Wednesday, 10 September 2014

கூட்டுறவு பணியாளர் தேர்வு மதிப்பெண் விவரம், கட்-ஆப் மார்க் வெளியீடு: நேர்முகத் தேர்வு 21-ம் தேதி தொடங்குகிறது

கூட்டுறவுப் பணியாளர் தேர்வு மதிப்பெண் விவரம் மற்றும் கட்-ஆப் மார்க் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கும் என்று கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9.12.2012 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
கூட்டுறவுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 2.23 லட்சம் பேர் எழுதினர். எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அதில் 7,200 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு 2012-ம் ஆண்டு டிசம்பர், 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்முகத் தேர்வு நடத்தப் பட்டது.
இந்த நிலையில், கூட்டுறவு தேர்வு முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்ணையும், ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட் டிருந்த கட்-ஆப் மார்க் பட்டிய லையும் வெளியிடுமாறு உயர் நீதி மன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
மதிப்பெண் விவரம் வெளியீடு
இந்த நிலையில், கூட்டுறவுப் பணியாளர் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் மதிப்பெண் விவரங்கள் செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக கூட்டுறவுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுப் பணியாளர் தேர்வெழுதியவர்கள், நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் ஆகியோரின் மதிப்பெண்ணும், ஒவ்வொரு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வு நாள் விவரமும் www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டிருக்கிறது.
நேர்காணல் எப்போது?
நேர்முகத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் வெவ்வேறு நாட்களில் தொடங்கும்.
தகுதியான விண்ணப்பதாரர் களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தனித்தனியே அனுப்பப்படும். மேலும், விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட இணையதளத்தில் 12-ம் தேதி (வெள்ளி) முதல் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment