"ஐ.என்.எஸ்., அரிஹந்த்' அணு நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு உலை, செயல்படத் துவங்கியது. அதனால், இந்த கப்பல் விரைவில், கடற்படையில் சேர்க்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள, கப்பல் கட்டுமான மையத்தில், நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப் பட்டது,"ஐ.என்.எஸ்., அரிஹந்த்' அணு நீர்மூழ்கிக் கப்பல்.6,000டன் எடை கொண்ட,இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை ஓட்டம்,விசாகப்பட்டினம் கடல் பகுதியில், ஜன.,27ம் தேதி முதல் நடந்து வருகிறது.இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அணு உலை,நேற்று முன்தினம் இரவு செயல்பாட்டிற்கு வந்தது. அதனால், மத்திய தர அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட, இந்த நீர்மூழ்கிக் கப்பல், விரைவில் கடற்படையில் சேர்க்கப் படும் என, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல்கள், அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய, குறிப்பிட்ட கால இடைவெளியில், கடலின் மேல் பகுதிக்கு வரவேண்டும்.ஆனால், அணுசக்தியில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கள், நீண்ட காலத்திற்கு கடலின் மேல் பகுதிக்கு வராமல், தண்ணீருக்குள்ளேயே செயல்படும் திறன் கொண்டவை. ஐ.என். எஸ்., அரிஹந்த், முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்போது, இது போன்ற அணு நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைப் பது, கட்டமைப்பது மற்றும் செயல்பாட்டு கொண்டு வருவதில், திறன் படைத்த நாடுகள் பட்டியலில், ஆறா வது நாடாக, இந்தியா இடம் பெறும்.
இந்தியாவின் முதல் அணு நீர்மூழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., அரிஹந்த்தில் உள்ள, அணு உலை செயல்பாட்டிற்கு வந்துள்ளது, பிரதமர் மன்மோகன் சிங்கை, மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அணு உலையை செயல்பட வைக்கும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, அவர், வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment