Wednesday, 24 July 2013

இந்திய உச்ச நீதிமன்றம்


இந்திய உச்ச நீதிமன்றம் (சுப்ரிம் கோர்ட் ஆப் இண்டியா) இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்டநீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள்இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன.

இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்றுமுதல் முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள்வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற கட்டமைவு:

சனவரி 26, 1950, ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் துவங்கியது. இதன் துவக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது.
1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது.

துவக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958 ல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்பொழுதய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக்.

உச்ச நீதிமன்ற கட்டுமானம்:

இதன் தற்பொழுதய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மையமண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை:

1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது.
பாரளுமன்றத்தின் ஏற்படுத்தப்பெற்ற தீர்மானத்தின்படி ஆண்டுகளின் வரிசையில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை.

1950 - 8 
1956 - 11 
1960 - 14 
1978 - 18 
1986 - 26 
2008 - 31 

அமர்வு:

சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது.

இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 க்கு மேற்படாதவர்களை இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது.

ஒய்வு:

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

இவர்களின் தகுதியாவன இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.

முதல் பெண் நீதிபதி:

முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர்.

முதல் தலித் நீதிபதி:

மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் தலித் சமூகத்தவர்.
முதல் தலித் தலைமை நீதிபதி 2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர்.

தலைமை நீதிபதி பதவி வகிக்காமல் சட்ட ஆணையத் தலைவர்களாக பதவி ஏற்றவர்கள் முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்:

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76 இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை.

நடுவண் அரசு வழக்குரைஞர்:

இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.

தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.

நீதிபரிபாலணை:

உச்ச நீதிமன்றம் மூன்று நீதி பரிபாலணைகளை கையாள்கின்றது. மூல நீதிபரிபாலணை, மேல்முறையீட்டு நீதிபரிபாலணை மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலணை.

மூல நீதிபரிபாலணை:

இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது.

அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) ,தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலணையைக் கொண்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிபரிபாலணை:

உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துறைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலணத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது.

ஆலோசனைக்குழு நீதிபரிபாலணை:

இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலணத்தைப் பெற்றுள்ளது.

தன்னாட்சிப் பெற்ற நீதிமன்றம்:

இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை.

உச்ச நீதிமன்ற வரலாற்றுத் தீர்ப்புக்கள்:

நிலச்சீர்த்திருத்த சட்டம் 9 (முந்தய அணுகுமுறை):

பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது.
இத்திருத்தச் சட்டத்தினை 1967 இல் உச்ச நீதிமன்றம் கோக்குல்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கின் மூலம் எதிர் கொண்டு, “ நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளை இரத்து செய்ய அதிகாரமில்லை, அது தனியார் உடமைகளுக்கும், உரிமையாளருக்கும், இந்தியக் குடியரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும்”என்ற வரலாற்றுத் தீர்ப்பீனை வழங்கியது.

அரசியலமைப்புக்கு எதிரானவையாக உச்ச நீதிமன்றம் கருதிய ஏனைய சட்டங்கள்:

• பிப்ரவரி 1, 1970, அன்று உச்ச நீதிமன்றம் செல்லாததாக்குகின்ற சட்டமாக, அரசு உதவி பெறும் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற சட்டம் நாடளுமன்றத்தால் ஆகஸ்டு, 1969, இல் நிறைவேற்றியபின் இத்தீர்ப்பினை வழங்கி செல்லாத சட்டமாக்கியது.

• செப்டம்பர் 7, 1970, இல் வழங்கிய குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கிய ஆணையான, இந்தியாவின்முந்தைய (பிரித்தானிய) ஆட்சியில் பேரரசு இளவரசரின் பெயரால் வழங்கப்பெற்ற பட்டயம், சலுகைகள், பரிசுகளை இரத்து செய்யும் ஆணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டணையளிக்கும் அதிகாரம்:

அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக் முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார்.

நீதிபதிகளின் நன்னடத்தையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு:

இந்தியாவின் உயரிய நீதிமுறைமை 2008,ஆம் ஆண்டு சந்தித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவிக் குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. 
அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன:
நீதிபதி என்பவர் பொது ஊழியரல்லர். அவர் ஒரு அரசியலமைப்பின் பொறுப்பாளர். பின்னர் தான் வெளிப்படுத்தியக் கருத்திலிருந்து விலகிக் கொண்டார்.

நீதிமுறைமை கடமைத் தவறியனவாக தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது.

பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

தேசிய நீதிபரிபாலணை மன்றம்:

இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலணை மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. 

இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா.

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்:

1. நீதியரசர் எச். ஜே. கனியா 
2. நீதியரசர் எம். பி. சாஸ்திரி 
3. நீதியரசர் மெர் சந்த் மகாஜன் 
4. நீதியரசர் பி. கே. முகர்ஜி 
5. நீதியரசர் சுதி இரஞ்சன் தாஸ் 
6. நீதியரசர் புவனேஸ்வர் பிரசாத் சின்கா 
7. நீதியரசர் பி. பி. கஜேந்திரகட்கர் 
8. நீதியரசர் ஏ. கே. சர்க்கார் 
9. நீதியரசர் கே. சுப்பா ராவ் 
10. நீதியரசர் கே. என. வான்சூ 
11. நீதியரசர் எம். இதயத்துல்லா 
12. நீதியரசர் ஜே. சி. ஷா 
13. நீதியரசர் எஸ். எம். சிக்ரி 
14. நீதியரசர் ஏ. என். ராய் 
15. நீதியரசர் மிர்சா எமதுல்லா பேக் 
16. நீதியரசர் ஒய். வி. சந்திரகுட் 
17. நீதியரசர் பி. என். பகவதி 
18. நீதியரசர் ஆர். எஸ். பதக் 
19. நீதியரசர் இ. எஸ். வெங்கட்டராமய்யா 
20. நீதியரசர் எஸ். முகர்ஜி 
21. நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 
22. நீதியரசர் கே.என். சிங் 
23. நீதியரசர் எம். எச். கனியா 
24. நீதியரசர் எல். எம். சர்மா 
25. நீதியரசர் எம். என். வெங்கட்டசலய்யா 
26. நீதியரசர் ஏ. எம். அகமதி 
27. நீதியரசர் ஜே. எஸ். வர்மா 
28. நீதியரசர் எம். எம். பன்சி 
29. நீதியரசர் ஏ. எஸ். ஆனந் 
30. நீதியரசர் எஸ். பி. பரூச்சா 
31. நீதியரசர் பி. என். கிர்பால் 
32. நீதியரசர் ஜி. பி. பட்நாயக் 
33. நீதியரசர் வி.என். கரே 
34. நீதியரசர் இராஜேந்திர பாபு 
35. நீதியரசர் ஆர். சி. லகோட்டி 
36. நீதியரசர் ஒய்.கே. சபர்வால்

பசுமைப் புரட்சி

1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சிஎனப்படுகிறது. 

இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. 

பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.

தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாக இருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன. 

இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். சாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.

உற்பத்திப் பெருக்கம்

கடந்த நூற்றாண்டு விவசாயமானது விரிவான உற்பத்தித்திறன், கலப்பு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக உழைப்பை பதிலீடு செய்தல், நீர் மாசுபாடு மற்றும் பண்ணை மானியங்கள் என்பதாகவே குறிப்பிடப்பட்டது. 1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், விவசாய உத்திகள், நடைமுறைகள், விதை இருப்புகள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட தாவரங்கள் தேர்வுசெய்யப்பட்டு புதிய பெயர்களால் வழங்கப்பட்டன, இதனுடைய அலங்காரமான அல்லது பயன்மிக்க தன்மையின் காரணமாக மத்திய காலகட்டங்களில் காணப்பட்டதைவிட ஒரு அலகு நிலத்திற்கு பல மடங்கு அதிகமாக விளைச்சலைத் தரக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டிலும், குறிப்பாக டிராக்டர்களைக் கொண்டு வேகமாகவும் பேரளவிலும் முன்பைவிட பண்ணை வேலைகள் துரிதமடைந்தன. இந்த முன்னேற்றங்கள் அமெரிக்கா,அர்ஜெண்டினா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் குறிப்பிட்ட நவீன பண்ணைகளின் திறன்கள் மேம்படுவதற்கு வழிவகுத்துள்ளன. 

ஒரு சில நாடுகளின் உற்பத்தி செய்யும் அளவு, குறிப்பிட்ட ஒரு அலகு நிலத்திற்கான அளவை விட உயர்தர உற்பத்தி அளவை எட்டியுள்ளன. அம்மோனியம் நைட்ரேட் கலவைக்கான ஹெபர்-போஷ் முறை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதோடு, பயிர் விளைச்சலில் இருந்த முந்தைய தடைகளை தாண்டி வந்துள்ளது.

உணவுதானிய அரிசி, சோளம் மற்றும் கோதுமை ஆகியவை 60 விழுக்காடு மனித உணவுத் தேவைகளைப் நிறைவு செய்தன. 1700 ஆம் ஆண்டுகளுக்கும் 1980 ஆம் ஆண்டுகளுக்கும் இடையே,"உலகளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவு 466 சதவிகிதம் உயர்ந்ததுடன்" குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பு, உயர் மகசூல் வகைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரம் ஆகியவற்றின் காரணமாகவே மகசூல் சட்டென்று அதிகரித்தது.[3] உதாரணத்திற்கு, நீர்ப்பாசனம் 1940 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை கிழக்கு கொலராடோவில் சோள உற்பத்தியை 400லிருந்து 500 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்தது. 

பூச்சி மேலாண்மை

இருப்பினும், தீவிர விவசாயத்தின் நீடிப்புத்தன்மை குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. தீவிர விவசாயம் தரம் குறைந்த மண்ணுடன் சம்பந்தப்பட்டவையாயின, அத்துடன் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், குறிப்பாக மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் உணவுத் தேவை விரிவடைவது ஆகியவற்றின் விளைவுகள் குறித்த விவாதங்களை அதிகரித்துள்ளன. தீவிர விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒற்றைக்கலாச்சார முறைகள் பூச்சிக்கொல்லிகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. "பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டும், குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் கொண்டிருந்த" ஒருங்கிணைந்த பூச்சிமேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை, ஏனென்றால் கொள்கைகள் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தின என்பதோடு IPM வலுவான அறிவு கொண்டதாக இருந்தது. இருப்பினும் "பசுமைப் புரட்சி" ஆசியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அரிசி விளைச்சலை அதிகரித்துள்ளது.

விதைகள்

மகசூல் அதிகரிப்பு கடந்த 15–20 ஆண்டுகளில் ஏற்படவே இல்லை. அரிசிக்கான மரபணு மகசூல் திறன் 1966 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கவில்லை, மக்காச்சோளத்திற்கான மகசூலை கடந்த 35 ஆண்டுகளில் சற்றே அதிகரிக்கச் செய்துள்ளது. மூலிகை தடுப்புத் திறனுள்ள களைகளை உருவாவதற்கு ஒன்று அல்லது இரண்டு பத்தாண்டுகள் ஆனது, பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் பூச்சிகள் உருவாவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆனது. பயிர் சுழற்சி எதிர்ப்புத்திறன்களை தடுக்க உதவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விவசாய கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் புதிய உயிரினங்களும் புதிய விவசாய முறைகளும் உருவாவதற்கு வழிவகுத்துள்ளன. 

உற்பத்தித் திறன்

2005 ஆம் ஆண்டு சீனாவின் விவசாய உற்பத்தி உலகிலேயே பெரியதாக இருந்தது. உலக வங்கியின் கூற்றுப்படிஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உலகின் ஆறில் ஒரு பகுதி பங்கை சீனா பெற்றிருந்தது. விவசாயத்தின் மொத்த காரணி உற்பத்தித்திறனை பொருளாதாரவியலாளர்கள்அளவிட்டுள்ளனர், இந்த அளவீட்டின்படி அமெரிக்க விவசாயம் 1948 ஆம் ஆண்டு இருந்ததைவிட அதிக உற்பத்தித் திறனைக் கொண்டு ஏறத்தாழ 2.6 மடங்கு அதிகரித்திருந்தது. 

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் 90 சதவிகித தானிய ஏற்றுமதியை வழங்கின. 

இந்தியாவில் பசுமைப் புரட்சி

இந்தியா விடுதலை அடைந்தபோது அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.அதிலும் அவர்களின் துண்டு நிலங்களும் ஒரே இடத்தில் இருக்காமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி அறிந்திருந்தவர்களிடம் அவற்றை வாங்கிப் பயன்படுத்த போதிய பணம் இல்லை.வானம் பார்த்த விவசாயம் .வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது.நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன.மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

1. தீவிர விவசாய மாவட்டத்திட்டம் (Intensive Agricultural District Programme - IADP)
2. அமோக மகசூல் தரும் பயிர் வகைகள் (High Yielding Varieties Programme- HYVP)
3. பாசனத் திட்டங்கள் மற்றும் தண்ணீர் மேலாண்மை
4. செயற்கை உர உற்பத்தி
5. பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் (Pesticides and Chemicals)
6. தேசிய விவசாயக் கொள்கை - 2000

தீவிளைவுகள்

பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாகநீரிழிவு, புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது. 

“சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.”வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.

Tuesday, 23 July 2013

வழக்கறிஞர் லில்லி தாமசுக்கு விருது

குற்றவாளிகளாக உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் குறித்த, சுப்ரீம் கோர்ட்டின், மகத்தான தீர்ப்பு வெளிவரக் காரணமாக விளங்கிய, கேரள வழக்கறிஞர் லில்லி தாமசுக்கு, திருச்சூர் இந்திய வழக்கறிஞர்கள் சபை விருது வழங்க உள்ளது.

‘ஜனநாயக நாடான இந்தியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, 2005ல், வழக்கறிஞர் லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் இறுதியில், ‘வழக்குகளில் சிக்குவோர், விசாரணை கமிஷன் மூலம், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து, தகுதி நீக்கம் செய்யப்படுவர்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் மூலம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், குற்றவாளிகள் உறுப்பினர்களாகச் சேர்வது, இனி குறையும் என்பதால், தீர்ப்பு வெளிவரக் காரணமாக விளங்கிய லில்லி தாமசை கவுரவித்து, தங்க மெடல் வழங்க, திருச்சூர் இந்திய வழக்கறிஞர்கள் சபை முடிவு செய்துள்ளது.

இதற்கான விழா, சுதந்திர தினத்தன்று, டில்லி, இந்திய வழக்கறிஞர்கள் சபையில் நடக்க உள்ளது.

Saturday, 20 July 2013

பொது அறிவு

தமிழக பல்கலைக்கழகங்கள்:

1.   சென்னை பல்கலைக்கழகம் – சென்னை (1857)
2.   அண்ணாமலை பல்கலைக்கழகம் – சிதம்பரம் (1929)
3.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை (1966)
4.   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1971)
5.   காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – திண்டுக்கல் (1976)
6.   அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978)
7.   தமிழ் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (1981)
8.   பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1982)
9.   பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (1982)
10. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல் (1984)
11. அழகப்பா பல்கலைக்கழகம் – காரக்குடி (1985)
12. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – சென்னை (1987)
13. அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர் (1988)
14. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – சென்னை (1989)
15. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (1990)
16.  தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் – சென்னை (1997)
17. பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997)
18. தமிழ் இணைய கல்விக்கழகம் - --- (2001)
19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர் (2002)
20. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002)
21. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை (2005)
22. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (2007)
23. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – சென்னை (2007)
24. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (2007)
25. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (2007)
26. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (2007)
27. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
28. மத்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
29. மத்திய பல்கலைக்கழகம் – திருவாரூர் (2009)
30. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் – மதுரை (2010)
 
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்:

1.   தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) – திருச்சி
2.   இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) – சென்னை
3.   மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) – சென்னை
4.   தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
5.   மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் – சென்னை
6.   தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) – சென்னை
7.   மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) – காரைக்குடி
8.   காடு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்
9.   சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர்
10. மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம் – மண்டபம் கேம்ப்
11. இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) – திருச்சி (2011)

Monday, 15 July 2013

குரூப் - 4 : 5,500 இடங்களுக்கு 16.13 லட்சம் பேர் போட்டி

குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, 16.13 லட்சம் பேர், ஆன்-லைன் வழியில் விண்ணப் பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு, 290 பேர், முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு தேர்வாணைய தலைவர் நவநீத கிருஷ்ணன், நேற்று மாலை செய்தியாளர்களிடம்,  ‘’அரசுத் துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்ப வேண்டும்' என, முதல்வர் உத்தர விட்டுள்ளார். அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,566 குரூப் - 4 பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. 

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகியோர், இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றிரவு, 11:59 மணி (நேற்றிரவு) வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவித்திருந்தோம். ஜூன், 14ம் தேதி முதல் இன்று மாலை, 4:00 மணி வரை, 16.13 லட்சம் பேர், ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வாணையம், இதுவரை நடத்திய தேர்வுகளில், இதுவே, மிகப்பெரிய தேர்வாக அமைந்துள்ளது. இத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, தேர்வாணையத்தின் மீது, தேர்வர்கள் வைத்துள்ள நம்பிக் கையை பிரதிபலிக்கிறது.தேர்வர்களின் நம்பிக்கை, வீண் போகாது. அதிக தேர்வர்கள் விண்ணப்பித்திருப்பது, எங்களுக்கு, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 244 மையங்களில், போட்டித்தேர்வு நடக்கிறது.
 1,000த்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்கும் மையங்களில், வீடியோ பதிவு செய்யப் படும். பாடத்திட்டத்தை பின்பற்றி, தேர்வர்கள், நன்றாக படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். 5,566 இடங்களுக்கு, 16.13 லட்சம் பேர் போட்டி போடுவதால், இதிலிருந்து, திறமையான தேர்வர்கள் தான், வெற்றி பெற முடியும். எனவே, அரசுத் துறைகளுக்கு, நல்ல பணியாளர்கள் கிடைப்பர்.

தேர்வு நேர்மையாகவும், தவறுகளுக்கு இடமளிக்காத வகையிலும் நடக்கும். தேர்வு குறித்து, தேர்வர்கள், அச்சம் அடைய தேவையில்லை. யாரையும் அணுக தேவையில்லை. யாரையும், சிபாரிசு பிடிக்க வேண்டாம்.தேர்வர்கள், தங்களுக்கு ஏதாவது சந்தேகம் எனில், கட்டணம் இல்லாத தொலைபேசி, 1800 425 1002ல் தொடர்புகொண்டு, விவரங்களை அறியலாம். மேலும், 044 - 2533 2855, 044 - 2533 2833 ஆகிய தொலைபேசி எண்களிலும், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது, தேர்வாணைய செயலர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, ஆகியோர் உடனடிருந்தனர்.
கடந்த 2011, பிப்ரவரியில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வை, 12 லட்சம் பேர் எழுதியதே, தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில், பெரிய தேர்வாக இருந்தது. தற்போது, அதையும் மிஞ்சி, 16.13 லட்சம் பேர் எழுத உள்ளனர். அதன்படி, ஒரு இடத்திற்கு, 290 பேர், முட்டிமோதும் நிலை உருவாகி உள்ளது. முறையாக, கடுமையாக படிப்பவர் மட்டுமே, தேர்வில் வெற்றி பெற முடியும்.

One of last ever telegrams goes to Rahul Gandhi


More than 20,000 telegrams are estimated to have been booked on the day the country bid adieu to the 163-year-old telegram service, with one of the last messages booked for Congress vice-president Rahul Gandhi.

The telegram to Mr. Gandhi was sent just before the service closed at 11.45 p.m. on Sunday at the Central Telegraph Office (CTO) in New Delhi. The Gandhi family scion was wished “success and happiness in life” and “glories of greatman of the past.”

Hundreds crammed into 75 telegram offices in the country to send souvenir messages before the service was permanently shut down.

Known popularly as ‘taar’ or wire, the telegram service, which provided millions with a fast and reliable mode of communication, closed because of mounting financial losses and becoming redundant in an era of mobile phones and Internet. “Around 20,000 telegrams are estimated to have been booked and 12,568 were despatched by afternoon. Last telegram was for Rahul Gandhi before computer finally closed. Maximum bookings of over 11,000 are estimated to have been done in Mumbai alone,” a BSNL spokesperson said. On average, 5,000 telegrams were sent daily.

BSNL, which was given the charge of telegraph after the latter was separated from Department of Posts in 2002, cancelled leave and increased staff at all telegram offices over weekend to cater to the last day rush.

Sunday, 14 July 2013

குரூப் 4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: பதிவுக்கு நாளை கடைசி நாள்

"குரூப் 4' தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். ஏற்கனவே, ஏழு லட்சம் பேர் வரை பதிவு செய்திருப்பதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, "குரூப் 4' நிலையில், வரும் ஆகஸ்ட், 25ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், விண்ணப்பிக்கும் தேதி துவங்கிய, ஜூன், 15ம் தேதியில் இருந்து, ஒவ்வொரு நாளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதன் காரணமாக, இதுவரை, ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வாணைய (www.tnpsc.gov.in) இணையதளத்தில் பதிவு செய்ய, நாளை கடைசி நாள். நாளை மாலைக்குள், பதிவு செய்துவிட வேண்டும். தேர்வு கட்டணத்தை செலுத்த, 17ம் தேதி கடைசி நாள்.

அனுமதி மறுப்பு:

அரசு துறைகளில் பணியாற்றுபவர்களும், வழக்கமாக, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பர். உயரிய பதவிகளில் சேரவும், பதவி உயர்வு பெறவும், இதுபோன்ற தேர்வுகளை எழுதுகின்றனர். பணிபுரியும் துறை அலுவலரின் அனுமதியுடன், போட்டித் தேர்வை எழுதலாம். அந்த வகையில், காவல் துறையில், "கான்ஸ்டபிள்'களாக இருக்கும் போலீசார், "குரூப் 4' மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த முறை, சென்னையில், "குரூப் 4' தேர்வை எழுத, துறை அதிகாரிகள், என்.ஓ.சி., (தடையின்மை சான்று) வழங்க மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது பெறும் சம்பளத்தைவிட, கூடுதல் சம்பளம் பெறும் பணி என்றால், தேர்வை எழுத, அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அந்த வகையில், போலீசார் சம்பளத்தைவிட, "குரூப் 4' வேலையில், 500 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, அனுமதித்திருக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர்.

போலீஸ் பணி, கடுமையாகவும், ஓய்வின்றி, தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாலும், மன உளைச்சலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதுபோன்ற நிலையை தவிர்த்து, நிம்மதியாக வேலை பார்க்கலாம் என, கருதி, "குரூப் 4' தேர்வுக்கு, அதிகளவில் விண்ணப்பிக்கின்றனர். தேர்வு பெற்றால், போலீஸ் வேலையை உதறிவிட்டு, இளநிலை உதவியாளராகவோ, தட்டச்சர்களாகவோ சென்று விடுகின்றனர். இந்த முறை, அதிகாரிகள் என்.ஓ.சி., தராததால், விண்ணப்பிக்க முடியவில்லை என, போலீசார் தெரிவிக்கின்றனர். நாளை மாலையுடன், கெடு முடிவதால், உடனடியாக, என்.ஓ.சி., வழங்கி, தேர்வெழுத, அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். 

Telegram no more STOP 100 STOP

The queue grew longer as the day wore on outside the Central Telegraph Office in the city that gave birth to the telegram service in India about 163 years ago.
The rush of people wanting to live the last moments of a facility sliding, by the minute, into history continued well into the late evening hours of Sunday. The office “was not expected to close for the day before midnight by when the numbers could have touched 350,” said chief superintendent, Subrata Kumar Das. Only a fraction of the employees was present to serve those choosing to send a telegram on its final day of existence. This was the result of a mass protest against the decision to terminate the services.
For customers using the service “on this historical day,” as one put it, the messages sent were the stuff that memories are made of. But the numerical shortcuts for set occasions — 16 was for “May heaven’s choicest blessings be showered on the young couple” and 100 for “Our deepest condolences” — were not of much use on Sunday. There was no code that stood for the telegram’s own demise.
“The day they stopped the telegram. One of the last ones to be sent. Keep it well.” This is what Aman Malik, in his twenties, wrote in what was his first telegram to his grandmother Naseem Malik in Agra.
“Today is the last day. I can tell you how much I love you through the telegram,” Kajari Bhattacharya said in another — meant for his two-year-old daughter in the city.
Septuagenarian Santosh Ghosh, who has done extensive research on the telegram service, does not, however, look at July 14, 2013 as the day the telegram died. “It will live on though in another form — a part of a memory….What is interesting about the telegram is how a mode a communication is so intrinsically associated with our history. Like our history, the memories of the telegram need to be cherished,” he said.
Mr. Ghosh’s book, The Sepoy Mutiny From Telegram Messages, is a historical account of India’s First War of Independence through the telegraph messages sent between 1857 and 1858.
“It was Sir William Brooke O’Shaughnessy, a physician at the Calcutta Medical College, who went to Lord Dalhousie and spoke about the necessity of telegram services in 1848. The work to lay telegraph lines started in November 1850 between Alipore Telecom Factory in the city and the Diamond Harbour Post Office,” he said.
The CTO building was earlier a Red Cross hospital and was converted to a telegraph office in 1906. Sitting in his office there, surrounded by equipment used to send telegrams in the past, is Mr. Das.
“True that this mode of communication has lost its economic viability; but the telegram had its undeniable advantage too – that of speed. The queues outside the counter have dwindled with time; the one today comprises those who will become a part of history,” he said.
“It is like the end of an era. But we always knew the day will come,” said Gour Chakraborty, who has been collecting telegrams over the past few decades and was one of those to have queued up. “In a few years from now, like philately is for stamps, the study and collection of telegrams would emerge as a distinct sphere of interest”, he added. He shot off six messages. “The contents are not as important as the date they are being sent on.”

Saturday, 13 July 2013

பொது அறிவு

1. தமிழ்நாட்டில் 17, 000 ஹெக்டே பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுகிறது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

2. தமிழகம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் 9-ஆவது இடத்திலும் உள்ளது.

3. கடல் மீன் பிடித்தலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4. உயிரி வளர்ப்பு முறைகள்:
1. வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2. மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3. செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4. பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5. ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6. எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7. சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு
5. தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:
1. பைகாரா (நீலகிரி)
2. குந்தா (நீலகிரி)
3. மோயார் (நீலகிரி)
4. ஆழியார் (கோயம்புத்தூர்)
5. பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்)
6. சோலையார் (கோயம்புத்தூர்)
7. மேட்டூர் (சேலம்)
8. பாபநாசம் (திருநெல்வேலி)
9. கோதையார் (திருநெல்வேலி)
10. பெரியார் (மதுரை)
11. சுருளியார் (தேனி)

5. தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:
1. நெய்வேலி (கடலூர்)
2. மேட்டூர் (சேலம்)
3. எண்ணுர் (திருவள்ளூர்)
4. தூத்துக்குடி (தூத்துக்குடி)
5. ஜெயங்கொண்டான் (அரியலூர்)

6. தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:
கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
கூடங்குளம் (திருநெல்வேலி)

7. இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ்.  இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது.

8. பெரிய துறைமுகங்கள்:
சென்னை துறைமுகம்
எண்ணூர் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்

9. நடுத்தர துறைமுகம்: நாகப்பட்டினம்

10. சிறிய துறைமுகங்கள்:
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
கடலூர்
கொளச்சல்
காரைக்கால்
பாம்பன்
வாலிநொக்கம்

11. தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
சென்னை – சென்னை (தலைமை இடம்)
மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர் (தலைமை இடம்)
மத்திய மண்டலம் – திருச்சி (தலைமை இடம்)
தெற்கு மண்டலம் – மதுரை (தலைமை இடம்)

12. தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை – 12, 115

13. அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை – 3, 504

14. தமிழகத்தின் முதலாவது மனித வளர்ச்சி அறிக்கை (H.D.R.) கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

15. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் – பிப்ரவரி 9

Friday, 12 July 2013

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "குரூப் 4' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,"குரூப் 4' தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு மனுச்செய்துள்ள மனுதாரர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் ஜூலை 19ம் தேதிக்குள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பு ஜூலை 22 முதல் ஆக., 7 வரை மாலை 3.00 மணி முதல் 6,00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மனுதாரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம் என்று கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Monday, 8 July 2013

திண்டிவனம் வரை வீரபாண்டியன் ஆட்சி : எறையூர் கோவில் கல்வெட்டில் தகவல்

"எறையூரில், பழமை வாய்ந்த, சிதைந்த நிலையில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டில், திண்டிவனம் வரை, பாண்டியன் ஆட்சி நடந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது' என, கல்வெட்டு களப் பணியாளர்,வீரராகவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே, எறையூர் கிராமத்தில், சிவன் கோவில் ஒன்று சிதைந்துள்ளது. 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி, பிச்சைப்பிள்ளை என்பவர் அளித்த தகவலையடுத்து, விழுப்புரம், கல்வெட்டு களப்பணியாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர், ஆய்வு செய்தனர்.

கோவிலின் நிலைப்பாடுகள் குறித்து, கல்வெட்டு களப்பணியாளர் வீரராகவன் கூறியதாவது:பல ஆண்டுகளாக இக்கோவில், கவனிப்பாரின்றி கிடந்தது. சமீபத்தில், ஆன்மிகவாதிகள் ஒன்று கூடி, புதர் மற்றும் மண் மேட்டை அகற்றி, கோவிலை சீரமைத்தனர்.இதைத் தொடர்ந்து, கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்து வருகிறது. இந்த கோவிலுக்குள், கட்டட கற்கள் சரிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் உள்ளன.ஆய்வின் போது, கல்வெட்டு ஒன்றை மைப்படிவம் எடுத்து படித்ததில், இது, பாண்டியர் காலத்து கல்வெட்டு என, தெரியவந்தது.இக்கல்வெட்டு, மங்கல சொல்லுடன், ஸ்ரீஸ்வஸ்தி என, ஆரம்பமாகிறது. இது,மூன்று புவனத்துக்கும் சக்கரவர்த்தியான வீரபாண்டிய தேவரின், கி.பி., 1345 ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இந்த கோவிலில் உள்ள இறைவன், தவநெறி ஆளுடைய நாயனார் என்றும், இவ்வூர் இளநல்லூர் என்றும் கல்வெட்டு கூறுகிறது. அன்றைய இளநல்லூர், இன்றைய எறையூர் ஆக அழைக்கப்படுகிறது.இந்தக் கோவிலுக்கு கிழக்கே உள்ள மதகு, "மதுராந்தகன் மதகு' என்று அழைக்கப்பட்டு வந்தது. மேலும், மக்களிடம் இருந்து, வசூலிக்கும் வரிகள் மூலம், இந்த கோவிலில் வழிபாடுகள் செய்ததை, கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியன் கல்வெட்டுகள், தமிழகத்தில், விருத்தாசலம் அருகேவுள்ள, எறும்பூர், கடலூர் அருகே உள்ள திருவஹிந்திபுரம் வரை, கிடைத்து வந்ததை, வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.தற்போது, எறையூரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, இந்த கல்வெட்டு, வீரபாண்டியனின் ஆட்சி, திண்டிவனம் வரையிலும் இருந்ததற்கு சான்றாக உள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க, சிதைந்துள்ள, இக்கோவிலை, இப்பகுதி பக்தர்கள் வழிபட, இந்து அறநிலைய துறையும், தொல்லியல் துறையும், அரசிடம் நிதிப்பெற்று திருப்பணி செய்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif