிய ஒற்றையாட்சி முறைக்கு வழி செய்கிறது.

* சில அறிஞர்கள் நமது இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் தழுவல் என்பர்.

* மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயான அதிகாரப் பங்கீடு முறை 1935-ம் ஆண்டு சட்ட அமைப்பை சிறிது உள்ளடக்கி இருக்கிறது.

* இன்றைய அரசியல் சட்டம் மைய மாநில அரசுகளுக்கிடையேயான சட்டமியற்றும் துறை அதிகாரங்Kலை மூன்று பட்டியல்களாக பகுக்கிறது.

அவை முறையே, மைய, மாநில மற்றும் பொது அதிகாரப் பட்டியல்களாகும். மைய அரசின் அதிகாரப்பட்டியலில் 97 துறைகள் அடங்கும். இதுவே மிகப் பெரிய அதிகாரப்பட்டியலாகும்.

* மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் 66 துறைகளும், பொது அதிகாரப் பட்டியலில் 47 துறைகளும் அடங்கும்.

* மத்திய மாநில உறவுகள் குறித்து 1969-ல் இராஜமன்னார் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இந்திய ஆட்சிப் பணிகள் பணியிடங்களைக் கலைக்கப் பரிந்துரை வழங்கியது.

* 1983-ல் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய சர்க்காரியா குழு நியமிக்கப்பட்டது.

மத்திய மாநில தேர்வாணையங்கள்

மத்திய மாநில தேர்வாணையங்கள்

அரசியமைப்பின் அடிப்படைக் கூறுகள்

பல்வேறு உச்சநீதிமன்ற வழக்குகளில் அரசியலமைப்பில் கீழ்வரும் அம்சங்களை அடிப்படைக் கூறுகளாகப் பட்டியலிட்டுள்ளனர்ச அவை:

01. அரசியலமைப்பின் இறையாண்மை

02. குடியரசு

03. மக்களாட்சி அரசு முறை

04. சமய சார்பாற்ற தன்மை

05. அதிகாரப் பிரிவினை

06. கூட்டாட்சி இயல்பு

07. சம அந்தஸ்து மற்றும் சம வாய்ப்புகள்

08. சமயச் சார்பின்மையும் மனச்சான்று சுதந்திரமும்

09. நீதியின் ஆட்சி ஆகியன.



மத்திய மாநில தேர்வாணையங்கள்

* அரசியலமைப்பின்படி அமைந்தவை மத்திய மாநில தேர்வாணையங்கள். ஷரத்து 315ன் படி ஒரு மையத் தேர்வாணையமும், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு தேர்வாணையமும் (State Public Service Commission) இருக்க வேண்டும்.

* மத்திய தேர்வாணையத்தின் (Union Public Service Commission) தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவரும், மாநிலத் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பார்கள். இவற்றின் ஆண்டறிக்கை குடியரசுத் தலைவருக்குச் சமர்பித்தல் வேண்டும்.

* தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் குறைந்தது பாதி நபர்களாவது மத்திய அல்லது மாநிலப் பணியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

* உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

* மத்திய தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 65 வயது வரையிலும், மாநில தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 62 வயது வரையிலும் பதவி வகிக்கலாம்.

திட்டக்குழு - Planning Commissin

* அரசியலமைப்பு அங்கீகாரம் பெறாத ஒர் குழு திட்டக்குழு (Planning Commissin).

* இது ஒரு ஆலோசனைக் குழு.

* திட்டக்குழுவின் தலைவர் பிரதமர் ஆவார்.

* திட்டக்குழுவிற்குத் துணைத்தலைவர் ஒருவர் இருப்பார்.

* தேசிய திட்டங்கள் திட்டக்குழுவில் ஆலோசனை பெற்ற பின்னரே தேசிய வளர்ச்சிக்குழுவின் முடிவு செய்யப்படுகிறது.

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதல்வர்கள்

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக் குழு - National Development Council

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் பிரதமர்.

* திட்டக்குழு அளிக்கும் ஆலோசனைகளை மேற்பார்வையிட்டு மறுபிரிசீலனை செய்து அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்துவது தேசிய வளர்ச்சிக்குழுவே ஆகும்.

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

* தேசி ஒருமைப்பாட்டுக் குழுவின் (National Integration Council) தலைவரும் பிரதமரே ஆவார்.

கேள்வி நேரம் - Question Hour

* ஒவ்வொரு சபையின் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக (Question Hour) ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்தக் கேள்வி நேரத்தின்போது அரசின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் குறித்துக் கொண்டு செல்லப்படுவதற்காக கேள்விகள் எழுப்பப்படும்.

* பொதுவாக அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், தீர்மானங்கள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்படும்.

* எனவே கேள்வி நேரத்தில் பொதுவாக அரசின் நடவடிக்கைகளே வெகுவாக கேள்விக்குள்ளாகும்.

* ஒவ்வொரு அவையிலும் பொதுவாக கேள்விகள் அரசாங்க உறுப்பினர்களுக்கே (Government Memners), அதாவது அமைச்சர்களுக்கு விடுக்கப்படும்.

* அத்தகு கேள்விகள் பொதுவாக நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் (Starred Questions), நட்சத்திரக் குறியிடப்படாத வினாக்கள் (Unstarred Questions) என பகுக்கப்படும்.

* சில நேரங்களில் கேள்விகள் தனி நபர் உறுப்பினர்களுக்கும் (Private Members) விடுவிக்கப்படும்.

* அதாவது அமைச்சரவையில் இடம் பெறாத உறுப்பினர்கள் அனைவரும் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட) தனி நபர் உறுப்பினர்கள் ஆவர்.

* கேள்வி நேரங்களில் எந்தக் கேள்வி மீதும் விவாதம் செய்ய இயலாது. எனினும் 2 துணைக் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி வழங்கப்படலாம்.

* பொதுவாக கேள்வி நேரம் சபையின் துவக்க நேரமான காலை 11 மணி முதல் 12. மணி வரை நடைபெறும்.

நட்சத்திரக் குறியிட்ட மற்றும் பிற கேள்விகள் - Starred and Unstarred Questions

* நட்சத்திரக் குறியிட்ட வினாக்களுக்கு வாய் மொழியாகவே பதில் தரப்படும். இத்தகைய கேள்விகளுக்கு துணைக் கேள்விகளும் அனுமதிக்கப்படும்.

* நட்சத்திரக் குறியிடாத கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் வழங்கப்படும்.

* ஆனால் நட்சத்திரக் குறியிடாத கேள்விகளுக்கு துணைக் கேள்விகள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

தனிநபர் வினாக்கள் - Questions to Private Members

* தனிநபர் உறுப்பினர்களிடம் ஏதேனும் ஒரு மசோதா குறித்தோ, தீர்மானம் குறித்தோ அல்லது சபை நடவடிக்கைகள் குறித்தோ கேள்விகள் எழுப்பப்பட்டால் அவர் பதிலளித்தல் வேண்டும்.

* இத்தகைய கேள்விகள் எப்போதாவது லோக் சபையில் எழுப்பப்படுவதுண்டு. எனினும் இக்கேள்விகளுக்கு துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லை.

பூச்சிய நேரம் - Zero Hour

* கேள்வி நேரத்தைத் தொடர்ந்து வரும் நேரம். அதாவது 12 மணி முதல் சுமார் 1 மணி நேரம் வரை பூஜ்ய நேரமாகக் கொள்வர்.

* பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிலும் பூஜ்ய நேரம் என்று ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த நேரம் பத்திரிக்கைகளின் புதிய கண்டுபிடிப்பே ஆகும்.

* அரசின் மீது எத்தகைய தாக்குதல்கள் வேண்டுமானாலும் இந்த நேரத்தில் நிகழலாம். அதாவது பொது நிகழ்வுகள், அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த செயல்களுக்காக. அரசின் மீதான கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படும் நேரமே இவைதான்.

* இந்த நேரத்தில் சபையின் முஎன் அனுமதி ஏதும் பெறாமல் இத்தகைய கேள்விகள் ஏதும் பெறாமல் இத்தகைய க்ள்விகள், விவாதங்கள் போன்றவை எழுப்பப்படும்.

ஒத்திவைப்புத் தீர்மானம் - Adjournment Motions

* சபையின் பணி வரன்முறைப் பட்டியலின்படி, சபையின் பணிகள் வரிசையாக நடைபெறும். பட்டியலில் இல்லாத விஷயங்கள் எதையும், சபைத் தலைவரின் அனுமதியின்றி, எடுத்து விவாதிக்க இயலாது.

* பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக இருப்பின் சபையின் பிற விஷயங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு, அதாவது ஒத்தி வைப்புத் தீர்மானம் (Adjournment Motion) நி்றைவேற்றிய பின்னர், அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க சபைத் தலைவர் அனுமதிக்கலாம்.

* ஒரு நபர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர விரும்பினால், அது குறித்த தனது விருப்பத்தை, சபாநாயகரிடமும், அது குறித்த அமைச்சரிடமும், சபையின் பொதுச் செயலாளரிடமும், ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர விரும்பும் நாளில், காலை 10 மணிக்கு முன்பாக அளிக்க வேண்டும்.

* ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டால், அத்தீர்மானம் குறித்த விவாதங்கள் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும். ஒத்தி வைப்புத் தீர்மானம் நடந்து முடியும் வரை, சபையைத் தள்ளி வைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.

பாராளுமன்றக் குறைவெண் - Quorum in Parliment

* Art.100-ன் படி குறைந்தபட்சம் சபையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களாவது இருந்தால்தான் சபை நடவடிக்கைகளை சபைத் தலைவர் தொடர்வார். இந்த குறைந்தபட்ச உறுப்பினர் தேவையை Quorum என்று குறிப்பிடுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் - Leader of Opposition

* லோக் சபையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்த பட்சம் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கொண்டு அமைந்துள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் என்கிறோம்.

* எதிர்க்கட்சித் தலைவருக்கு காபினெட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் - No-Confidence Motion

* லோக் சபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கம் வரை மட்டுமே அமைச்சரவை ஆட்சியில் நீடித்திருக்க இயலும்.

* லோக் சபையின் நம்பிக்கையை எந்தத் தருணத்தில், அமைச்சரவை இழந்தாலும், இழக்க நேர்ந்தாலும், அக்கணம் முதலாகவே, அந்த அமைச்சரவை இராஜிநாமா செய்ய வேண்டியது அதன் அரசியலமைப்பு ரீதியிலான கடமையாகும்.

* அத்தகைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் ( No-Confidence Motion) என்ற முறை நடைமுறையில் உள்ளது.

* அரசியலமைப்பில் தனியொரு அமைச்சருக்கென எந்தவொரு தனிப்பொறுப்பும் (Responsinility) அளிக்கப்படவில்லை, மாறாக கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) வழங்கப் பட்டுள்ளது.

* எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இன்றி கொண்டுவரப்படலாம்.

* நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உத்தேசித்துள்ள நாளில், சபை தொடங்கும் முன்னதாகவே அது குறித்த அறிவிப்பைத் தரவேண்டும்.

* நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்தவுடன் அது குறித்த விஷயத்தில், லோக் சபையின் உறுப்பினர்களின் கருத்தை அறிய, தீர்மானத்தைப் படித்துக் காண்பிப்பார் அல்லது படிக்கச் செய்வார்.

* இத்தீர்மானத்துக்கு 50 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான முன்மொழிவுக்கு ஆதரவு கிடைத்ததாகக் கருதி, நம்பிக்கையில்லாத் தீர்மானித்திற்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளைக் குறிப்பிட்டு சபாநாயகர் அறிவிப்பார்.

* அவ்வாறு 50 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறவில்லையெனில், நம்பிக்கையில்லாத் தீர்மான முன்மொழிவுக்கு ஆதரவு கிட்டவில்லையெனக் கூறி அத்தீர்மானம் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

* லோக் சபையில் மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட இயலும். இராஜ்ய சபையில் கொண்டு வர இயலாது.

இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம்

இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம்

* ஒரு பகுதியில் எவ்வித முயற்சியும் இன்றி வளர்கிற தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை பரவல் அடிப்படையில் 6 வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுமை மாறாக்காடுகள்

* இந்தியாவில் 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இக்காடுகள் அமைந்துள்ளன. இக்காடுகளில் ஆண்டு முழுவதும் பசும் இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன.

* மேலும் இவை உயரமாக வளரக்கூடியவை. மழையளவு குறையும் பகுதிகளில், பசுமை மாறாக் காடுகளுக்குப் பதிலாக ஈரமுள்ள இலையுதிர்க்காடுகள் காணப்படுகின்றன.

* பசுமை மாறாக் காடுகள் அஸ்ஸாம், இமயமலையின் கிழக்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகள், அந்தமான் தீவுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

* மதிப்பு மிக்க எபோனி, தேக்கு, மூங்கில் போன்ற மரவகைகள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இலையுதிர் காடுகள்

* இந்தியாவில் 10 முதல் 200 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் இலையுதிர்க்காடுகள் அமைந்துள்ளன.

* இங்குள்ள மரங்கள், வறண்ட பருவ காலங்களில் ஆவியாதலைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன.

* பருவ மழையாக உள்ள காரணத்தால், பருவக் காற்றுக் காடுகள் இலையுதிர் வகையைச் சார்ந்தவை.

* இவ்விலையுதிர்க் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், வடசமவெளியை ஒட்டியமைந்த இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும், தக்காணப் பீடபூமியின் வடக்கு மறஅறஉம் கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. தேக்கு, சால், சந்தனம், ரோஸ்வுட் மற்றும் மூங்கில் ஆகிய மரங்கள் இக்காடுகளில் உள்ளன.

* தேக்கு விலையுயர்ந்த மர வகையாகும். இது கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து சாலமரம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய மரவகையாகும்.

இது அதிகமாக இருப்புப் பாதையின் குறுக்குக் கட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை மதிப்புடைய சந்தன மரக்காடுகள் மைசூரில் காணப்படுகின்றன.

முட்புதர்க் காடுகள்

* 50 முதல் 100 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் முட்புதர்க் காடுகள் உள்ளன.

* இங்குள்ள மரங்கள், புற்களைத் தின்னும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, கிளைகளிலும், தண்டுகளிலும் முள் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாபல், கைர் ஆகியவை முக்கிய மரங்களாகும்.

* இத்தகைய காடுகள் அதிக அளவில் இராஜஸ்தான், கர்நாடகம், செளராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

பாலைவனத் தாவரங்கள்

* 25 செ.மீ.க்கும் குறைவாக மழையளவு உள்ள பகுதிகளில் தாவரங்கள் காணப்படுகின்றன.

* தார் பாலைவனத்தின் எல்லைப்பகுதி மற்றும் தக்காணப் பீடபூமியின் சில பகுதிகளிலும், இவ்வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.

* சப்பாத்திக் கள்ளி, சிரோபடிக் ஆகிய மர வகைகள் நன்கு வளர்கின்றன. இத்தாவரங்கள் உறிஞ்சும் நீரை அதிக நாட்கள் வரை தக்க வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக்கூடியவை. இவை பொருளாதார முக்கியத்துவம் உடையவை அல்ல.

மலைக்காடுகள்

* இக்காடுகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. இக்காடுகள் மலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு வேறுபட்டுக் காணப்படுகின்றன.

* 900 மீ உயரம் வரையுள்ள சரிவுகளில் அயன மண்டலக் காடுகளும், அதனை அடுத்து 2700 மீ. உயரம் வரை அகன்ற இலைக்காடுகளும், 2700 முதல் 3600 மீ உயரத்திற்கு இடைப்பட்ட சரிவில் ஊசியிலைக் காடுகளும் அமைந்துள்ளன.

* 4800 உயரம் வரை ஆல்பைன் காடுகளும், 4800 மீட்டருக்கு மேல் பனி வயல்களும் அமைந்துள்ளன. பனி வயல்களில் தாவரங்களே காணப்படுவதில்லை.

மாங்குரோவ் காடுகள்

* கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆகிய ஆற்றுச் சதுப்பு நில டெல்டாக்களில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.

* இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ிங்கு மரங்கள் குட்டையாகவும், அவற்றின் வேர்கள் நீருக்கு மேல் தோன்றும்படியாகவும் அமைந்துள்ளன.

* இத்தகைய காடுகளில் சுந்தரி வகை மரங்கள் சிறப்பாகக் காணப்படுவதால் இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

* இமய மலையின் அடிவாரத்தில் தராய் காடுகளும் இவ்வகையைச் சார்ந்தவையே.

காடுகளின் பயன்கள்

* காடுகளின் முக்கியப் பயன் நீராவி அளிப்பை அதிகரித்து மழை பொழிய உதவுவதே ஆகும்.

* தெற்கில் தேக்கும், மத்திய இந்தியாவில் சால மரமும், வட இந்தியாவில் தேவதருவும் முக்கிய மரங்களாகும். அவை கட்டடம் கட்டவும், ரயில்வேயில் குறுக்குக் கட்டையாகப் போடவும், படகுகள் கட்டவும் பயன்படுகின்றன.

* மென் மரங்களான ஊசியிலைக் காட்டு மரங்கள் பெட்டிகள், தீக்குச்சிகள் மற்றும் மரக்கூழ் தயாரிக்கப் பயன்படுகின்றன.

* லைம் என்னும் புல்லிலிருந்து பெறப்படும் எண்ணெய், கொசுவர்த்திகள் செய்யப்பயன்படுகிறது. கோரை வகைப் புற்கள் பாய் பின்னப் பயன்படுகின்றன.

* திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிகவும் புகழ்பெற்றது. கடுக்காய், ஆவாரம் பட்டை போன்றவை தோல் பதனிடப் பயன்படுகின்றன.

* காடுகளின் பயன்பாடுகளின் காரணமாகவே காட்டுப் பயிற்சியாளர் பயிற்சிக்காக கோவை, டேராடூன் ஆகிய இடங்களில் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* மத்திய அரசு டேராடூனில் காட்டு ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காடுகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய இயக்கம் உத்திரப் பிரதேசத்தில் தோன்றி செயல்பட்டு வரும் சிப்கோ இயக்கமாகும்.

* இந்தியாவில் 1894 முதலாகவே காடுகள் கொள்லை பின்பற்றப்பட்டு வருகிறது. இது 1952-ல் திருத்தப்பட்டது. 1988-ல் இந்திய அரசு புதிய காடுகள் கொள்கையை அறிவித்து காடுகளை மேம்படுத்தி வருகிறது.

* 1950-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

* அதிக வளர்ச்சியும், செழிப்பும் இல்லாத காடுகளைத் திருத்தம் செய்து நல்ல இனத்தைச் சேர்ந்த நாட்டுச் செடிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை, காட்டு இலாகாவினர் பல மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த முறையே குமரி பயிர் முறை என்று அழைக்கப்படுகிறது.

* காட்டிலாகா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் நிலமில்லா ஏழைகளை குமரிதாரர்கள் என்பர்.

* அந்தச் செடிகளுக்கிடையே குமரிதாரர்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களையும் விளைவிக்கலாம்.

* தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி காடுகளின் மொத்த பரப்பளவு 2.2 மில்லியன் ஹெக்டேர். மொத்த நிலப்பரப்பில் 17 சதவீத பகுதிகள் காடுகளாகும்.

இந்திய மண் வகைகள்

* இயற்கை வளங்களில் மிக முக்கியமான வளம் மண். புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகச்சிறிய பாறைத் துகள்களால் ஆன படலமே மண் எனப்படும்.

* இந்திய வேளாண்மை ஆய்வுக் குழு (இந்திய கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்) மண் வகைகளை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

* மண்ணின் மேல் அடுக்கு அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்பர். மழை பெய்தவுடன் மேற்பரப்பில்லுள்ள மண் கரைந்து செல்கிறது. இதற்கு தகடரிப்பு என்று பெயர்.

* நீர் தேங்குவதாலும், உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் மண் வளம் பாதிக்கப்படுகிறது.

* ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் மூலம் மண் அரிப்பு ஏற்படுகிறது.

* விவசாய முறையில் களைகளை நீக்கி அடர்த்தியான மண்ணை உருவாக்குவது மல்ச்சிங் எனப்படும்.

* சில முக்கிய மண் வகைகளான வண்டல் மண், கரிசல் மண், செம்மண், லாட்டரைட் ஆகியவற்றைக் காண்போம்.

* இந்தியாவில் உள்ள மண் வகைகளில் மிக அதிகப் பரப்பில் காணப்படுவதும், முக்கியமானதும் வண்டல் மண் ஆகும்.

* இந்தியாவின் பரப்பில் சுமார் 43 சதவீதம் வண்டல் மண்ணாக உள்ளது.

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்

மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள்
*  Art.174-ன்படி மாநிலத்தின் சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை, அவ்வப்போது தேவைப்படும் இடத்திலும், உரிய காலத்திலும் கூட்டப்பட வேண்டும்.
*  எப்படியிருப்பினும் ஒரு கூட்டத்துக்கும் மற்றொரு கூட்டத்துக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.
*  ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒரு சபையின் கூட்டத் தொடரை முடித்துவிடலாம், அல்லது சட்டப் பேரவையாக இருப்பின் கலைக்கலாம். அதாவது மாநில சட்ட பேரவை ஆண்டுக்கு இரு முறையாவது கூட்ட வேண்டும் என்பதே அரசியலமைப்பின் வரை முறையாகும்.
*  இந்தியா விடுதலை பெற்ற அதே நாளில்தான் ஜம்மு-காஷ்மீரும் விடுதலை பெற்றது.
*  அப்போது அங்கு மன்னராட்சி நடைமுறையில் இருந்தது. ஜம்மூ-காஷ்மீர், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாமல் தனித்த நாடாகவே நீடிக்க விரும்பியது. அவ்வாறு நீடிக்க முயற்சித்தது.
*  எனினும் மக்களின் பாகிஸ்தானின் தாக்குதலுக்குட்பட்டதன் காரணமாக, அக்டோபர் 26,1947-ல் இந்தியாவுடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் ஜம்மு-காஷ்மீரின் சார்பாக அதன் மன்னர் ஹரி சிங் கையெழுத்திட்டார்.
*  எனினும் மக்களின் விருப்பம் இதில் வெளிப்படாதிருந்ததைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் ஒரு முழு மாநிலத்தன்மையுடன் இந்தியாவுடன் இணைக்கப்படாமல், படிப்படியாக இணையும் மாநிலமாகவே கருதப்பட்டது.
*  ஜம்மூ-காஷ்மீரின் அரசியல் நிர்ணயசபை 17.11.1957-ல் இணைப்பை உறுதி செய்தது.
*  இப்படி இணைந்ததால் தான் காஷ்மீருக்கு ஒரு தனி அந்தஸ்து தரவேண்டியதாயிற்று.
*  அரசியலமைப்பின் Art.370 ஜம்மூ-காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை வரையறுத்துள்ளது.
*  இந்த தனி அந்தஸ்து, அம்மாநிலத்துடன், இந்தியா கொண்டிருந்த ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்டுள்ளது.
*  ஜம்மு-காஷ்மீருக்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. அதன்படியே அம்மாநிலம் இயங்குகிறது. இந்த அரசியலமைப்பு ஜனவரி 26,1957 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
*  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் தலைப்பின் மீதும், பாராளுமன்றம் சட்டமியற்ற இயலாது.
*  மேலும் மூன்று பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடமே உள்ளது.
*  மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.
*  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கு கொள்ள விரும்புவோர், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
*  அது போலவே அங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும், ஜம்மூ-காஷ்மீர் மாநிலப் பிரஜைகளுக்கே உரிமையுண்டு.
*  சொத்துரிமை தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடிப்படை உரிமையாக நடைமுறையில் உள்ளது.
*  தேசிய நெருக்கடி நிலையைப் பொறுத்தவரை, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக மட்டுமே ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்தப்பட இயலும்.
*  அதாவது ஆயுதமேந்திய உள்நாட்டுக் கலவரம் காரணமாக கொண்டு வரப்படும் நெருக்கடிநிலையை ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்த இயலாது.
*  அரசியலமைப்பு இயந்திரம் சரிவர இயங்காத சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியையும், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை ஆளுநர் ஆட்சியையும் பிரகடனப்படுத்த இயலும்.
*  ஜம்மூ-காஷ்மீரின் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலின்றி, அதன் எல்லைகளில் எந்தவித மாற்றத்தையும், பாராளுமன்றம் மேற்கொள்ள இயலாது.
*  ஜம்மூ-காஷ்மீர் மாநில ஆளுநரை நியமிக்கும்போது அம்மாநிலத்தை கலந்தாலோசித்த பின்னரே பாராளுமன்றம் நியமிக்க இயலும்.
*  பாராளுமன்றம் இயற்றும் முன் தடுப்புப் பாதுகாவல் சட்டங்கள் ஜம்மூ-காஷ்மீருக்கு தானாகவே பொருந்தாது.
*  அத்தகைய சட்டங்கள் அம்மாநில சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே செல்லத்தக்கவை.
*  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி நெருக்கடி நிலையை பாராளுமன்றம் அறிவிக்க இயலாது.
*  இந்திய அரசியலமைப்பின் பகுதி-IV-ல் சொல்லப் பட்டுள்ள வழிமுறைக்கோட்பாடுகள் எதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது.
மத்திய மாநில உறவுகள் - THE CENTRE - STATE RELATIONS
*  இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி அம்சங்கள் சிலவற்றை உள்ளடக்கிய ஒற்றையாட்சி முறைக்கு வழி செய்கிறது.
*  சில அறிஞர்கள் நமது இன்றைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் தழுவல் என்பர்.
*  மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையேயான அதிகாரப் பங்கீடு முறை 1935-ம் ஆண்டு சட்ட அமைப்பை சிறிது உள்ளடக்கி இருக்கிறது.
*  இன்றைய அரசியல் சட்டம் மைய மாநில அரசுகளுக்கிடையேயான சட்டமியற்றும் துறை அதிகாரங்Kலை மூன்று பட்டியல்களாக பகுக்கிறது.
அவை முறையே, மைய, மாநில மற்றும் பொது அதிகாரப் பட்டியல்களாகும். மைய அரசின் அதிகாரப்பட்டியலில் 97 துறைகள் அடங்கும். இதுவே மிகப் பெரிய அதிகாரப்பட்டியலாகும்.
*  மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் 66 துறைகளும், பொது அதிகாரப் பட்டியலில் 47 துறைகளும் அடங்கும்.
*  மத்திய மாநில உறவுகள் குறித்து 1969-ல் இராஜமன்னார் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு இந்திய ஆட்சிப் பணிகள் பணியிடங்களைக் கலைக்கப் பரிந்துரை வழங்கியது.
*  1983-ல் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய சர்க்காரியா குழு நியமிக்கப்பட்டது.

Thursday, 26 December 2013

தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாற


உலகச்சந்தை பங்கீட்டுப் போட்டி முதல் உலகப்போரோடு முடியவில்லை. வெர்சல்ஸ் உடன்படிக்கையும் பன்னாட்டு சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின் தலைமையில் போலந்தின் சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின் தலைமையில் போலந்தின் மீது படையெடுக்க பிரிட்டனும், பிரான்சும் 1939 செப்டம்பர் 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சியையோ, அமைச்சர்களையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் பிரிட்டனுக்காகப் போரில் கலந்து கொள்ளும் என பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இந்தியா தனது மனித சக்தியை இந்தப் போர்களின் மூலம் விரயம் செய்யாது என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது. 

இதனையடுத்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டது. 1939 அக்டோபர் 2ம் தேதி பம்பாய் தொழிலாளர்கள் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜானாமா செய்தனர். இந்துமகா சபை ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது. முழுச்சக்தியையும் திரட்டி சட்டமறுப்பு இயக்கம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. போரட்டத்தை இறுதிப்படுத்துகிற பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்தது காங்கிரஸ். போரில் உதவினால், இறுதியில் இந்தியாவை முழுசுதந்திர நாடாக்க வேண்டும் என்றது காங்கிரஸ். பிரிட்டிஷ் அரசு சம்மதிக்கவில்லை. ஒரு நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பாத காந்தி தனிநபர் சத்தியாக்கிரகம்அறிவித்தார். 



காலமானார் கலாஷ்னிகோவ் ஏ.கே. 47 துப்பாக்கியை தந்தவர்

ஏ.கே.47 ரக துப்பாக்கியை உருவாக்கிய ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் மிகையில் கலாஷ்னிகோவ் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. இப்போதும் உலகம் எங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கி ஏ.கே.47 ஆகும். இதுவரை 10 கோடிக்கும் அதிகமான ஏ.கே.47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன.
1949-ம் ஆண்டு சோவி யத் ரஷ்ய ராணுவத்தில் அதி காரப்பூர்வமாக இத்துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது. மிகவும் நவீனமானது, பயன்படுத்த எளி தானது, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும், நீண்ட நாள்கள் உழைக்கக் கூடி யது என்பதால் இத்துப்பாக்கி சர்வதேச அளவில் எளிதில் பிரபலமானது.
கலாஷ்னிகோவின் ஆட்டோ மேட்டிக் துப்பாக்கி 1947-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என் பதை உணர்த்தும் வகையிலேயே அத்துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயரிடப்பட்டது. கலாஷ்னிகோவ்வின் 90-வது பிறந்த நாளின்போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது பேசிய கலாஷ்னி கோவ், ஏ.கே.47 துப்பாக்கி சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் அப்பாவிகளைக் கொல்ல பயன் படுத்தப்படுவதைக் கேள்விப்படும் போது மிகவும் வேதனை ஏற்படுகிறது. நம் நாட்டின் எல்லையைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்துப் பாக்கியை வடிவமைத்தேன். ஆனால் இப்போது அது தவ றாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆட்சியாளர்களின் த வறும் அதிகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கலாஷ்னிகோவ்வின் இளம் வயது வாழ்க்கை மிகவும் சோகமானதாகவே இருந்தது. அவரது தந்தை சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார். போர் காலத்தில் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கலாஷ்னிகோவ், போரில் படு காயமடைந்ததால் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். பின்னர் ராணுவத் துக்கான ஆயுதங்கள் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றினார். அவரது முதல் முயற்சியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ரஷ்ய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டாலும், ஏ.கே.47 அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது.

கையில் கைடு

யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது, இந்த தேர்வர்களுக்கு இருக்கிற பிரதான பிரச்சனை முந்தைய வினாத்தாள்களை தேடி கண்டுபிடிப்பதுதான். அவை கிடைத்தாலே கிட்டத்தட்ட பாதி தேர்ச்சி ஆனது மாதிரிதான். அந்த வினாத்தாள்கள் கிடைப்பதற்காக பலரும் பல்வேறு பயிற்சி மையங்களையும், புத்தகக் கடைகளையும் ஏறி இறங்குகிறார்கள். இனி அந்த கஷ்டம் தேவையில்லை UPSC PAST PAPER PRELIMS என்னும் ‘அடாப் ஏர்’ அப்ளிகேஷன் மூலம் 1996-ம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை நடந்த சகல யு.பி.எஸ்.சி தேர்வுகளின் வினாத்தாள்களையும் எளிதில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். யு.பி.எஸ்.சி மட்டுமில்லாமல் இந்திய மாநிலங்களால் நடத்தப்படும் அரசுத்தேர்வுகளின் முந்தைய வினாத்தாள்களும் இதில் கிடைக்கும்.

ரயில் பயணம் திடீர் ரத்தானால் குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்

ஒருவர் திடீரென ரயில் பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம்.
ரயிலில் பயணம் செய்ய, பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்னதாக ரயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் நடைமுறை இப்போது உள்ளது. தட்கல் டிக்கெட்டை முதல்நாள் காலை 10 மணியில் இருந்துதான் எடுக்கமுடியும்.
திருமணம், திருவிழா, அவசர வேலை நிமித்தம், குடும்ப நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரயில் முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் எடுக்கிறார்கள். அவ்வாறு டிக்கெட் எடுக்கும் ஒருவர் திடீரென பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அவருக்குப் பதிலாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறொருவர், பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்யலாம். கணவர், மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி என்ற ரத்த சொந்தங்களாக இருந்து, ரேஷன் கார்டில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே பெயர் மாற்றம் செய்து ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
24 மணி நேரத்துக்கு முன்னதாக பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பயணிகள் பெயர்ப் பட்டியல் (சார்ட்) தயாரான பிறகு யாரும் பெயர் மாற்றம் செய்ய முடியாது. சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்திருந்
தால், சலுகைக் கட்டண பயணத்துக்கு தகுதி இல்லாதவர், பெயர் மாற்றம் செய்து பயணிக்க முடியாது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் உரிய காரணத்தைச் சொல்லி, ரத்த சொந்தம் என்பதற்காக ரேஷன் கார்டை காண்பித்து, பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். மற்ற ரயில் நிலையங்களாக இருந்தால், உதவி வர்த்தக மேலாளரிடம் பெயர் மாற்றம் செய்து தரும்படி கோரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கீழே இரு மடங்கு சுமை
பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தலையாட்டி பொம்மை போல..
தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறு பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கூறினார்.
சிலை, நாணயங்கள் இருக்கலாம்
ஒடிசா மாநிலத்தில் வரலாற்றுக் கோட்டைகளை ஆய்வு செய்தவரான ஒரிசா பாலு கூறும்போது, நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்
காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்” என்றார்.