1. தமிழ்நாட்டில் 17, 000 ஹெக்டே பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுகிறது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2. தமிழகம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் 9-ஆவது இடத்திலும் உள்ளது.
3. கடல் மீன் பிடித்தலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. உயிரி வளர்ப்பு முறைகள்:
1. வெர்மிகல்சர் – மண்புழு வளர்ப்பு
2. மோரிகல்சர் – மல்பெரிசெடி வளர்ப்பு
3. செரிகல்சர் – பட்டுப்புழு வளர்ப்பு
4. பிஸ்சி கல்சர் – மீன் வளர்ப்பு
5. ஆஸ்டெர் கல்சர் – சிப்பி வளர்ப்பு
6. எபிகல்சர் – தேனீ வளர்ப்பு
7. சில்வி கல்சர் – திட்டமிட்ட மரம் வளர்ப்பு
5. தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள்:
1. பைகாரா (நீலகிரி)
2. குந்தா (நீலகிரி)
3. மோயார் (நீலகிரி)
4. ஆழியார் (கோயம்புத்தூர்)
5. பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்)
6. சோலையார் (கோயம்புத்தூர்)
7. மேட்டூர் (சேலம்)
8. பாபநாசம் (திருநெல்வேலி)
9. கோதையார் (திருநெல்வேலி)
10. பெரியார் (மதுரை)
11. சுருளியார் (தேனி)
5. தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள்:
1. நெய்வேலி (கடலூர்)
2. மேட்டூர் (சேலம்)
3. எண்ணுர் (திருவள்ளூர்)
4. தூத்துக்குடி (தூத்துக்குடி)
5. ஜெயங்கொண்டான் (அரியலூர்)
6. தமிழகத்தின் அணுமின் நிலையங்கள்:
கல்பாக்கம் (காஞ்சிபுரம்)
கூடங்குளம் (திருநெல்வேலி)
7. இந்தியாவின் மிக நீண்டதூர ரயில் – விவேக் எக்ஸ்பிரஸ். இது உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில். இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட தூர ரயிலாக இருந்தது.
8. பெரிய துறைமுகங்கள்:
சென்னை துறைமுகம்
எண்ணூர் துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம்
9. நடுத்தர துறைமுகம்: நாகப்பட்டினம்
10. சிறிய துறைமுகங்கள்:
இராமேஸ்வரம்
கன்னியாகுமரி
கடலூர்
கொளச்சல்
காரைக்கால்
பாம்பன்
வாலிநொக்கம்
11. தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
சென்னை – சென்னை (தலைமை இடம்)
மேற்கு மண்டலம் – கோயம்புத்தூர் (தலைமை இடம்)
மத்திய மண்டலம் – திருச்சி (தலைமை இடம்)
தெற்கு மண்டலம் – மதுரை (தலைமை இடம்)
12. தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை – 12, 115
13. அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை – 3, 504
14. தமிழகத்தின் முதலாவது மனித வளர்ச்சி அறிக்கை (H.D.R.) கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
15. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் – பிப்ரவரி 9
No comments:
Post a Comment