Saturday, 17 August 2013

பொது அறிவு

1. தமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதனச் சின்னங்கள்:
மாமல்லபுரம் கோயில்கள் – காஞ்சிபுரம் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985)
தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1987)
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் – அரியலூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
நீலகிரி மலை ரயில் – நீலகிரி (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005)

2. முக்கிய விளையாட்டு அரங்கங்கள்:
சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை
இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை
எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை
நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்
அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்
நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்
வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்
பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி

3. தி.மு. – தி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு.31 ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும்.  தமிழறிஞர்களின் முடிவின்படி, கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று கொண்டு, காலத்தைக் கணக்கிடுவதைத் தமிழக அரசும் ஏற்று அறிவித்துள்ளது.

4. விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப்பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும், மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன.

5. கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் எனக் குறிப்பிடுகின்றோம்.

6. தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்:

1. இராஜகோபாலாச்சாரி – மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார் – வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர் – படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை – அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர் – தமிழ் தாத்தா.
7. திரு.வி.க – தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன் – தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம் – முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம் – ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
21. ஈ.வெ.கி.சம்பத் – சொல்லின் செல்வர் (அரசியலில்).
22. அழ.வள்ளியப்பா – குழந்தை கவிஞர்.
23. சிங்கால வேலர் – மே தினம் கண்டவர்.
24. பம்மல் சம்பந்த முதலியார் – தமிழ் நாடகத் தந்தை.
25. சங்கரதாஸ் சுவாமிகள் – தமிழ்நாடகத் தலைமையாசிரியர்.
26. எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக் குயில்.
27. கருணாநிதி – கலைஞர்.
28. எம்.ஜி.ராமச்சந்திரன் – எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்.
29. செல்வி. ஜெயலலிதா – புரட்சித் தலைவி.
30. சிவாஜி கணேசன் – நட்கர் திலகம்.
31. எம்.எஸ்.சுவாமிநாதன் – இந்திய பசுமப்புரட்சியின் தந்தை.

7. முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்:

1. புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
2. யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
3. வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
4. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
5. மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
6. தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
7. வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
8. பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
9. வாஞ்சிநாதன் – செங்கோட்டை
10. சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
11. சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
12. வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
13. திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
14. செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
15. தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
16. இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
17. வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
18. விஜயராகவாச்சாரியார் – சேலம்
19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
20. சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
21. திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
22. முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
24. வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
25. பாரதிதாசன் – பாண்டிச்சேரி
26. கு.காமராஜர் – விருதுநகர்
27. சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
28. மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)
29. எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)
30. ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)
31. அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
32. நேசமணி – கன்னியாகுமரி
33. ஜீவா – கன்னியாகுமரி
34. ம.பொ.சிவஞானம் – சென்னை
35. எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்

கனடா நாட்டு சாலைக்கு காந்திஜி பெயர் சூட்டல்

கனடா நாட்டு சாலைக்கு, காந்தியடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனித உரிமைக்காக பாடுபட்ட, காந்தியடிகளின் சேவையை பாராட்டி, கனடா நாட்டின், டிரான்ஸ்கோனா என்ற நகரில் உள்ள சாலைக்கு, 2010ல், அவரது பெயர் சூட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டு, தற்போது, வின்னிபெக் என்ற, நகரில் உள்ள சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற, வின்னிபெக் நகர மேயர், சாம் காட்ஸ் குறிப்பிடுகையில், ""மக்களின் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்டு, உயிர் துறந்த காந்திஜியின் சேவையை பாராட்டி, இந்த தெருவுக்கு, அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது அகிம்சை போதனைகள், உலக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,'' என்றார். கனடா நாட்டின் காந்தி மைய தலைவர் தட்சிணாமூர்த்தி குறிப்பிடுகையில், ""மனித உரிமைக்காக போராடிய காந்தியடிகளை என்றும் மறக்க முடியாது,'' என்றார்.

குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்

நேர்முகத்தேர்வுடன் கூடிய 1,059 சார்நிலை பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

குருப்–1 மெயின் தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி முதல்நிலைத்தேர்வை நடத்தினோம். இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு மே மாதம் 16–ந்தேதி வெளியிடப்பட்டது.அடுத்த கட்ட தேர்வான மெயின் எழுத்துத்தேர்வுக்கு ‘ஒரு காலி இடத்திற்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் மொத்தம் 1,391 பேர் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர். முதல்நிலைத்தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களையும் மெயின் தேர்வுக்கு அனுமதித்து இருக்கிறோம். இதனால், விகிதாச்சார எண்ணிக்கை சற்று அதிகம் வந்துள்ளது. மெயின் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னையில் நடத்தப்பட உள்ளது.

அடுத்த வாரம் அறிவிப்பு

அனைத்து தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை. மெயின் தேர்வு முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அரசு பணிகளில் ஏற்படும் காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன் பேரில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.குரூப்–2 தேர்வை பொருத்தவரையில், தற்போது நேர்காணல் பதவிகள் கொண்ட தேர்வு, நேர்காணல் அல்லாத பதவிகளை உள்ளடக்கிய தேர்வு என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நேர்காணல் பதவிகள் கொண்ட (நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, சார்–பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் உதவியாளர் போன்றவை) குரூப்–2 தேர்வின் கீழ் 1,059 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.

ஆன்லைன் தேர்வு முடிவு

அதேபோல், நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு இதுவரை 757 காலி இடங்கள் வந்து இருக்கின்றன. இந்த தேர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும். இந்து சமய அறநிலை ஆட்சித்துறை உதவி கமிஷனர், நிர்வாக அதிகாரி (கிரேடு–1) ஆகிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.

Wednesday, 14 August 2013

குரூப்-4 தேர்வில் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு


குரூப்-4 தேர்வில் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : 5,500 இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

வரும், 25ம் தேதி நடக்க உள்ள, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த, 17 லட்சம் பேரில், தகுதியில்லாத, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்களை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது. இறுதியாக, 5,566 இடங்களுக்கு, 14 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன், நிருபர்களிடம், நேற்று கூறியதாவது: தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில், குரூப் - 4 நிலையில் உள்ள, 5,566 காலி பணியிடங்களை நிரப்ப, வரும், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17 லட்சம் பேர், விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், 3 லட்சம் விண்ணப்பங்களும், உரிய தகுதியின்மை காரணமாக, 458 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

"ஹால் டிக்கெட்' வெளியீடு : இறுதியாக, 14 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். 4,755 தேர்வு கூடங்களில், தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnscexams.net ஆகிய இணைய தளங்களில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு மையத்தின் அமைவிடத்தை, தேர்வர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்வு மைய முகவரியுடன், தொலைபேசி எண் மற்றும் பக்கத்தில் உள்ள முக்கியமான,"லேண்ட் மார்க்' இடத்தையும் குறிப்பிட்டுள்ளோம். சரியான முறையில் விண்ணப்பித்தும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன், contacttnpsc@gmail.com என்ற, "இ-மெயில்' முகவரிக்கு, 19ம் தேதிக்கு முன், தகவல் தெரிவிக்கலாம்.

950 பறக்கும் படைகள் : தேர்வை கண்காணிப்பதற்கு, தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளோம். 4,755 முதன்மை கண்காணிப்பாளர், 70,230 கண்காணிப்பாளர், 4,500 ஆய்வு அலுவலர், 950 பறக்கும் படை அதிகாரி ஆகியோர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ பதிவு நடக்கும். மேலும், பதட்டமான தேர்வு மையங்கள், "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தேர்வாணைய தலைமை அலுவலகத்திலும், தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேர்வு மையத்திற்கு, மொபைல் உள்ளிட்ட எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல, அனுமதி இல்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

பொது அறிவு

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

Tuesday, 13 August 2013

குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு


குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4755 மேற்பார்வையாளர்களின் கீழ் தேர்வு நடக்கிறது.


குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 14 லட்சத்து ஆறாயிரத்து 552பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 14 லட்சத்து நான்காயிரத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JULY CURRENT AFFAIRS 2013


• The Person who succeeded Ranjan Mathai to be the next Foreign Secretary of India by Manmohan Singh-Sujata Singh

• The vice chancellor of Jamia Millia Islamia University who on 1 July 2013 appointed as the 20th Lt Governor of Delhi- Najeeb Jung

• The Person who on 2 July 2013 has been appointed as Director General of Bureau of Indian Standards (BIS)-Sunil Soni

• The first ever Indian woman to receive Dubai Government's coveted Emirates Woman Award for business excellence in June 2013- Vandana Gandhi
• The U.S. inventor who was known as the father of the computer mouse who died on 3 July 2013 at age of 88-Douglas Engelbart

• The Egyptian Leader who sworn in as interim president of Egypt till the next elections takes place succeeding Mohamed Morsi, who was removed after a military coup- Adli Mansour

• Renowned Madhubani painting artist who died at a private hospital in Ranti, near Madhubani on 4 July 2013-Mahasundari Devi

• The former Secretary, Department of Telecommunications (DoT), who was appointed as the President of NASSCOM on 5 July 2013- R. Chandrasekhar

• The Bollywood actress who on 6 July 2013 got the Best Actress award at 14th IIFA (International Indian Film Academy) awards 2013 held in Macau- Vidya Balan
• Leading liberal opposition leader who on 6 July 2013 was named as Egypt's new Prime Minister- Mohamed ElBaradei

• Senior parliamentarian who on 4 July 2013 was appointed as the new governor of Sikkim- Shriniwas Dadasaheb Patil

• Former Delhi police Chief, who on 8 July 2013 took over as the new Governor of Meghalaya- KK Paul
• An acknowledged food scientist and the former Director of the Central Food Technological Research Institute (CFTRI) who died on 9 July 2013- Dr. H.A.B. Parpia

• The Person who on 8 July 2013 took over as the new Lieutenant Governor of Andaman and Nicobar Islands-Lt Gen (Retd) AK Singh
• The Theme of world Population day observed across the World on 11 July 2013- Focus is on Adolescent Pregnancy

• Indian Parsi conductor of western classical music who was selected to be honoured with Tagore Award 2013-Zubin Mehta

• The legendary actor and the proud recipient of Dada Saheb Phalke Award and Padma Bhushan Award who died on 12 July 2013- Pran

• The Person who on 16 July 2013 was appointed as the next Commissioner of Delhi Police and will besucceeding Neeraj Kumar- Bhim Sain Bassi
• The Person who was administered the oath of the office of Chief Justice of India (CJI) by he President of India on 19 July 2013-Justice Palanisamy Sathasivam

• The Chief Justice of India who on 18 July 2013 retired from the office after a short term of just nine months-Justice Altamas Kabir
• The day which was observed as Nelson Mandela International Day to inspire people to be an agent of change-18 July 2013

• 82 Years old Veteran Tamil film lyricist who died at a private hospital in Chennai on 18 July 2013- Vaali

• An Indian-American woman was nominated for the Post of Assistant Secretary of State of USA- Nisha Desai Biswal

• South Korean city which was named as the World Book Capital for the year 2015 as per UNESCO announcement- Incheon

• Former Kuttanad MLA and Chairman of the Kerala State Farming Corporation, who died at a hospital in Kochi- Prof. Oommen Mathew

• The Finance Minister of Jammu and Kashmir who on 21 July 2013 appointed as the new Chairman of GST Panel- Abdul Rahim Rather

• The Chairman and CEO of Leo Burnett, India who was re-elected as the President of Advertising Agencies Association of India-Arvind Sharma

• Renowned south India yesteryear actor, who died in Chennai at the age of 59 on 23 July 2013 followed a brief illness- Manjula Vijayakumar

• The Duchess of Cambridge, who gave birth to a baby boy on 22 July 2013 at the London hospital- Kate Middleton

• Indian American author who novel The Lowland has been listed among 13 novels longlisted for the Man Booker Prize 2013- Jhumpa Lahiri

• The cousin of Rajiv Gandhi as well as the Minister for Internal Security during his government, who died in Gurgaon on 25 July 2013- Arun Nehru

• The famous Indian Port which was conferred with the Major Port of the Year award for its excellent performance in the year 2012-13- Paradip Port

• The Bollywood actor who held the Guinness World Record for being the most type-cast actor, died on 28 July 2013 at the age of 85 years- Jagdish Raj
• Sarod maestro who was chosen for the 21st Rajiv Gandhi National Sadhbhavna Award- Amjad Ali Khan

• The former Indian Test umpire who passed away on 29 July 2013 at a private hospital in Karnataka. He was 83 years of age- SN Hanumantha Rao

India launches first indigenous aircraft carrier INS Vikrant


India launched its first indigenously-built aircraft carrier on Monday, a landmark moment in the $5 billion project that seeks to project the country's power and check the rising influence of China. 

When the INS Vikrant comes into full service in 2018, India will become the fifth nation to have designed and built its own aircraft carrier, pushing ahead of China to join an elite club that includes Britain, France, Russia and the United States. 

"It's a remarkable milestone," Defence minister AK Antony said as he stood in front of the giant grey hull of the ship at a ceremony in Kochi. "It marks just a first step in a long journey but at the same time an important one," Antony added. 

The ship, which will be fitted with weaponry and machinery and then tested over the next four years, is a major advance for a country competing for influence in Asia, analysts say. 

"It is going to be deployed in the Indian Ocean region where the world's commercial and economic interests coalesce. India's capability is very much with China in mind," Rahul Bedi, a defence expert with IHS Jane's Defence Weekly, said. 

On Saturday, India announced its first indigenously-built nuclear submarine was ready for sea trials, a key step before it becomes fully operational. Prime Minister Manmohan Singh called it a "giant stride" for the nation. 

"All these are power projection platforms, to project India's power as an extension of its diplomacy," Bedi added. 

New Delhi is spending tens of billions of dollars upgrading its mainly Soviet-era military hardware to bolster its defences. 

Successes in its long-range missile and naval programmes have been tempered by expensive failures in developing its own aircraft and other land-based weaponry, leaving the country highly dependent on imports. 

INS Vikrant is two years behind schedule after problems in sourcing specialised steel from Russia, delays with crucial equipment and even a road accident in which vital diesel generators were damaged. 

Overall, India lags far behind China in defence capabilities, analysts say, making the success in beating its regional rival in the race to develop a domestically-produced aircraft carrier significant.

China's first carrier, the Liaoning, which was purchased from the Ukraine, went into service last September. Beijing is reportedly planning to construct or acquire a bigger ship in the future. 

Jane's claimed earlier this month that it has seen evidence that China might be building its first carrier in a shipbuilding facility near Shanghai. 

India already has one aircraft carrier in operation - a 60-year-old British vessel acquired by India in 1987 and renamed INS Viraat - but it will be phased out in the coming years. 

India's ally Russia is also set to hand over a third aircraft carrier - INS Vikramaditya - later this year after a bitter row over the refurbished Soviet-era warship caused by rising costs and delays. 

The INS Vikrant, which means "courageous" or "bold" in Hindi, is a 40,000-tonne vessel which will carry Russian-built MiG-29 fighter jets and other light aircraft. 

While its hull, design and some of its machinery is domestically made, most of its weaponry will be imported as well as its propulsion system, which was sourced from GE in the United States. 

"Its primary role will only be to defend our naval fleet and it will not be used for ground attacks," retired rear admiral K. Raja Menon told AFP. 

"It's a defence carrier so it will attack platforms that are coming to attack our (naval) fleet ...without air defence our fleet just cannot survive," Menon said. 

C Uday Bhaskar, a retired naval officer and former director of the National Maritime Foundation in New Delhi, said the ship would "enhance India's credibility" - but it "would not alter the balance of power with China". 

"China's nuclear expertise and ship-building capabilities are of a higher order," he said. 

The Indian navy is currently working on 39 ships and has begun planning to make another two aircraft carriers, Bedi said.

ஐ.என்.எஸ்., அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் அணு உலை செயல்பட துவங்கியது


"ஐ.என்.எஸ்., அரிஹந்த்' அணு நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு உலை, செயல்படத் துவங்கியது. அதனால், இந்த கப்பல் விரைவில், கடற்படையில் சேர்க்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள, கப்பல் கட்டுமான மையத்தில், நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப் பட்டது,"ஐ.என்.எஸ்., அரிஹந்த்' அணு நீர்மூழ்கிக் கப்பல்.6,000டன் எடை கொண்ட,இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை ஓட்டம்,விசாகப்பட்டினம் கடல் பகுதியில், ஜன.,27ம் தேதி முதல் நடந்து வருகிறது.இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அணு உலை,நேற்று முன்தினம் இரவு செயல்பாட்டிற்கு வந்தது. அதனால், மத்திய தர அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட, இந்த நீர்மூழ்கிக் கப்பல், விரைவில் கடற்படையில் சேர்க்கப் படும் என, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள், அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில், கடலின் மேல் பகுதிக்கு வரவேண்டும்.ஆனால், அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கள், நீண்ட காலத்திற்கு கடலின் மேல் பகுதிக்கு வராமல், தண்ணீருக்குள்ளேயே செயல்படும் திறன் கொண்டவை. ஐ.என். எஸ்., அரிஹந்த், முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்போது, இது போன்ற அணு நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப் பது, கட்டமைப்பது மற்றும் செயல்பாட்டு கொண்டு வருவதில், திறன் படைத்த நாடுகள் பட்டியலில், ஆறா வது நாடாக, இந்தியா இடம் பெறும்.

இந்தியாவின் முதல் அணு நீர்மூழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., அரிஹந்த்தில் உள்ள, அணு உலை செயல்பாட்டிற்கு வந்துள்ளது, பிரதமர் மன்மோகன் சிங்கை, மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அணு உலையை செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, அவர், வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Saturday, 10 August 2013

குரூப் - 4 தேர்வு விவரங்களை சரிபார்க்க தேர்வர்களுக்கு வேண்டுகோள்


"குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.inஎன்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணைய தளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற "இ-மெயில்' முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம். 

மெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். எழுதப்பட்ட சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சி மற்றும் ஒருமுகத்தன்மை கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது இந்திய அரசியலமைப்பாகும். அது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள்,மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப்பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. 

(இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல்நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய யூனியன்" என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்தஅமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு
1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது.

1. பீ. இரா. அம்பேத்கர்
2. கோபால்சாமி ஐயங்கார்
3. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
4. கே.எம். முன்ஷி
5. சையது முகமது சாதுல்லா
6. மாதவராவ்
7. டி. பி. கைதான்

ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948,பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949, ஜனவர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் கூறுகள்

இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும்(Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது: இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம்.

அடிப்படை உரிமைகள்

இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:

1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)
2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)
3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)
4. தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17)
5. பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18)
6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)
7. சமய உரிமை(பிரிவு 25-28)
8. கல்வி உரிமை(பிரிவு 29)
9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)

ஆகியன முக்கியமனவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தியாவிலுள்ள மத்திய மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்(Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோரும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.

இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.

மத்திய நிர்வாகக் குழு

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மத்திய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக மத்திய நிர்வாகக் குழு அமையும்.

குடியரசுத் தலைவர் (President of India)

இந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய அரசின் தலைவர்" ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்

இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.

மாநில அரசுகள்

1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள்
அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச் சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையியை இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது.இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது மற்றும் சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.

இந்திய அரசுச் சட்டம் 1935

இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை ,எனினும் இந்திய அரசியலமைப்பில் ஒரு பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.

கேபினெட்டு மிஷன் திட்டம்

இந்திய 1946 கேபினெட் மிஷன்

1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவைமேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.

இந்திய சுதந்திர சட்டம் 1947

சூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து அவர்கள் தங்களின் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதபடும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. சட்டம் மேலும் மற்ற மன்னர் ஆளும் மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது.இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலலச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களளட்சிக் குடியரசாக மாறியது. 26நவம்பர், 1949 தேசிய சட்டம் தினம் என்று அறியப்படுகின்றது.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

மத்திய மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. .ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி,ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சன்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் சில முக்கிய பிரமுகர்களாக இருந்தன. 

தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தர். மற்றும் பார்சிஇனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிநிதித்துவம் கொன்டிருந்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக,ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர Cஊமர் Mஊகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். ஆல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங்க் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி,கனேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

வரைவு

சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், யூனியன் நாடுகள் குழு மற்றும் மத்திய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு,தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு மற்றும் ஆறு உறுப்பினர்கள் இணைந்து நியமிக்கப்பட்டது. ஒரு வரைவு அரசியலமைப்பு தயாரிக்க பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உறுவாக்கியவர்கள் , பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும் , மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகளை அமரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன . அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, ஒரு உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு,பியூகார் ராம்மனோஹர் சின்ஹா மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு இந்திய அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் சட்டம் ஆனது.

அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.

அமைப்பு

அரசியல், அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளை கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொன்டது எண்றாலும் ஒரு வலுவான ஒற்றை சார்பு கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் அமைப்பு

பின்வருமாறு மத்திய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிரது.

"ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது. ”

கூட்டாட்சி அமைப்பு

அரசியலமைப்பு மத்தியில் மற்றும் மாநிலங்கள் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சக்திகளை மூன்று பட்டியல்,அதாவது மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியலில் என பிரிக்கிறது.தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன.பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான ராஜ்ய சபா,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

பாராளுமன்ற ஜனநாயகம்

இந்திய ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் நேரடியாக மக்களால் கிடையாது.ஜனாதிபதி மாநில தலைவர் உள்ளார் மற்றும் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.

சுதந்திரமான நீதித்துறை

இந்திய நீதித்துறை நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது, மற்றும் இரு மாநிலங்கள், அல்லது ஒரு மாநிலம் மற்றும் யூனியன் இடையே பிரச்சினைகளிள் ஒரு நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டு உள்ளது, மற்றும் அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பிலல்லாததாக அறிவிக்க முடியும்.

அரசியலமைப்பை மாற்ற அரசியல் சட்ட திருத்தங்கள் கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி , பாராளுமன்றம் மாற்றம் செய்யல்லாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும்.மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை,பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டம் ஆக நிறைவேறி உள்ளது.எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்ட உள்ளது.

சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு

நீதிமுறை மேலாய்வு அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது.நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,

1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
பகுதி 13( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 14( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.


Saturday, 3 August 2013

நினைவுத்திறன் - ஒரு உளவியல்ரீதியான அலசல்


நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடையாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும்,எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.

ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில்லியன் மூளை செல்கள் அல்லது நியூரான்களைக் கொண்டுள்ளது. நியூரானுக்கு நடுவில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழைகள் இருக்கின்றன. இந்த இழைகளின் மூலமே, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணைப்புகள் மற்றும் உப பகுதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளையின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையானது, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவுசெய்து கொள்கிறது.

இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட்பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரிகல் செயல்பாடு எனவும், ரசாயன செயல்பாடு எனவும் அல்லது இரண்டும் கலந்தது எனவும் சொல்லப்படுவதுண்டு. இந்த பதிவு செய்தலானது, ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கும் ஏற்றவகையில் மாற்றம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. நினைவானது மூளையின் வெவ்வேறு பகுதியில் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப்பிடலாம்.

நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கிறது என்று பார்த்தால், நாம் பார்ப்பது,கேட்பது, உணர்வது என அனைத்தையும் அது பதிவு செய்கிறது. நாம் தூங்கும்போது எதையும் அதிகமாக பதிவுசெய்ய முடியாததற்கு காரணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அறிதாகவே உணர்கின்றன.

முடியும் என்று நம்புங்கள்

ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படியே, அதை நம்மால் வெற்றிகரமாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம்மிடம் உள்ளது என்று நம்புவதுதான். இறைவன்,உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் கடுமையான முயன்றும் மூளையின் செயல்பாட்டு அற்புதத்தையும்,அதன் திறனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. மூளையானது, உங்கள் வாழ்வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள்ளும் திறன் பெற்றது.

ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கிறார்கள், உங்களைவிட குறைவாய் படித்தவர்கள் செய்கிறார்கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், ஏன் உங்களால் முடியாது என்று எண்ண வேண்டும்.இந்த நம்பிக்கைதான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.

நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்

ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதையும் சாதிக்க முடியாது. நம்பிக்கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழமொழி.
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானியோ, வரலாற்று அறிஞரோ, இசைக் கலைஞரோ,அரசியல்வாதியோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காகவே அர்ப்பணிக்கின்றனர்.

ஒருவர் தனது உடலை ஆரோக்கியமாக வைக்க விரும்பினால், முறையான உணவுமுறை, உடற்பயிற்சி,வாழ்க்கைமுறை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற்றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இதுபோலத்தான் நமது நினைவுத்திறனும். நினைவுத்திறனை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்களின் வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இதுபோன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இருந்து விடுகின்றனர். எனவே எதை தொடங்கினாலும் உடனே துவங்குங்கள்.

தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்
கடவுள் எப்போதுமே ஓரவஞ்சனை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன்னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மூளையின் திறனில் வித்தியாசம் இருப்பதில்லை, ஆனால் அதன் விருப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப்பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவரால் செய்ய முடியாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப்பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.
நீங்கள் உங்களின் நினைவாற்றலை மேம்படுத்த விரும்பினால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள். உலகின் மிகப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள்(உதாரணம்-ஐன்ஸ்டீன்) என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். எனவே நினைவுத்திறன் குறைபாடு என்பது அறிவுத்திறன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க்கைக்கு தேவையான விஷயமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சிகளின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.

நம்பிக்கையுடன் இருங்கள்

நம்பிக்கையில்லா மனிதன் எதையுமே சாதிக்க முடியாது. நம்பிக்கை என்பது ஒரு போட்டியில் உங்களின் எதிராளியை வெல்வதற்கு மட்டும் தேவையான அம்சம் அல்ல, உங்களின் உள்ளார்ந்த பயம் மற்றும் சந்தேகங்களைப் போக்குவதற்கும் நம்பிக்கை அவசியம். ஓட்டுநர் பயிற்சியை முடித்த பிறகு, தனியாக சாலையில் வண்டியை ஓட்ட வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். முதன்முதலில் ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வேண்டுமெனில் நம்பிக்கை வேண்டும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளுமே சுய அழிவுக்கு வித்திடுபவை. ஒரு விஷயத்தை உங்களால் நினைவில் வைக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால், உங்களின் மூளைக்கு "அதை மறந்துவிடு" என்று கட்டளைப் போகிறது. எனவே எதிலுமே நம்பிக்கை வேண்டும்.

பிரச்சினை என்ன என்பதைக் கண்டறியவும்
உங்களுக்கு பொதுவில் நல்ல நினைவுத்திறன் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவில் நிற்காமல் போகும். அவற்றை நினைவிற்கு கொண்டு வருவதில் நீங்கள் எப்போதுமே சிரமப்படுவீர்கள். சிலருக்கு, பெயர்கள் மறந்துபோகும். சிலருக்கு இடங்கள் மறந்துபோகும்.சிலருக்கோ, எண்கள் மறந்துபோகும் மற்றும் சிலருக்கு ஆட்களின் முகங்கள் மறந்துபோகும். சிலருக்கு நல்ல விஷய ஞானம் இருந்தும், அவர்களால் ஒரு மேடையில் தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க இயலாது. சிலருக்கு எவ்வளவு கடினப்பட்டு படித்திருந்தாலும், தேர்வு அறையில் பதில்களை நினைவில் கொண்டுவந்து எழுதுவதில் சிரமம் இருக்கும்.

இத்தகைய குறைபாடுகள் அனைத்திற்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆர்வமின்மை,பதட்டம் மற்றும் புரிந்துகொள்ளாமல் படித்தல் போன்ற காரணங்கள் அவற்றுள் சில. எனவே இவற்றை அறிந்து நாம் சரிசெய்தால், நமது நினைவுத்திறன் குறைபாட்டு பிரச்சினையைத் தீர்க்கலாம்.
நமது மூளையில் ஏகப்பட்ட செய்திகள் உட்புகுவதால், எதை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் எதை அழித்துவிட வேண்டும் என்ற வரையறையை நாம் உருவாக்க வேண்டும்.

மூளையின் திறனை அறிதல்

மனித மூளையில் இன்னும் கண்டறியப்படாத ஏராளமான எண்ணிக்கையில் சிக்கலான அமைப்புகள் உள்ளன. மனித மூளையானது அளவற்ற விஷயங்களை நினைவில் வைக்கும் திறன் கொண்டது.வேற்றுமொழி பெயர்கள், வருடங்கள், எண்கள் மற்றும் கவிதைகள் உள்ளிட்ட பலவித அம்சங்களை நினைவில் வைத்து, தேவைப்படும்போது உடனடியாக வெளிக்கொணரும் ஆற்றல் உடையது. பல அசாதாரண நினைவாற்றல் உள்ள நபர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நீங்கள் வியந்திருப்பீர்கள்.எனவே, உங்களின் நினைவுத்திறனை மேம்படுத்தினால் நீங்களும் பலரை வியக்க வைக்கலாம்.

உதவி பேராசிரியர் நியமனம் : பணி அனுபவ கணக்கீட்டை அறிவித்தது டி.ஆர்.பி.


பணி அனுபவ கணக்கீட்டால், உதவி பேராசிரியர் நியமனத்தில், இரு மாதங்களாக நிலவி வந்த சர்ச்சை, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பால் முடிவுக்கு வந்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடம் டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்படுகிறது. இதற்காக, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள தகுதிகளில், முதுகலை பட்டத்தில், 55 சதவீதம் மதிப்பெண்ணுடன், மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவை தவிர, எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும் தகுதியுடையவர் என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தகுதி அடிப்படையில் நடக்கும் இத்தேர்வுக்கு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண், 34. இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. "ஆசிரியரின் பணி அனுபவம் என்பது, "நெட், ஸ்லெட்' அல்லது பிஎச்.டி., தகுதி பெற்ற நாளிலிருந்து, ஆசிரியராக பணியாற்றுவதே, கணக்கில் எடுத்து கொள்ளப்படும்' என, டி.ஆர்.பி., தெரிவித்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர் பணி அனுபவத்துக்கு, "ஸ்லெட், நெட்' போன்ற தகுதித் தேர்வை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. பணி அனுபவம் குறித்து, தெளிவாக முடிவை வெளியிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை, விசாரித்த ஐகோர்ட், "பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைப்படி, பணி நியமனத்துக்கு, கடைப்பிடிக்கப்பட்ட கல்வி தகுதியைக் கொண்டே, பணி அனுபவத்தை கணக்கிட வேண்டும்' என தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்பும், பணி அனுபவத்தைக் கணக்கிடுவது குறித்து, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தவில்லை. எந்த முறையில், பணி அனுபவத்தை கணக்கிட வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவிக்காததால், பணி அனுபவ ஆணை பெற முடியாமல், ஆசிரியர்கள் பரிதவித்தனர். இதையடுத்து, ஆசிரியர் ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், விண்ணப்பம் அனுப்பும் கடைசி தேதியை, ஆக., 12ம் தேதி வரை நீடித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த நீண்ட பிரச்னைக்கு முடிவு காணும் வகையில், பணி அனுபவ கணக்கீட்டு முறையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்துள்ளது. அதில், பணி அனுபவ கணக்கிடுவது பற்றி கூறியிருப்பதாவது: கீழ்கண்ட தேதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன், கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுபவர்களின், பணி அனுபவம் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். முதுகலை பட்ட படிப்பில், 50 சதவீத மதிப்பெண்களுடன், 1991ம் ஆண்டு முன் தேர்ச்சி பெற்றவர்கள்; 1991, செப்., 19ம் தேதிக்கு முன், "நெட், ஸ்லெட்'டுடன், முதுகலையில், 55 மதிப்பெண் பெற்றவர்கள்; 1993, டிச., 31ம் தேதிக்கு முன் எம்.பில்., முடித்தவர்கள், பிஎச்.டி., சமர்ப்பித்தவர்கள்; 2002, டிச., 31ம் தேதிக்கு முன், பி.எல்., முடித்துவிட்டு, இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தவர்கள் - பிஎச்.டி., முடித்து விட்டு, முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தவர்கள்; 2010, ஜூலை 30ம் தேதிக்கு முன், பிஎச்.டி., முடித்தவர்கள் ஆகியோரது, பணி அனுபவம், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பொது அறிவு

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

1. தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் – சென்னை
2. தமிழ்நாட்டின் டெட்ராயிட் – சென்னை
3. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
4. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்
6. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல்
7. தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
8. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் – சிவகாசி
9. தமிழ்நாட்டின் புனித பூமி – இராமநாதபுரம்
10. தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி – நாகப்பட்டினம்
11. தமிழ்நாட்டின் இயற்கை பூமி – தேனி
12. தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி – சிவகங்கை 
13. தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் – கரூர்
14. தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் – காஞ்சிபுரம்
15. தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் – நாமக்கல்
16. தென்னிந்தியாவின் ‘காசி’ – இராமேஸ்வரம்
17. மலை வாழிடங்களின் ராணி – ஊட்டி
18. மலை வாழிடங்களின் இளவரசி – கொடைக்கானல்
19. மலைகளின் ராணி – ஊட்டி
20. மலைகளின் இளவரசி – வால்பாறை
21. ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு
22. குதிரை சந்தை – ஈரோடு
23. மஞ்சள் சந்தை – ஈரோடு
24. ஜவுளிச் சந்தை – ஈரோடு
25. பட்டு நகரம் – காஞ்சிபுரம்
26. முத்து நகரம் – தூத்துக்குடி
27. தென்னாட்டு கங்கை – காவேரி
28. கோயில் நகரம் – மதுரை
29. தூங்கா நகரம் – மதுரை
30. விழாக்களின் நகரம் – மதுரை
31. கோயில்களின் நகரம் – காஞ்சிபுரம்
32. கோட்டைகளின் நகரம் – வேலூர்
33. மலைக்கோட்டை நகரம் – திருச்சி
34. கல்லில் கவிதை – மாமல்லபுரம்
35. தொழில் நகரம் – விருதுநகர்
36. முக்கடல் சங்கமிக்கும் நகரம் – கன்னியாகுமரி
37. இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் – நாகப்பட்டினம்
38. தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ – குற்றாலம்
39. கீழை நாடுகளின் ‘ஏதென்ஸ்’ – மதுரை
40. கலாச்சாரத்தின் தலைநகரம் – தஞ்சாவூர்
41. கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து’ – திண்டுக்கல்
42. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் – கன்னியாகுமரி
43. இந்தியாவின் பின்னலாடை நகரம் – திருப்பூர்
44. தென்னிந்தியாவின் அணிகலன் – ஏற்காடு
45. புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) – சேலம்
46. போக்குவரத்து நகரம் – நாமக்கல் 
47. முட்டை நகரம் – நாமக்கல்
48. தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) – புதுக்கோட்டை
49. அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) – சிதம்பரம்