குற்றவாளிகளாக உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் குறித்த, சுப்ரீம் கோர்ட்டின், மகத்தான தீர்ப்பு வெளிவரக் காரணமாக விளங்கிய, கேரள வழக்கறிஞர் லில்லி தாமசுக்கு, திருச்சூர் இந்திய வழக்கறிஞர்கள் சபை விருது வழங்க உள்ளது.
‘ஜனநாயக நாடான இந்தியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, 2005ல், வழக்கறிஞர் லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் இறுதியில், ‘வழக்குகளில் சிக்குவோர், விசாரணை கமிஷன் மூலம், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து, தகுதி நீக்கம் செய்யப்படுவர்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில், குற்றவாளிகள் உறுப்பினர்களாகச் சேர்வது, இனி குறையும் என்பதால், தீர்ப்பு வெளிவரக் காரணமாக விளங்கிய லில்லி தாமசை கவுரவித்து, தங்க மெடல் வழங்க, திருச்சூர் இந்திய வழக்கறிஞர்கள் சபை முடிவு செய்துள்ளது.
இதற்கான விழா, சுதந்திர தினத்தன்று, டில்லி, இந்திய வழக்கறிஞர்கள் சபையில் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment