உலகச்சந்தை பங்கீட்டுப் போட்டி முதல் உலகப்போரோடு முடியவில்லை.
வெர்சல்ஸ் உடன்படிக்கையும் பன்னாட்டு சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின்
தலைமையில் போலந்தின் சங்கமும் தோற்றன. பாதிக்கப்பட்ட ஹிட்லரின் தலைமையில்
போலந்தின் மீது படையெடுக்க பிரிட்டனும், பிரான்சும் 1939 செப்டம்பர் 3ம்தேதி
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது. காங்கிரஸ் கட்சியையோ, அமைச்சர்களையோ
கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் பிரிட்டனுக்காகப் போரில் கலந்து கொள்ளும் என
பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இந்தியா தனது மனித சக்தியை இந்தப் போர்களின் மூலம்
விரயம் செய்யாது என காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனையடுத்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கைகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டது. 1939 அக்டோபர் 2ம் தேதி பம்பாய் தொழிலாளர்கள் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜானாமா செய்தனர். இந்துமகா சபை ஆங்கிலேயருக்கு ஆதரவு கொடுத்தது. முழுச்சக்தியையும் திரட்டி சட்டமறுப்பு இயக்கம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்தது. போரட்டத்தை இறுதிப்படுத்துகிற பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்தது காங்கிரஸ். போரில் உதவினால், இறுதியில் இந்தியாவை முழுசுதந்திர நாடாக்க வேண்டும் என்றது காங்கிரஸ். பிரிட்டிஷ் அரசு சம்மதிக்கவில்லை. ஒரு நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க விரும்பாத காந்தி ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ அறிவித்தார்.
No comments:
Post a Comment