பொதுத் துறை வங்கிகளில் உள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பை Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்டுள்ளது. இதன்படி தகவல் தொழில்நுட்ப அதிகாரி, வேளாண் கள அதிகாரி, சட்ட அதிகாரி, மனித வள அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி, பட்டய கணக்காளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 20 -35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் சலுகை உண்டு.
பொறியியல் பட்டப் படிப்பு, வேளாண் பிரிவில் பட்டப் படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ., என்று விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப சிறப்புத் தகுதி தேவை. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட மையங்களில் தேர்வுகள் நடைபெறும். இந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்க ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://www.ibps.in/career_pdf/Draft_ad_Specialist_Officers_III.pdf என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment