ஆப்பிரிக்க நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் நிகழ்த்திவரும் சுரண்டல்கள், அந்நாடுகளின் அன்றாட வாழ்க்கை, தொழிலாளர் நல உரிமைகள், உணவுப் பாதுகாப்பு, ராணுவ மோதல் என்று எல்லா துறைகளிலும் எதிரொலிக்கின்றன. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
சூயஸ் கால்வாய் நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு வல்லரசுகளுக்கு தனித்தனியாக ஈடுகொடுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒன்றியம் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. தங்களிடம் கனிமம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இல்லை என்பதால்தான், ஆப்பிரிக்காவைக் கூட்டாளியாகச் சேர்த்துகொள்ள ‘யூரோப்ரிக்கா’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின.
இவற்றையெல்லாம் மறைக்கத்தான் சமீபத்தில் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து உதவியளிக்க சுமார் 6,600 கோடி நிதியத்தை அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. இதன் மூலம் ஆப்பிரிக்க மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி பயிலலாம். வர்த்தக உறவுகளை மேம்படுத்தலாம். ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் தேர்தல்களை ஐரோப்பிய ஒன்றியம் மேற்பார்வையிடும். ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றெல்லாம் கூறப்படுகின்றன.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த ஏற்பாடுகள் நல்ல நோக்கத்திலானவை என்று தோன்றலாம். உண்மையில், ஆப்பிரிக்காவின் 80% சந்தையை ஐரோப்பிய நாடுகளுக்குத் திறந்துவிடுவதும், ஆப்பிரிக்க நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும்தான் இதன் உண்மையான நோக்கங்கள். எனவேதான், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தப் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு ஆப்பிரிக்க நாடுகள் ஒப்புதல் தரத் தயங்குகின்றன.
- அல்ஜசீரா தலையங்கம்
No comments:
Post a Comment