சொற்களுக்கு தேக்க நிலை
நம்முடைய பல்வேறு பிரச்சினைகளில் ஒன்று பொருளாதார நடவடிக்கைகளை விவரிக்கச் சரியான கலைச்சொற்கள் இல்லை என்பது. உண்மையில் நடப்பது என்ன என்பதைச் சரியாக விவரிப்பதற்கான சொற்கள் நம்மிடையே இல்லை. உலகைப் பீடித்திருந்த பொருளாதாரத் தேக்கநிலை அகன்றுவிட்டது. தேக்கநிலை என்றால் உற்பத்தி சுருங்குவது. விரிவாக்கம் என்றால் உற்பத்தி பெருகுவது. அப்படித்தான் ‘பொருளாதார ஆய்வுக்கான தேசிய அமைப்பு’ வர்த்தகச் சுழல்களை வர்ணிக்கிறது. அதில் கற்றுத் துறைபோகிய பொருளாதார அறிஞர்கள்தான் இடம்பெற்றுள்ளனர்.
தேக்க நிலை நின்றுவிட்டது
பொருளாதாரம் சுருங்குவது 2009-ம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே நின்றுவிட்டது என்று அந்த அமைப்பின் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான அமெரிக்கர்கள் - 53% - இன்னமும் தேக்கநிலையிலேயே பொருளாதாரம் இருப்பதாகக் கருதுகின்றனர். எல்லா மாநிலங்களிலும் ஆய்வு நடத்திய தேசியப் பத்திரிகை இதைத் தெரிவிக்கிறது. இன்னமும் பொருளாதார ரீதியாக நிலைமை சரியாகவில்லை என்றே அவர்கள் நினைக்கின்றனர்.
அவர்கள் சொல்வது தவறு என்று யாரால் சொல்ல முடியும்? லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமலே இருக்கும் இந்தக் காலத்திலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்ட அளவு 7% ஆகவே நீடிக்கிறது என்னும்போது அவர்கள் சொல்வது எப்படித் தவறாக இருக்க முடியும். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, இதுவரை இருந்திராத அளவுக்கு மக்களுக்கு எதிர்காலத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னால் வர்த்தகத்தில் தேக்கநிலை ஏற்பட்டபோதெல்லாம், சிறிது காலத்துக்குப் பிறகு நல்ல காலம் பிறக்கும், தங்களுடைய ஊதியம் மேலும் உயரும் என்றே அமெரிக்கர்கள் நம்பினார்கள். இப்போது அப்படியல்ல.
தேக்க-வீக்கம்
ஏதோ மாறியிருக்கிறது, ஆனால் நம்முடைய பொருளாதாரக் கலைச்சொற்கள் மாறவில்லை. ஆனால், இது இப்போதும் உண்மையல்ல. மொழி சில வேளைகளில் சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. 1970-களில் ஒரே சமயத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்தது, பணவீக்கமும் அதிகரித்தது. பணவீக்கம் அதிகரித்தால் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்று அப்போது கருதப்பட்டுவந்தது. இந்தப் புதிய சூழலால் ‘தேக்க வீக்கம்’ (ஸ்டாக்-பிளேஷன்) என்ற அருஞ்சொல் கிடைத்தது.
ஏழ்மைக் குறியீட்டெண் என்பதும் அப்போது உருவானது. 6% வேலையில்லாத் திண்டாட்டமும் 6% பணவீக்கமும் சேர்ந்து 12 ஆனது. 1979, 1980-களில் அது 20% ஆகவே இருந்தது.
எது தேக்கநிலை
பால் க்ருக்மேன் சமீபத்தில், ‘தேக்கநிலைபோன்ற சூழல்’ இன்னும் 10 ஆண்டுகளுக்குக்கூட நீடிக்கலாம் என்று எழுதியிருந்தார். தேக்கநிலை என்பது மிகவும் அதிகப்படியான வார்த்தை என்பது என் கருத்து.
உலகம் முழுக்க ஏற்கும்படியான விளக்கம் ஏதும் இல்லை. தேக்கநிலை என்றால் மக்கள் எதையெல்லாம் தேக்கநிலையாகக் கருதுகிறார்களோ அவை யாவும். என்னைப் பொருத்தவரை நீண்ட காலத்துக்கு எல்லாத் துறைகளிலும் உற்பத்தி முடங்கி, வேலையில்லாத் திண்டாட்டம் இரட்டை இலக்கமாக இருந்தால்தான் தேக்கநிலை என்பேன்.
இந்த அளவுகோலின்படி பார்த்தால், அமெரிக்கா தேக்கநிலையை நெருங்கிவிடவில்லை. பலருக்கும் ஏமாற்றம் அளித்தாலும் பொருளாதாரம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 2010 பிப்ரவரி முதல் 70 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது.
1930-களைப் போல அல்ல இது. அப்போது மீட்சி ஏற்பட்டபோதும் விவசாயம் அல்லாத துறைகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 32% ஆகயிருந்தது. 1932-ல் சராசரியாக 20% ஆனது. ஆனால், என்னுடைய மதிப்பீட்டின்படி சில ஐரோப்பிய நாடுகள் தேக்கநிலையிலேயே இருக்கின்றன. கடைசியாகத் திரட்டிய தகவல்களின்படி வேலையில்லாத் திண்டாட்டம் கிரீஸ் நாட்டில் 28% ஆகவும் ஸ்பெயினில் 27% ஆகவும் போர்ச்சுக்கலில் 16% ஆகவும் இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரம் விரைவிலேயே மாறிவிடும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை.
‘சார்பற்ற தேக்கநிலை’
‘சார்பற்ற தேக்கநிலை’ (செகுலர் ஸ்டேக்னேஷன்) என்பதும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. 1930-களில் இந்த அருஞ்சொல் உருவானது. தேக்கநிலை ஏன் பல ஆண்டுகள் நீடித்தது என்பதை இது விளக்குகிறது. முதலீட்டு வாய்ப்புகள் குறைந்ததாலேயே தேக்கநிலை இப்படி நெடுங்காலம் நீடித்தது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பொருளியல் அறிஞர் ஆல்வின் ஹேன்சன் விவரித்தார். மக்கள்தொகைப் பெருக்கம் குறைந்துவருகிறது. அமெரிக்க எல்லை திறந்து விடப்பட்டிருக்கிறது. வர்த்தக முதலீட்டுக்கான வாய்ப்புகள் கரைந்து ஆவியாகிவிட்டன. முதலீட்டுக்கு ஊக்குவிப்பாகத் திகழக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பலவீனமடைந்துவிட்டன. இதன் விளைவாக, ஏற்படக்கூடிய மீட்சிகள்கூட, பிஞ்சிலேயே கருகிவிடுகின்றன. எனவே, வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியே நீடிக்கிறது என்கிறார் ஹேன்சன்.
‘சார்பற்ற தேக்கநிலை’ என்றால் தொடர்ச்சியாகவும் அமைப்புரீதியாகவும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்துவதாகும் என்று சமீபத்திய உரையொன்றில் முன்னாள் நிதியமைச்சர் லாரென்ஸ் சம்மர்ஸ் விளக்கியிருக்கிறார். க்ருக்மேன், ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகையின் தலைமைப் பொருளாதார விமர்சகர் மார்டின் உல்ஃப் ஆகியோரும் வேறு சிலரும் இந்தக் கருத்தை ஆமோதிக்கின்றனர்.
தேக்கநிலையின் காரணங்கள்
முதலீட்டுப் பற்றாக்குறை நிலவுகிறது என்று சமீபத்தில் எழுதினார் உல்ஃப். இப்போது வட்டிவீதம் குறைவாக இருக்கிறது, முதலீட்டுக்கு ஏற்ற சரியான வாய்ப்புகள் இல்லாததால் மக்கள் தங்களுடைய பணத்தை வங்கிகளில் அப்படியே சேமிக்கிறார்கள் என்கிறார் உல்ஃப்.
இன்றைய தேக்கநிலைக்கு என்ன காரணம் என்று ஹேன்சனைப்போல மற்றவர்கள் அடையாளம் காணவில்லை. முதலீட்டுக்கும் வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், போட்ட முதலீடு பத்திரமாக இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதால், முதலீடு செய்யத் தயக்கம் இருக்கிறது. இதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.
மிகப் பெரிய தேக்கநிலையில் மன உறுதி குலைந்திருப்பது, உலகமயமாக்கலின் பின்விளைவு, பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டது, அரசுகளின் தொழில் - பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்க முடியாமலிருப்பது, சமூகங்களுக்கு முதுமை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, புதிய கண்டுபிடிப்புகள் குறைந்துவிட்டது, மக்கள் நல அரசுகளுக்குச் செலவு அதிகரிப்பது என்று தேக்கநிலை நீடிப்புக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
வசதியான ஏழ்மை
நமது நிலையை வர்ணிக்கச் சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘வசதியான ஏழ்மை’ என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருந்தேன். எப்படிப் பார்த்தாலும் நாம் (அமெரிக்கா) உலகிலேயே பணக்காரச் சமூகமாகவே வாழ்வோம். அதனால்தான் ‘வசதியான’ என்றேன். அப்படியும் நாம் ஏழைகளாகவே நம்மைக் கருதுகிறோம். ஏனென்றால், பொருளாதாரமானது தனிப்பட்டவர்களின், சமூகங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக இல்லை. பொருளாதார ஸ்திரநிலை விஷயத்தில்கூட நம் எதிர்பார்ப்புப்படி நடப்பதில்லை.
யதார்த்த நிலையை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலான கலைச்சொற்கள் கிடைப்பது அரிது. ‘சார்பற்ற தேக்கநிலை’ நமக்கு எச்சரிக்கையாகத் திகழ்கிறது. 1930-களில் கோட்பாடுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு அவை பல்வேறு சம்பவங்களால் அழிக்கப்பட்டுவிட்டன. மக்கள் தொகைப் பெருக்கம், புதிய குடியிருப்புகள், புதிய தொழில்நுட்பம் போன்றவை பெருகின. எனவே, தேக்கநிலை நீங்கி வளர்ச்சி ஏற்பட்டது.

No comments:
Post a Comment