Friday, 27 December 2013

மத்திய மாநில தேர்வாணையங்கள்

மத்திய மாநில தேர்வாணையங்கள்

அரசியமைப்பின் அடிப்படைக் கூறுகள்

பல்வேறு உச்சநீதிமன்ற வழக்குகளில் அரசியலமைப்பில் கீழ்வரும் அம்சங்களை அடிப்படைக் கூறுகளாகப் பட்டியலிட்டுள்ளனர்ச அவை:

01. அரசியலமைப்பின் இறையாண்மை

02. குடியரசு

03. மக்களாட்சி அரசு முறை

04. சமய சார்பாற்ற தன்மை

05. அதிகாரப் பிரிவினை

06. கூட்டாட்சி இயல்பு

07. சம அந்தஸ்து மற்றும் சம வாய்ப்புகள்

08. சமயச் சார்பின்மையும் மனச்சான்று சுதந்திரமும்

09. நீதியின் ஆட்சி ஆகியன.



மத்திய மாநில தேர்வாணையங்கள்

* அரசியலமைப்பின்படி அமைந்தவை மத்திய மாநில தேர்வாணையங்கள். ஷரத்து 315ன் படி ஒரு மையத் தேர்வாணையமும், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு தேர்வாணையமும் (State Public Service Commission) இருக்க வேண்டும்.

* மத்திய தேர்வாணையத்தின் (Union Public Service Commission) தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவரும், மாநிலத் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பார்கள். இவற்றின் ஆண்டறிக்கை குடியரசுத் தலைவருக்குச் சமர்பித்தல் வேண்டும்.

* தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் குறைந்தது பாதி நபர்களாவது மத்திய அல்லது மாநிலப் பணியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

* உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

* மத்திய தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 65 வயது வரையிலும், மாநில தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 62 வயது வரையிலும் பதவி வகிக்கலாம்.

திட்டக்குழு - Planning Commissin

* அரசியலமைப்பு அங்கீகாரம் பெறாத ஒர் குழு திட்டக்குழு (Planning Commissin).

* இது ஒரு ஆலோசனைக் குழு.

* திட்டக்குழுவின் தலைவர் பிரதமர் ஆவார்.

* திட்டக்குழுவிற்குத் துணைத்தலைவர் ஒருவர் இருப்பார்.

* தேசிய திட்டங்கள் திட்டக்குழுவில் ஆலோசனை பெற்ற பின்னரே தேசிய வளர்ச்சிக்குழுவின் முடிவு செய்யப்படுகிறது.

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதல்வர்கள்

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக் குழு - National Development Council

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் பிரதமர்.

* திட்டக்குழு அளிக்கும் ஆலோசனைகளை மேற்பார்வையிட்டு மறுபிரிசீலனை செய்து அவற்றை ஏற்று நடைமுறைப்படுத்துவது தேசிய வளர்ச்சிக்குழுவே ஆகும்.

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

* தேசி ஒருமைப்பாட்டுக் குழுவின் (National Integration Council) தலைவரும் பிரதமரே ஆவார்.

கேள்வி நேரம் - Question Hour

* ஒவ்வொரு சபையின் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக (Question Hour) ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்தக் கேள்வி நேரத்தின்போது அரசின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் குறித்துக் கொண்டு செல்லப்படுவதற்காக கேள்விகள் எழுப்பப்படும்.

* பொதுவாக அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், தீர்மானங்கள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்படும்.

* எனவே கேள்வி நேரத்தில் பொதுவாக அரசின் நடவடிக்கைகளே வெகுவாக கேள்விக்குள்ளாகும்.

* ஒவ்வொரு அவையிலும் பொதுவாக கேள்விகள் அரசாங்க உறுப்பினர்களுக்கே (Government Memners), அதாவது அமைச்சர்களுக்கு விடுக்கப்படும்.

* அத்தகு கேள்விகள் பொதுவாக நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் (Starred Questions), நட்சத்திரக் குறியிடப்படாத வினாக்கள் (Unstarred Questions) என பகுக்கப்படும்.

* சில நேரங்களில் கேள்விகள் தனி நபர் உறுப்பினர்களுக்கும் (Private Members) விடுவிக்கப்படும்.

* அதாவது அமைச்சரவையில் இடம் பெறாத உறுப்பினர்கள் அனைவரும் (ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட) தனி நபர் உறுப்பினர்கள் ஆவர்.

* கேள்வி நேரங்களில் எந்தக் கேள்வி மீதும் விவாதம் செய்ய இயலாது. எனினும் 2 துணைக் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி வழங்கப்படலாம்.

* பொதுவாக கேள்வி நேரம் சபையின் துவக்க நேரமான காலை 11 மணி முதல் 12. மணி வரை நடைபெறும்.

நட்சத்திரக் குறியிட்ட மற்றும் பிற கேள்விகள் - Starred and Unstarred Questions

* நட்சத்திரக் குறியிட்ட வினாக்களுக்கு வாய் மொழியாகவே பதில் தரப்படும். இத்தகைய கேள்விகளுக்கு துணைக் கேள்விகளும் அனுமதிக்கப்படும்.

* நட்சத்திரக் குறியிடாத கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் வழங்கப்படும்.

* ஆனால் நட்சத்திரக் குறியிடாத கேள்விகளுக்கு துணைக் கேள்விகள் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

தனிநபர் வினாக்கள் - Questions to Private Members

* தனிநபர் உறுப்பினர்களிடம் ஏதேனும் ஒரு மசோதா குறித்தோ, தீர்மானம் குறித்தோ அல்லது சபை நடவடிக்கைகள் குறித்தோ கேள்விகள் எழுப்பப்பட்டால் அவர் பதிலளித்தல் வேண்டும்.

* இத்தகைய கேள்விகள் எப்போதாவது லோக் சபையில் எழுப்பப்படுவதுண்டு. எனினும் இக்கேள்விகளுக்கு துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லை.

பூச்சிய நேரம் - Zero Hour

* கேள்வி நேரத்தைத் தொடர்ந்து வரும் நேரம். அதாவது 12 மணி முதல் சுமார் 1 மணி நேரம் வரை பூஜ்ய நேரமாகக் கொள்வர்.

* பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிலும் பூஜ்ய நேரம் என்று ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த நேரம் பத்திரிக்கைகளின் புதிய கண்டுபிடிப்பே ஆகும்.

* அரசின் மீது எத்தகைய தாக்குதல்கள் வேண்டுமானாலும் இந்த நேரத்தில் நிகழலாம். அதாவது பொது நிகழ்வுகள், அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த செயல்களுக்காக. அரசின் மீதான கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படும் நேரமே இவைதான்.

* இந்த நேரத்தில் சபையின் முஎன் அனுமதி ஏதும் பெறாமல் இத்தகைய கேள்விகள் ஏதும் பெறாமல் இத்தகைய க்ள்விகள், விவாதங்கள் போன்றவை எழுப்பப்படும்.

ஒத்திவைப்புத் தீர்மானம் - Adjournment Motions

* சபையின் பணி வரன்முறைப் பட்டியலின்படி, சபையின் பணிகள் வரிசையாக நடைபெறும். பட்டியலில் இல்லாத விஷயங்கள் எதையும், சபைத் தலைவரின் அனுமதியின்றி, எடுத்து விவாதிக்க இயலாது.

* பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக இருப்பின் சபையின் பிற விஷயங்கள் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு, அதாவது ஒத்தி வைப்புத் தீர்மானம் (Adjournment Motion) நி்றைவேற்றிய பின்னர், அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க சபைத் தலைவர் அனுமதிக்கலாம்.

* ஒரு நபர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர விரும்பினால், அது குறித்த தனது விருப்பத்தை, சபாநாயகரிடமும், அது குறித்த அமைச்சரிடமும், சபையின் பொதுச் செயலாளரிடமும், ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர விரும்பும் நாளில், காலை 10 மணிக்கு முன்பாக அளிக்க வேண்டும்.

* ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டால், அத்தீர்மானம் குறித்த விவாதங்கள் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறும். ஒத்தி வைப்புத் தீர்மானம் நடந்து முடியும் வரை, சபையைத் தள்ளி வைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.

பாராளுமன்றக் குறைவெண் - Quorum in Parliment

* Art.100-ன் படி குறைந்தபட்சம் சபையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களாவது இருந்தால்தான் சபை நடவடிக்கைகளை சபைத் தலைவர் தொடர்வார். இந்த குறைந்தபட்ச உறுப்பினர் தேவையை Quorum என்று குறிப்பிடுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் - Leader of Opposition

* லோக் சபையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்த பட்சம் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கொண்டு அமைந்துள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் என்கிறோம்.

* எதிர்க்கட்சித் தலைவருக்கு காபினெட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் - No-Confidence Motion

* லோக் சபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கம் வரை மட்டுமே அமைச்சரவை ஆட்சியில் நீடித்திருக்க இயலும்.

* லோக் சபையின் நம்பிக்கையை எந்தத் தருணத்தில், அமைச்சரவை இழந்தாலும், இழக்க நேர்ந்தாலும், அக்கணம் முதலாகவே, அந்த அமைச்சரவை இராஜிநாமா செய்ய வேண்டியது அதன் அரசியலமைப்பு ரீதியிலான கடமையாகும்.

* அத்தகைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் ( No-Confidence Motion) என்ற முறை நடைமுறையில் உள்ளது.

* அரசியலமைப்பில் தனியொரு அமைச்சருக்கென எந்தவொரு தனிப்பொறுப்பும் (Responsinility) அளிக்கப்படவில்லை, மாறாக கூட்டுப் பொறுப்பு (Collective Responsibility) வழங்கப் பட்டுள்ளது.

* எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இன்றி கொண்டுவரப்படலாம்.

* நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உத்தேசித்துள்ள நாளில், சபை தொடங்கும் முன்னதாகவே அது குறித்த அறிவிப்பைத் தரவேண்டும்.

* நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்தவுடன் அது குறித்த விஷயத்தில், லோக் சபையின் உறுப்பினர்களின் கருத்தை அறிய, தீர்மானத்தைப் படித்துக் காண்பிப்பார் அல்லது படிக்கச் செய்வார்.

* இத்தீர்மானத்துக்கு 50 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவித்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான முன்மொழிவுக்கு ஆதரவு கிடைத்ததாகக் கருதி, நம்பிக்கையில்லாத் தீர்மானித்திற்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளைக் குறிப்பிட்டு சபாநாயகர் அறிவிப்பார்.

* அவ்வாறு 50 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறவில்லையெனில், நம்பிக்கையில்லாத் தீர்மான முன்மொழிவுக்கு ஆதரவு கிட்டவில்லையெனக் கூறி அத்தீர்மானம் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

* லோக் சபையில் மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட இயலும். இராஜ்ய சபையில் கொண்டு வர இயலாது.

No comments:

Post a Comment