Saturday, 28 December 2013

பஞ்சாயத்துக்களின் அமைப்பு

பஞ்சாயத்துக்களின் அமைப்பு
* 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (1992)-ன் படி Part IX  மற்றும் Part IX A ஆகிய இரு புதிய பகுதிகள் Parts சேர்க்கப்பட்டுள்ளன.
* இவற்றின்படி ஷரத்துக்களையும், 11 மற்றும் 12 ஆகிய இரண்டு அட்டவணைகளையும் (Schedules) நாம் பெற்றிருக்கிறோம்.
* 73-வது திருத்தச் சட்டம் பஞ்சாயத்துக்களுக்கும், 74-வது திருத்தச் சட்டம் நகராட்சிகளுக்கும் (நகர்பாலிகா Nagarpalika) அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரம் வழங்குகின்றன.
* ஒவ்வொரு மாநிலத்திலும் கிராம், மாவட்ட அளவிலும், இவற்றுக்கு இடைப்பட்ட அளவிலும் பஞ்சாயத்துக்கள் நிறுவப்பட வேண்டும்.
* 20 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்தால் இடைப்பட்ட நிலையிலான பஞ்சாயத்து அமைப்பு தேவையில்லை.
* ஒரு பஞ்சாயத்து கலைக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
* எல்லா பஞ்சாயத்துக்களிலும், பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
* ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் சொந்த வரவு செலவுத் திட்டம், வரிவிதிப்பு அதிகாரங்கள் மற்றும் அதன் அதிகார எல்லைக்குள் அடங்கக்கூடிய விஷயங்கள் உண்டு.
* அந்தந்தப் பகுதிக்குள் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் போடவும், செயல்படுத்தவும் இயலும்.
* பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தேர்தல் ஆணையர் ஒருவர் இருப்பார்.
* பஞ்சாயத்துக்களின் பொருளாதார நிலையைப் பற்றிக் கவனிக்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையம் (State Finance Commission) அமைக்கப்படும்.
* அதே போல் 74-வது திருத்தச் சட்டத்தின்படி நகர் பாலிகா மற்றும் நகர பஞ்சாயத்துக்கள் அமைக்க வகை செய்யப்பட்டது.
* இட ஒதுக்கீடு, தேர்தல், வரிவிதிப்பு அதிகாரம், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளல், நிதி ஆணையம் அமைத்தல் போன்ற அனைத்தும் நகர பஞ்சாயத்துக்கான 74-வது திருத்தச் சட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* பஞ்சாயத்துக்களின் அமைப்பு முறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஐந்து முதல் ஒன்று வரை அமைந்திருக்கிறது.
* உத்திரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 முதல் 31 வரை அமைக்கப்பட்டுள்ளது.
* ஒரிசாவில் அதிகபட்ச எண்ணிக்கை 25 வரை உள்ளது. மற்ற மாநிலங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 வரை உள்ளன. இந்த எண்ணிக்கை பஞ்சாயத்துக்களின் அளவைப் பொறுத்து அமைந்திருக்கிறது.
* சில மாநிலங்களில் பஞ்சாயத்து உறுப்பினர் இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், மலை சாதியினருக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.
* இந்த இடங்கள் கூட்டு முறையில் நிரப்பப்படுகின்றன. பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.
* தமிழகத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* பெரும்பான்மையான பகுதிகளில் பஞ்சாயத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
* கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
* தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

பஞ்சாயத்து சமிதி
* சமிதிகள் ஒவ்வொன்றும் இன்றைய தாலுகா அமைப்பினைப் போன்று அதாவது112 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளன.
* ஆனால், ஒவ்வொரு அமைப்பிலும் அடங்கியிருக்கும் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது.
* சில இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, மலை சாதியினருக்கு, பெண்களுக்கு ஒதுக்கப்படுவது எல்லா மாநிலங்களிலும் பொதுவானதாகும்.
* சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பஞ்சாயத்து சமிதி அல்லது பஞ்சாயத்து யூனியன் குழுவில் பணித்துறறை சார்ந்த (Ex-Officio Members) உறுப்பினர்களாவர்.
* அவர்கள் இணை உறுப்பினர்களாக இருந்து சமிதி அல்லது குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வார்.
* ஆனால் அவர்களுக்கு தீர்மானங்களின் மீது வாக்களிக்கவோ அல்லது தலைவர் தேர்தலில் போட்டியிடவோ உரிமை இல்லை.
* சில மாநிலங்களில் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் பஞ்சாயத்து சமிதியின் பணித்துறை சார்ந்த உறுப்பினர்களாக இருப்பர். யூனியன் தலைவர் பஞ்சாயத்துத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* பல மாநிலங்களிலும், பஞ்சாயத்து சமிதி அல்லது பஞ்சாயத்து யூனியன் குழுவின் ஈயுட்காலம் பஞ்சாயத்துக்களின் ஆயுட்காலத்தைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
* கிராமப் பஞ்சாயத்துக்களின் பணிமுறைகளை 2 வகைகளாகப் பரிகிகலாம். அவையாவன: 1. கட்டாயமான பணிகள்(Obligatory Services) 2. விருப்பத்திற்குரிய பணிகள் (Optional Services)
* துப்பரவு, பொது சுகாதாரம், வீதிகளில் விளக்கு வசதி, கிராமச் சாலைகள் மேற்பார்வை, பள்ளிகள், குடிநீர் விநியோகம் போன்ற துறைப்பணிகள் பஞ்சாயத்து ஆட்சியியல் பணிகளில் அடங்கும்.
* இவை பஞ்சாயத்துக்களால் செய்யப்பட வேண்டிய கட்டாயப் பணிகள் ஆகும். மற்றவை பஞ்சாயத்துக்களின் விருப்பப்படியான பணிகள் ஆகும்.
* சமூக நலன் குறித்த பணிகள், இடுகாடு போன்றவற்றைப் பராமரித்தல், பிறப்பு இறப்புக் கணக்குகளை மேற்கொள்ளுதல், தாய்சேய் நல விடுதிகளை உருவாக்குதல், கால்நடைகளுக்கான குளங்களை வெட்டுதல், குடும்ப நல திட்டங்களைப் பரப்புதல், விவசாய வளர்ச்சி ஆகியவை விருப்பப் பணிகளாகும்.
சாலைகள் அமைத்தல், பொது மாளிகைகள் அமைத்தல், கிணறுகள் வெட்டுதல், நீர்த் தொட்டிகள் ஏற்படுத்தல், பள்ளிகள் தொடங்குதல், பஞ்சாயத்து இல்லங்கள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், படிப்பகங்களை உருவாக்குதல், நீர்ப்பாசன வசதி செய்தல், கூட்டுப்பண்ணைகள் ஏற்படுத்துதல் போன்றவை பஞ்சாயத்துக்களின் முன்னேற்றச் செயல்களில் அடங்கும்.
* பஞ்சாயத்து சமிதி அல்லது யூனியன் ஆகியவற்றின் பணிகள் சமுதாயத் தொண்டு, கல்வி, சுகாதாரம், துப்புறவு, சமூதாய நல்வாழ்வு, சாலைகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், நீர்பாசனத் திட்டங்கள், கூட்டுறவு முன்னேற்றம், கூட்டுறவுச் சங்கங்களின் முன்னேற்றம், கடன் கொடுத்தல், கைத்தொழில், சிறுதொழில், உற்பத்தித் துறைகளை மேற்பார்வையிடல், பயிற்சி முகாம்களை ஏற்படுத்துதல் போன்றவையாகும். மேற்குறிப்பிட்ட பணிகள் தவிர வேறு பிற பணிகளையும் மாநில அரசு விரும்பினால் பஞ்சாயத்து சமிதிகளிடம் ஒப்படைக்கும் நியதி உண்டு.

No comments:

Post a Comment