Tuesday, 10 December 2013

சில தகவல்கள்

திரைப்படங்களுக்குத் தடை

பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர்நீதிமன்றம், இந்தியத் திரைப்படங்களை பாகிஸ்தான் தியேட்டர்களில் திரையிடக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. திரைப்படங்களை அனுப்பும் நபர்கள் தங்களைப் பற்றி தவறான தகவல்கள் மற்றும் போலியான ஆவணங்களின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு திரைப்படங்களை அனுப்ப அனுமதிக்கக் கூடாது என்று கூறுகிறது லாகூர் நீதிமன்றம்.

காலட்சேபம்

கதாகாலட்சேபம் என்கிற கலை மராத்திய நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்ததாம். தஞ்சாவூர் கிருஷ்ணா பாகவதரால் தெளிவாக முதலில் அமைக்கப்பட்டு பின்னர் திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரியால் வளர்க்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பகாலத்தில் காலட்சேபம் ஒருவகை இசை நிகழ்ச்சியாகவே இருந்தது. பின்னரே காலப்போக்கில் இன்றைய வடிவுக்கு வந்ததாம்.

முதல் எழுத்தாளர்

கி.மு. 556 - 467-இல் கிரீஸ் நாட்டில் வாழ்ந்த கவிஞர் ஸிமோனைட்ஸ் என்பவர்தான் தனது எழுத்துக்குப் பணம் பெற்ற முதல் எழுத்தாளர் எனத் தெரிகிறது. எழுதினாலும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு வழிகாட்டியவர் அவர்தான். ஸிமோனைட்ஸ் தொடர்ந்து 53 ஆண்டுகள் அந்நாட்டின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

திரைப்படங்களுக்குத் தடை




No comments:

Post a Comment