1895 டிசம்பர் 28 - சினிமாவுக்கு 'டிக்கெட்' அறிமுகமான நாள்
பாரிஸ் நகரில் இந்த நாளில் தான் உலகில் முதன் முறையாக பணம் வாங்கி கொண்டு சினிமா காட்டப்பட்டது.
சினிமா காட்டும் கருவியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் 1830 முதலே நடந்தன. ஜோசப் (பெல்ஜியம்),சைமன் (ஆஸ்ட்ரியா) ஆகியோர் பல ஓவியங்களை இணைத்து அசையும் படங்களை உருவாக்கினர். 1890 வரை இது பெனாகிஸ்டோஸ்கோப் எனப்பட்டது. எடிசனும் அவரது உதவியாளர் டிக்ஸனும் கின்டோகிராப்பை கண்டுபிடித்தனர். 1891-ல் எடிசன் கின்டோஸ்கோப்பை உருவாக்கினார். அதில் ஒருவர் மட்டுமே படம் பார்க்க முடியும்.
1894-ல் லூமியர் சகோதரர்கள் கேமராவும் புரொஜக்டரும் இணைந்த சினிமாடோகிராபை கண்டுபிடித்தனர். அதில் பலர் ஒரே நேரத்தில் படம் பார்க்க முடிந்ததாக இருந்தது.
லூமியர் சகோதரர்கள் தங்களது தொழிற்சாலையில் இருந்து பணியாளர்கள் வெளியே வருவதை படம் பிடித்து முதலில் மக்களுக்கு இலவசமாகக் காட்டினர். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் அன்றாட நிகழ்வுகளை படமாக பிடித்தனர்.அதை இதே நாளில்தான் மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சினிமாவாக காண்பித்தனர். சினிமா படம் எடுப்பதற்கு வேலையாட்களை அமர்த்தி கைகளில் கருவியைக் கொடுத்து உலகம் பூராவும் அனுப்பினர்.
அமெரிக்காவின் முதல் தியேட்டர் 1896-ல் திறக்கப்பட்டது. 1909-ல் நியூயார்க் டைம்ஸ் முதல் சினிமா விமர்சனத்தை வெளியிட்டது.1911-ல் ஹாலிவுட்டில் முதல் ஸ்டுடியோ திறக்கப்பட்டது.1914-ல் சார்லி சாப்ளின் சினிமாவுக்குள் நுழைந்தார்.
No comments:
Post a Comment