Tuesday, 3 December 2013

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், 268 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பிப்ரவரி, 23ல் நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள், 57; நேர்முக உதவியாளர்கள், 7; உதவியாளர்கள், 37; டைப்பிஸ்ட், 139; கம்ப்யூட்டர் ஆபரேட்டர், 28 என, மொத்தம், 268 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள், இம்மாதம், 20ம் தேதி. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, பிப்ரவரி, 23ம் தேதி நடக்கிறது. தேர்வு குறித்த முழு விவரம், டி.என்.பி.எஸ்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment