உள்ளாட்சி அமைப்பு: அரசாங்கம் மற்றும் நிர்வாகம்
* அரசியல் உரிமைக்கான இந்தியாவின் இடைவிடாத போராட்டக் காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.
* உரிமை பெற்ற பின்பு கிராம பஞ்சாயத்து முறை ஏற்படுத்தப்படவும் அவற்றை முன்னேற்றச் செய்யவும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
* இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து முறை பற்றிய அரசு நெறிமுறைக் கோட்பாட்டினை ஏற்படுத்தியதன் மூலமாக பஞ்சாயத்து முறைக்கு நிலையான சிறப்பிடம் கொடுக்கப்பட்டது.
* மாநிலங்கள் கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த முயற்ச்சிக்க வேண்டும். அவை தன்னாட்சி முறையின் பகுதிகளாக சிறப்பாக இயங்குவதற்கு தேவையான அதிகாரங்களையும், மேலாண்மை உரிமைகளையும் அவற்றுக்கு வழங்க வேண்டும் என அரசியலமைப்பின் Art.40 கூறுகிறது.
* அரசிலமைப்பின் ஷரத்து 40, கருத்தளவில் மட்டும் விட்டுவிடப்படாமல், செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டது.
* 1959-ம் ஆண்டு பஞ்சாயத்து இராஜ்யம் நாட்டுப்புற சிற்றூர் வளர்ச்சிப் பணியுடன் தொடர்பு கொண்டதாக இருந்தது.
* அவை தொகுதி முன்னேற்றக் குழுவின்(Block Development Committee) இடம் பெற்றிருந்தன. அவை சமூக முன்னேற்றத் திட்டத்திற்கு (Community Development Programme) ஆலோசனா கூறுவதாகவும் அமைந்திருந்தன.
* ஆனால் 1959-க்குப் பின் அவை பஞ்சாயத்துக்களின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பினைப் பெற்றன.
* மத்திய அரசாங்கம், 1959-ம் ஆண்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைக் கூறவும், திறமையைக் கண்காணிக்கவும், சமூக முன்னேற்றத் திட்டத்தினை சிறப்பாக மாற்றியமைக்க வேண்டிய மவழிமுறைகளைக் கூறவும், அஷோக் மேத்தா என்பவர் தலைமையில் குழு ஒன்றை நியமனம் செய்தது.
* அக்குழு, நாட்டுப்புற ஸ்தல சுய ஆட்சிமுறை பற்ரிய மூன்று அடுக்குத் திட்டங்களை Three Tier System) பரிந்துரைத்தது.
* அத்திட்டம் ஜனநாயக அதிகாரப் குவிப்பற்ற முறை (Democratic Decentralization) எனப் பெயரிடப்பட்டது.
* இதுவே பஞ்சாயத்து இராஜ்யம் எனவும் ஆகியது. அஷோக் மேத்தா குழுவின் முக்கியப் பரிந்துரைகள் பின்வருமாறு:
* நாட்டுப்புறப் பகுதிளின் முன்னேற்றப்பணிகள் சம்மந்தமான வேலைகள், சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்பான பஞ்சாயத்து(Panchayat Samiti) ஒப்படைக்க வேண்டும்.
* பஞ்சாயத்து தலைவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு அங்கமாக அமைக்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு மாநிலமும் அதற்கான பஞ்சாயத்துசமிதியைத் தேர்ந்தெடுக்கும் முறையைக கொண்டிருக்கிறது. அந்தத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாயத்து சமிதியின் இணை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பஞ்சாயத்து சமிதிகளின் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சில கூட்டு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய ஜில்லா பரிஷத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
* அவர்களுள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரும் இந்த ஜில்லா பரிஷத்தில் ஒரு ஆலோசனை கூறுகின்ற, ஒருமுகப்படுத்துகின்ற, மேற்பார்வை செய்கின்ற அமைப்பாக இருக்க வேண்டும்.
* பஞ்சாயத்துக்களின் வரவு செலவுத்திட்டங்களைப் பஞ்சாயத்து சமிதி ஆய்வு செய்ய வேண்டும். பஞ்சாயத்து சமிதிகளின் வரவு செலவுத் திட்டங்களை ஜில்லா பரிஷத் ஆய்வு செய்ய வேண்டும்.
* பஞ்சாயத்து சமிதியின் பணிகளில் தேசிய விரிவாக்கத் திட்டத்தால் நடத்தப்படும் பணிகளும், மாவட்ட ஆட்சிக் குழுவின் பணிகளும் அடங்கும்.
* பஞ்சாயத்து சமிதி சதந்திரமான வருவாய்த் துறையைக் கொண்டு இயங்க வேண்டும்.
* சமூக முன்னேற்றத் துறை அதிகாரிகள் (Block Development Officers) பஞ்சாயத்து சமிதியின் நிர்வாக அதிகாரியாகவும், செயலாளராகவும் பணியாற்ற வேண்டும்.
கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் முன்னேற்றப் பணிகளுக்காகப் பாடுபட வேண்டும்.
* இந்த அமைப்புக்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும். மாநில அரசு இவ்வமைப்புக்களை விலக்கி வைக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.
* அஷோக் மேத்தா அறிக்கை தலைசிறந்த அறிக்கை(Master Blue Print) எனவும், பஞ்சாயத்து ராஜ்யத்தின் பைபிள் (Bible of Panchayat Raj) எனவும் அழைக்கப்பட்டது.
* முதன் முதலாக இராஜஸ்தான் மாநிலத்திலும், பிறகு ஆந்திரப்பிரதேசத்திலும் தான் ஜனநாயக அதிகாரக் குவிப்பற்ற முறை(Democratic Decentralization) ஏற்படுத்தப்பட்டது.
* 1963-ம் ஆண்டின் முடிவில் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பஞ்சாயத்து இராஜ்யம் ஏற்படுத்தப்பட்டது.
* மேத்தா குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, பெருமாபான்மையான மாநிலங்கள் மூன்றடுக்கு முறையே பின்பற்றுகின்றன.

No comments:
Post a Comment