Saturday, 17 August 2013

கனடா நாட்டு சாலைக்கு காந்திஜி பெயர் சூட்டல்

கனடா நாட்டு சாலைக்கு, காந்தியடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனித உரிமைக்காக பாடுபட்ட, காந்தியடிகளின் சேவையை பாராட்டி, கனடா நாட்டின், டிரான்ஸ்கோனா என்ற நகரில் உள்ள சாலைக்கு, 2010ல், அவரது பெயர் சூட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டு, தற்போது, வின்னிபெக் என்ற, நகரில் உள்ள சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற, வின்னிபெக் நகர மேயர், சாம் காட்ஸ் குறிப்பிடுகையில், ""மக்களின் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்டு, உயிர் துறந்த காந்திஜியின் சேவையை பாராட்டி, இந்த தெருவுக்கு, அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது அகிம்சை போதனைகள், உலக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,'' என்றார். கனடா நாட்டின் காந்தி மைய தலைவர் தட்சிணாமூர்த்தி குறிப்பிடுகையில், ""மனித உரிமைக்காக போராடிய காந்தியடிகளை என்றும் மறக்க முடியாது,'' என்றார்.

No comments:

Post a Comment