யு.பி.எஸ்.சி தேர்வு
எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது, இந்த தேர்வர்களுக்கு இருக்கிற
பிரதான பிரச்சனை முந்தைய வினாத்தாள்களை தேடி கண்டுபிடிப்பதுதான். அவை கிடைத்தாலே கிட்டத்தட்ட
பாதி தேர்ச்சி ஆனது மாதிரிதான். அந்த வினாத்தாள்கள் கிடைப்பதற்காக பலரும் பல்வேறு பயிற்சி
மையங்களையும், புத்தகக் கடைகளையும் ஏறி இறங்குகிறார்கள். இனி அந்த கஷ்டம் தேவையில்லை
UPSC PAST PAPER PRELIMS என்னும் ‘அடாப் ஏர்’ அப்ளிகேஷன் மூலம் 1996-ம் ஆண்டு முதல்
2013 ஆண்டு வரை நடந்த சகல யு.பி.எஸ்.சி தேர்வுகளின் வினாத்தாள்களையும் எளிதில் டவுன்லோட்
செய்து கொள்ளலாம். யு.பி.எஸ்.சி மட்டுமில்லாமல் இந்திய மாநிலங்களால் நடத்தப்படும் அரசுத்தேர்வுகளின்
முந்தைய வினாத்தாள்களும் இதில் கிடைக்கும்.
No comments:
Post a Comment