Tuesday, 24 December 2013

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: உள்துறை முதன்மை செயலராக அபூர்வ வர்மா நியமனம்

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக உள்துறை முதன்மை செயலராக அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை செயலராக இருந்த அபூர்வ வர்மாவை உள்துறை, மதுவிலக்கு, கலால் வரித்துறை முதன்மை செயலராக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை உள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மை செயலர்/ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்கஜ்குமார் பன்சால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையராக கே.மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.எஸ். பழனியப்பன் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment